முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மேகேதாது விவகாரம் சட்டமன்றப் பேரவையில் முதல்வர் கொண்டுவந்த தனித் தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது

மேகேதாதுவில் தடுப்பணைக் கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் சட்டமன்றப் பேரவையில் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு


காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஐ (எம்) பாஜக,  மமக, கொமதேக,  தேமுதிக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரித்துப் பேசினர். தமிழ்நாடு அனைத்துக் கட்சிகளும் சட்டசபையில் மேகதாது தடுப்பு அணை விவகாரத்தில் ஒருமித்த நிலையில் பேசியிருப்பது சிறப்பு ! 

தற்போது சட்டசபை நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்புகளாகக் காட்டப்பட்டு பெருவாரியான மக்களால் பார்க்கப்படுவதால், உணர்ச்சிகரமாகவே பேசுகிறார்கள்! எப்படியானாலும் நல்ல கருத்துக்கள் மக்களிடையே சென்றடைவது நல்லது,

காவிரி, முல்லைப் பேரியாறு , பாலாற்றுப் பிரச்சனைகளில் அண்டை மாநிலங்களுடனான நமது நீண்ட நெடிய முடிவில்லாத போராட்டங்கள், தீர்வை எட்ட முடியாத முட்டுக்கட்டை நிலை ஆகியவற்றுக்கு இரண்டு அம்சங்களே காரணமாகும்,

மாநிலக் கட்சிகள் தங்களை அந்த மண்ணின் மக்களுக்கான ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ளும் வாய்ப்பாக மட்டுமே ஆறுகள் சார்ந்த நீர் பிரச்சினையை அணுகுவது.

தேசியக் கண்ணோட்டத்துடன்  உண்மையான நீதியை நிலை நாட்டத் தகுதியற்ற மத்திய ஆட்சியாளர்கள் மற்றும் தேசியக் கட்சிகள் சார்பாக ஒரு உண்மை தெரிய வேண்டும் 

காவிரியில் 1972 ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநில அரசே நாம் எந்தக் கோரிக்கையும் வைக்காமல் அனுமதித்துக் கொண்டிருந்த தண்ணீரின் அளவானது ஓராண்டுக்கு 377 டி.எம்.சி! அந்த ஆண்டுக்கான மேட்டூரின் உபயோக அளவு 414 டி.எம்.சி என பதிவாகியுள்ளது. ஆனால், கர்நாடக மாநில அரசோ வெறும் 168 டி.எம்.சியைத் தான் பயன்படுத்திக் கொண்டிருந்தது!

1924 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அரசில் இருந்த காலத்தில் போட்ட ஒப்பந்தத்தை 50 ஆண்டுகள் கழித்து புதுப்பிக்க வேண்டிய இருந்த சூழ்நிலையில் கர்நாடகம் தமிழ்நாட்டிடம் வேண்டியதோ, 200 டி.எம்.சி தண்ணீர் வரை தாங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதே!


நாம் அந்த வேண்டுகோளை ஏற்றிருந்தால், அன்றைக்கு நம் மாநிலம் 350 டி.எம்.சி தண்ணீரை நிரந்தரமாக்கிக் கொண்டு, கர்நாடகத்தோடு நிரந்தர நட்பு பாராட்டியே இருந்திருக்கலாம்.

அப்போதய தமிழ்நாடு முதல்வராக இருந்த திமுகவின் தலைவர் மு..கருணாநிதி , ’’காவிரி நீர் என்பது எங்கள் உரிமை மற்றும் தன்மானம் சம்பந்தப்பட்டது. இதில் ஒரு சொட்டு நீரைக் கூட எங்கள் அரசாங்கம் விட்டுத் தராது’’ என்றார்.

