மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை மீது பூர்வீக தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளின் உத்தரவிற்கு எதிராக தமிழ்நாடு புதியதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாகத் தகவல்,
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், விசாரணைக்கு வந்த போது இன்று மனுதாரர் ராம ரவிக்குமார் சார்பில், 'புதிய அரசு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், அவமதிப்பு வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே என்க் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஜூன் 22 ல் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவை நிறைவேற்ற முடியாது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த நிலையில் நேற்று 21-06-2026) காலை 11-00 மணி அளவில் மதுரை பழங்காநத்தம் டவுண்டானா அருகில் இந்துமக்கள்கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஹிந்து மக்கள் கட்சியின் மதுரை மாட்டத்தலைவர் சோலைகண்ணன் தலைமையில் தீப உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன்சம்பத் மற்றும் ,தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் புலிகொடிவேந்தன் K.C.திருமாறன் ஜி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக மதுரை முனிச்சாலை பகுதியில் இதே நாளில் 2005 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட வீரத்தியாகி A.R.காளிதாஸின் 21-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கும்,தீபம் ஏற்றுவதற்காக தன்னுயிரை தீயை வைத்து மாய்த்து கொண்ட தீபப்போராளி பூர்ணசந்திரனின் திருஉருவப் படத்திற்கும் மலர் அஞ்சலியும் வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.
மேலும் சிவசேனாவின் மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ், இந்துமக்கள்கட்சி மாநில துணைத்தலைவர் பாம்பன் பாலன்ஜி, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தளபதி மாநிலப் பொருப்பாளர் மருது ஆனந்த், ஹிந்து மக்கள் கட்சியின் தென்மாவட்டத்தலைவர் கிருஷ்ணன், ஹனுமன் சேனா மாநிலச் செயலாளர் இராமலிங்கம்,, ஹிந்துமக்கள்கட்சி மாநிலத் தொண்டரணிச் செயலாளர் அண்ணாத்துரை, ஹிந்துமக்கள்கட்சி மதுரை மாநகரச் செயலாளர் கோவில் செல்வம், ஹிந்துமக்கள்கட்சி மதுரை மாவட்டக் கொள்கை பரப்புச் செயலாளர் ஸ்ரீராம்ஜி மற்றும் ஹிந்து மக்கள் கட்சி, தென்னிந்திய பார்வர்ட் பிளாக், அனுமன் சேனா நிர்வாகிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் மேற்கண்ட தீப உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் பத்து கோரிக்கைகள் வைக்கப்ட்ட நிலையில் இன்று திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான உத்தரவை உடனடியாக செயல்படுத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த இராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். அப்போது ராம ரவிக்குமார் சார்பில், 'புதிய அரசு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், அவமதிப்பு வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே என்று கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு (ஜூன் 22 ல் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர், உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஏற்கனவே மன்னிப்புக் கேட்டனர்.
கடந்த ஜூன் மாதம் 4-ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது. தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து, கோவில் மற்றும் தர்ஹா தரப்பு, மக்கள் தரப்பு ஆகியோரை இணைத்து ஏன் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். இதன் இறுதி முடிவு உச்சநீதிமன்றம் வழங்கப்போகும் இறுதி முடிவில் தான் தீப வெளிச்சம் வரவேண்டும், அது விரைவில் வர ஆன்மீகம் சார்ந்த அரசியல் தலைவர்கள் முயல வேண்டும்.











கருத்துகள்