சென்னையில் லஞ்சப் புகாரை விசாரிக்கச் சென்ற ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலா,
சம்பந்தப்பட்ட லஞ்ச அலுவலரிடமே லஞ்சம் கேட்டு மிரட்டியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட துணைக் கண்காணிப்பாளர் ஜாய் தயாள் உடனடியாக நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் விஜிலன்ஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆட்சியில் முடங்கி இருந்த ஊழல் தடுப்புத்துறை தற்போது கடந்த ஒரு வாரத்தில் வாரிசு சான்றிதழ், வீட்டுமனை அளவீடு, பட்டா மாற்றம், நெல் கொள்முதல் பில், சோலார் பேனர் பரிந்துரை மற்றும் புதிய மின் இணைப்பு போன்ற பணிகளுக்காக பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கிய 7 ஊழல் அரசு பணியானர்களான அலுவலர்கள் கைதாகினர்.
லஞ்சம் வாங்கிய ஒரே வாரத்தில் 7 பேர் கைது, அதில் திருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் ஞானசேகர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சர்வேயர் செல்வராஜ், விழுப்புரம் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, திண்டுக்கல் பில் கிளர்க் சுமன்ராஜ், தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் அவரது உதவியாளர் சுப்பையா, கோயம்பத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கதிர்வேல், சென்னை மின்வாரிய வணிக ஆய்வாளர் ஜமாலுதீன் ஆகிய 7 அரசு பணியாளர்களான அலுவலர்களை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பொறி வைத்து லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்து கைது செய்தனர்.
மேலும், இதே காலத்தில் நடந்து வந்த 3 ஊழல் வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் விசாரணை முடிவில் குற்றவாளிகளுக்கு தண்டனையும் அபராதமும் பெற்றுத்தரப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிவ் அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில், சென்னையில் லஞ்சப் புகாரில் சம்பந்தப்பட்ட நபரை விசாரிக்கச் சென்ற இடத்தில், விசாரணை அலுவலர் ஆன ஆய்வாளர் லஞ்சம் கேட்டு மிரட்டிய நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த துணைக் கண்காணிப்பாளர் நீலகிரி மாவட்டத்திற்கு பணி மாற்றப்பட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த வருவாய் துறை அலுவலர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் அளிக்கப்பட்ட புகாரைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆய்வாளர் விமலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை , விசாரிக்கச் சென்ற ஆய்வாளர் விமலா, சம்பந்தப்பட்ட வருவாய் துறை அலுவலரிடமே லஞ்சம் வாங்கினாராம்.
அதாவது ஆய்வாளர் விமலா
தனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை லஞ்சமாகக் கொடுத்தால் இந்தப் புகாரிலிருந்து உங்களைக் காப்பாற்றி விடுகிறேன் என்றும், இல்லை யென்றால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அந்த அலுவலரை மிரட்டியிருக்கிறார்.
ஊழல் தடுப்பு ஆய்வாளரின் இந்த மிரட்டலால் அதிர்ச்சியடைந்த அந்த வருவாய் துறை அலுவலர் , அவருக்கு வேண்டிய உயர் காவல்துறை அதிகாரிகளை அணுகி புகார் அளித்தார். காவல் துறையில் இருக்கும் இந்த ஊழல் நபரைப் பிடிக்க, உடனடியாக ஐ.ஜி துரைகுமார் தலைமையில் ஒரு தனியாக உத்தரவிடப்பட்ட விசாரணையில், ஆய்வாளர் விமலா வருவாய் துறை அலுவலரை மிரட்டி லஞ்சம் கேட்டது ஆதாரங்களுடன் நிரூபணமானது.
விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநர் அருண் நடவடிக்கை எடுத்து லஞ்சம் கேட்டு துறையின் பெயரைக் கெடுத்து ஊழல் செய்த ஆயவாளர் விமலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். சென்னை சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது விமலா பணத்தை மறைத்து வைத்ததாக (Planting cash) மற்றொரு புதிய புகாரும் இவர் மீது எழுந்தது.
மேலும், இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் ஆய்வாளருக்கு ஆதரவாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாக துணைக் கண்காணிப்பாளர் ஜாய் தயாள் மீதும் நடவடிக்கையாக அவர் சென்னை பணியில் இருந்து உடனடியாக நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது போல பல இடங்களில் நடந்தாலும் இது சில விவகாரம் மட்டுமே வெளிவருகிறது 100 மேற்பட்ட புகார் மீது நடவடிக்கை பாய்வதில்லை பொறிவைத்து பிடிக்கும் விவகாரம் மட்டுமே லஞ்ச ஊழல் நபர்கள் சிக்குகின்றனர் புகாரை விசாரிக்கச் சென்ற ஆய்வாளர் லஞ்சம் கேட்டு பணிடை நீக்கம் ஆன சம்பவம் காவல்துறையில் லஞ்சம் பெறும் பலர் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பல புகார்கள் உரிய விசாரணை நடத்தாமல் இதுபோல மூடப்பட்ட நிகழ்வுகள் குறித்து உரிய விசாரணை நடத்தினால் இன்னும் பலர் சிக்கலாம். தவெக அரசு நடவடிக்கை எடுத்தால்நல்லது,




கருத்துகள்