இங்கு தான் தண்ணீர் பிரச்சினை என்பது மொழி மற்றும் இன உரிமைப் போராட்டமாக மாறியது. அது முதல் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும், பயனற்று உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற ஆணையம் என்னறெல்லாம் பல்லாண்டுகள் வரை நீடித்த போராட்டமானது. 1991 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி தண்ணீர் தான் எனத் தீர்ப்பளித்தது.

அதாவது, 377 டி.எம்.சி பெற்று வந்த தமிழ்நாடு வெறும் 205 டி.எம்.சி தண்ணீர் தான் என தீர்ப்பு கிடைத்தது.

அப்போது இந்த இடைக்காலத் தீர்ப்பை தங்களின் இமாலய சாதனையாகக் காட்டி, திமுக செய்த ஆர்ப்பரிப்புகள் கர்நாடகத்தில் எதிர்வினையாற்றி, அவர்கள் மேல் முறையீட்டுகுச் சென்று இறுதித் தீர்ப்பில் குறைத்து தமிழ்நாட்டுக்கு 177 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும்படி செய்துவிட்டனர். 

இப்போது அந்த 177 டி.எம்.சியைக் கூட கர்நாடகம் தமிழ்நாட்டுக்குத் தருவதில்லை…என்பது சோகத்திலும் சோகம்.

இடையில்  தமிழ்நாட்டில் எம்.ஜி ஆர் முதலமைச்சராக இருந்தது போது, அப்போதய கர்நாடகா மாநில முதல்வர் குண்டுராவ் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர். 1984 வரையிலும் கூட தமிழ்நாட்டிற்கு  கர்நாடகா தந்து கொண்டிருந்த தண்ணீர் 305 டி.எம்.சி. அப்போது குண்டுராவ் எம்.ஜீ.ஆரிடம், ''அண்ணே இப்ப 305 டி.எம்.சி தண்ணீர் உங்களுக்கு வந்து கொண்டுள்ளது. இதிலேயே நீங்கள் ஆண்டுக்கு 100 டி.எம்சிக்கு மேலே கடலில் வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இந்தத் தண்ணீர் அளவே உங்களுக்கு தாராளமானது. இதை அப்படியே ஒப்பந்தமாக்கிக் கொள்ளலாம். நீங்கள் கிடைக்கிற தண்ணீரை எவ்வளவுக்கு எவ்வளவு முழுமையாக பயன்படுத்த முடியுமோ பயன்படுத்திக்கொள்ள சிறிய தடுப்பணைகள், கதவணைகள் கட்டிக் கொள்ளுங்கள்'' என்று மன்றாடிக் கேட்டார்.

முதல்வர் எம்.ஜி.ஆர் அப்போதய பொதுப்பணித் துறையின் பொறியாளர்களை அழைத்துப் பேசினார். ''உண்மை தான்  நமக்கு 305 டி.எம்.சியை உத்திரவாதப்படுத்திக் கொள்வதில் தப்பில்லை. இந்த ஒப்பந்தமே 1974 ஆம் ஆணடில் கையெழுத்தாகி இருந்தால் 350 டி.எம்.சி தந்திருப்பார்கள் இப்போது நாம் ஒத்துக்கொள்ளாவிட்டால் கர்நாடகத்தின் பயிர் செய்யும் பரப்பளவு விரிந்து போவதற்கு ஏற்ப, வருங்காலத்தில் அவர்களுக்கு இன்னும் அதிகம் தண்ணீர் தேவைப்படலாம். அப்போது இன்றைக்கு தருவதாக ஒப்புக் கொண்டதைக் கூட நிச்சயமாத் தரமட்டார்கள். இது நல்ல வாய்ப்புத் தான். ஆனால், அரசியல் ரீதியான விளைவுகளை ஆலோசித்து நீங்கள் முடிவெடுங்கள்’’ என்றனர். அதிகாரிகள் 

முதல்வர் எம்.ஜி.ஆர் தன் அமைச்சரவை சகாக்களை அழைத்து விவரங்களைக் கூறினார். 


ஆனால் அமைச்சரவை சகாக்களோ, ''நல்ல வாய்ப்பு தான். இதோடு பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் , பிரச்சனைகள் முடிவதை திமுக தலைவர் மு.கருணாநிதி விரும்பமாட்டாரே. 'நாங்கள் 350 டி.எம்.சி தண்ணீருக்கே ஒத்துக் கொள்ளவில்லை. முதல்வர் எம்.ஜி.ஆர் 305 டிஎம்சிக்கு ஒத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு  துரோகம் செய்துவிட்டார்.முதல்வர் எம்.ஜி.ஆர் தமிழராக இருந்திருந்தால், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருப்பாரா?' எனக் கேட்பார். அந்த அரசியலை எதிர்கொள்வது தான் கடினம். நீங்கள் அதோடு காலியாகிடுவீங்க’’ என்றனர். முதல்வர் 

எம்.ஜி.ஆரும் பின்வாங்கிவிட்டார். திமுக தலைவர் மு.கருணாநிதியின் தமிழினவாத அரசியலால் தமிழ்நாடு இழந்ததில் முக்கியமானது காவிரி ஆறு அதன் நீர்! 

அதே முறையைத் தான் தற்போதும் மு. க.ஸ்டாலின், மற்றம் எதிர் கட்சி உதயநிதி காலத்திலும் திமுகவும் செய்கிறது…!

இவர்களுக்கு தமிழ்நாடு எவ்வளவு பாதிக்கப்பட்டாலும், தமிழர்கள் எவ்வளவு இழந்தாலும் ஒரு பொருட்டே இல்லை.  தங்களின் 'தமிழினப் பாதுகாவலர்கள்' எனற போலியான நிலைக்கு எல்லாவற்றையும் இழக்கச் செய்து கொண்டே இருப்பார்கள்! என்பது பழைய அரசியல் தலைவர்கள் மத்தியில் பேசவதை விபரம் அறிந்த நபர்கள் அறிவார்கள்.மேகதாது தடுப்பணை தமிழ்நாட்டிற்குள் காவிரி நீர் நுழையும் பிலிகுண்டுலுவிலிருந்து 4.5 கிலோமீட்டர் .முன்பாகவே ஆற்றை மறித்து 9,000 ஏக்​கர் பரப்பில் ரூபாய் .14,000 கோடியில் 67.16 டிஎம்சி கொள்​ளளவு.. 

காவிரி ஆறு இருபுறமும் பிரம்மாண்டமான பாறை மலைகளுக்கு இடையே ஒரு குறுகிய, மிக ஆழமான பள்ளத்தாக்கு  வழியாகப் பாய்கிறது. ஆடுகள் கூட இந்த மலையின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்குத் தாண்டிவிடலாம் என்பதால் தான் இதற்கு "மேகதாது" (ஆடு தாண்டுதல்) எனப் பெயர்பெற்றது

இந்த அணை கட்டப்பட்டு 67 டிஎம்சி தண்ணீர் தேங்கும் போது, சுமார் 13,000 ஏக்கர் பரப்பளவுள்ள அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும்..இதில் பெரும்பகுதி ""காவிரி வனவிலங்குகள் சரணாலயமும்" அதை ஒட்டியுள்ள அடர்ந்த காப்புக்காடுகளுமாகும்.

​ஒரு ஏக்கர்  அடர்ந்த காட்டில், முதிர்ந்த பெரிய,நடுத்தர மரங்கள் மற்றும் வளர்ந்து வரும் மரக்கன்றுகள் என அனைத்தும் தோராயமாக 100 முதல் 200 மரங்கள் வரை இருக்கும்.தோராயமாக 15 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான மரங்கள் வெட்டப்படவோ அல்லது நீரில் மூழ்கடிக்கப்படவோ வாய்ப்பு.

ஒரு காடு அழியும்போது அவற்றுடன் சேர்ந்து.​லட்சக்கணக்கான சிறு தாவரங்கள்: புதர்கள், மூலிகைகள், கொடிகள் மற்றும் சிறு செடிகள் அழியும்.

காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் மட்டுமே உள்ள சில அபூர்வ வகை மரங்கள், ராட்சத அணில்கள் மற்றும் ஆசிய யானைகளின் வலசைப் பாதைகள் முற்றிலும் அழியும்.

கர்நாடகாவின் காங்கிரஸ் கட்சியின் புதிய முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகேதாட்டு என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீரைக் கெடுக்க வேண்டும் என்ற வெறி, இன்று உங்களின் சொந்த மாநிலத்தின் கண்ணையே குத்தத் துடிக்கிறது. தமிழ்நாட்டைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு, கர்நாடகாவின் ஒட்டுமொத்தக் குடிநீர் ஆதாரத்திற்கும், பருவநிலைக்கும் நீங்களே கேடு நினைக்கத் துணிகிறீர்கள். 

13,000 ஏக்கர் அடர்ந்த காடுகளை அழித்து, சுமார் 20 லட்சம் மரங்களை வெட்டிவிட்டு அணை கட்டப் போகிறதாக பிரஸ்தாபம் கர்நாடகாவில் வாழும் சாமானிய மக்களுக்கும் புரியும் படியாக ஒரு எளிய உண்மையை உரக்கச் சொல்ல வேண்டிய தருணமிது.

காடுகளை அழித்துவிட்டு அணை கட்ட நினைப்பது, உயிரைக் கொன்றுவிட்டு உடலுக்கு ஆடை தைக்க நினைக்கும் பேதைமை. என பல தலைவர்கள் கூறும் நிலை,

மரங்கள் என்பவை வெறும் நிழல் தரும் குச்சிகள் அல்ல; அவை பூமியின் அடிவயிற்றில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி, காற்றில் ஈரப்பதமாக மாற்றி, வானத்தில் மிதக்கும் மேகங்களை "இங்கே வா... இங்கே வா..." என்று காந்தம் போல இழுத்து வந்து மழையாகப் பொழிய வைக்கும் ''இயற்கையின் உந்துபொறிகள்"" அந்த 20 லட்சம் மரங்களை நீங்கள் வேரோடு சாய்த்தால், அங்கே மேகங்கள் எப்படி வரும்? மழை எங்கிருந்து பெய்யும்?

நீங்கள் 9,000 கோடி ரூபாய் செலவில் சிமெண்ட்டையும், கம்பியையும் கொண்டு பிரம்மாண்டமாக ஒரு கான்கிரீட் சுவரைக் கட்டிவிடலாம். ஆனால், அந்த அணைக்குள் வந்து தேங்குவதற்குத் தண்ணீர் எங்கே ? 

மழை பெய்வதற்கான ஆதாரமான மரங்களை  வெட்டிச் சாய்த்துவிட்டு, காலிப் பாத்திரத்தைப் போன்ற ஒரு வெற்று அணையை அங்கே கட்டி என்ன செய்யப் போகிறீர்கள்? 

20 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டால், அடுத்த சில ஆண்டுகளில்:

 அந்தப் பிராந்தியத்தில் காற்றில் ஈரப்பதம் குறையும்.

 பூமியின் வெப்பம் கிடுகிடுவென உயரும்.

 மேகங்கள் மழையாகப் பொழியாமல் கர்நாடகாவைத் தாண்டி ஓடிவிடும்...

இதன் விளைவாக, மேகேதாது பகுதிக்கு அருகிலிருக்கும் உங்களது ""பெங்களூரு நகரம் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் பாலைவனமாக மாறும்."" தமிழ்நாட்டுக்காரன் கஷ்டப்பட வேண்டும் என்று நீங்கள் வெட்டிய குழிக்குள், முதலில் விழப்போவது கர்நாடக மக்கள் தான்!

இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 35-ன் படி, "வனவிலங்குகளின் நன்மைக்காகவும் மேம்பாட்டிற்காகவும் மட்டுமே" சரணாலய எல்லைக்குள் மாற்றங்களைச் செய்ய  முடியும். வணிக ரீதியான அல்லது குடிநீர் திட்டங்களுக்காக காடுகளை அழிப்பதை வாரியம்  மிகக் கடுமையாகவே அணுகும். நம் சட்டங்கள் அவ்வளவு எளிதாக அனுமதி வழங்கிவிடாது. மத்திய அரசு இதில் நல்ல நீதிபதியாக விளங்க வேணடிய தருணம்.

கர்நாடக மக்களே...காவிரி வனவிலங்கு சரணாலயம் என்பது ஆசிய யானைகளின் புகலிடம். 13,000 ஏக்கர் காடுகள் நீரில் மூழ்கினால், அங்கிருக்கும் ஆயிரக்கணக்கான யானைகளும் வனவிலங்குகளும் வாழ்விடத்தை இழந்து, உங்களின் கிராமங்களுக்குள்ளும், விளைநிலங்களுக்குள்ளும் புகுந்து பெரும் சேதத்தை விளைவிக்கும்...

 காடுகளை அழித்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்குப் போய்விடும். பெய்யும் அரைகுறை மழையும் மண்ணை அரித்துக்கொண்டு போய்விடுமே தவிர, உங்களின் கிணறுகளில் தண்ணீர் ஊறாது. சிவக்குமார் போல 

அரசியல்வாதிகள் இன்று வெற்றி பெற்று ஆட்சியில் இருப்பார்கள், நாளை தோற்றுப் போவார்கள். ஆனால், இயற்கையை அழித்தால் அதை மீண்டும் உருவாக்க யாராலும் முடியாது..

முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பிடிவாதம் காங்கிரஸ் பகுதிக்கு ஒரு நிலைப்பாடு என்பதைக் காட்டுகிறது கர்நாடக மற்றும் கேரளா ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தான் தமிழ்நாடு ஆட்சியில் கூடடணியாக உள்ளது மேகேதாது அணை பிடிவாதம் என்பது தமிழ்நாட்டிற்கு வைக்கும் செக் மேட் அல்ல; அது கர்நாடகாவின் தலையிலேயே நீங்களே இறக்கிக் கொள்ளும் இடி! நதிநீர் தேசத்தில் முழுவதும் டெல்டா பகுதி உரிமை தேசியம் பேசும் காங்கிரஸ், பாஜக இந்த நதிநீர் விஷயத்தில் தேசியம் பேச வேணடும், அதில் ஏன் பிரிவினை.

தமிழ்நாடு தனது மாற்று நீர் மேலாண்மைத் திட்டங்களாலும், கடல்நீரைச் சுத்திகரிப்பதன் மூலமும், சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலமும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் வலிமையைப் பெற்றுவிடும். நிச்சயம் பெறுவோம

டி.கே.சிவக்குமார் நதிகள் என்பவை இயற்கையின் வற்றாத கொடை; அவை எந்தவொரு தனிப்பட்ட மாநிலத்தின் அரசியல்வாதிக்கும் சொந்தமான சொத்து அல்ல. "மேகதாதுவைக் கட்டியே தீருவோம், தமிழ்நாட்டைப் பசியிலும் பட்டினியிலும் தள்ளுவோம்" என்று நீங்கள் சவால் விட்டால், அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு என்றோ தயாராகிவிட்டது. எங்கள் மண்ணில் எழும் நீர்   வீடு கட்டுவதற்காகக் கூரையைப் பிடுங்கி விறகாக்கும்" உங்களின் பேராசைக்கு, 20 லட்சம் மரங்களின் சாபமும், கோடி மக்களின் பசிப் பிணியும் உங்களின் அரசியல் வரலாற்றை ஒருபோதும் கர்நாடக முதல்வர் சிவக்குமாரை மன்னிக்காது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...