முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிர்கட்சித் தலைவர் திமுகவின் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தக்க பதிலடி.

எதிர்கட்சித் தலைவர் திமுகவின் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தக்க பதிலடி.


சட்டப்பேரவையில் அப்பா எங்கே எனக் கேட்டு சிறு கதை சொன்ன முதலமைச்சர் ரசித்துச் சிரித்த எடப்பாடி கே. பழனிசாமி. தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையின் சபாநாயகர் ஜெ.சி.டி.பிரபாகர் தவிர பொறுப்பை வேறு யாருக்காவது கொடுத்திருந்தால் என்ன நிலைமை என்பது தெரியாது, ஜேசிடி பிரபாகர் சிறப்பாகவே நடத்துகிறார்.

மேகதாது தடுப்பணை விவகாரத்தில் சட்டமன்றப் பேரவை தீர்மானம் நிறைவேற்றிக் கொண்டிருந்த போது எதிர்க்கட்சித் தலைவர் ஒரு திருத்தம் சொல்லி அதை இணைக்கச் சொல்கிறார். முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் ஒப்புதலோடு அதை இணைத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தீர்மானம் நிறைவேற்றுகிறார்.

குரல் வாக்கெடுப்புக்குப்பின்னே தீர்மானம் நிறைவேறுகிறது. மறுநாள், "புதிய திருத்தம் குறித்து எங்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்" என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை தருகிறார். அதன் பின்னே மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகமும், "புதிய திருத்தம், ஏற்புடையதல்ல" என்கிறார். அதற்குப் பின்னர் பாமகவும் அதே கருத்தில் பேசுகிறது.



இந்த நிலையில்தான் இரண்டாம் நாள் கூட்டத் தொடரான நேற்று மீண்டும் அவை கூடவே அதே பிரச்சனை வலுவானது.

"அவையில் திருத்தப்பட்ட தீர்மானம் என புதிய தீர்மானத்தை நிறைவேற்றி முடிக்கும் வரை கருத்துச் சொல்லாமலிருந்து விட்டு இப்போது கருத்துச் சொல்வதோ, மேகதாது தடுப்பணை விவகாரம் குறித்துப் பேச முற்படுவதோ ஏற்புடையதல்ல. உறுதியாக இதை அனுமதிக்க முடியாது" என சபாநாயகர் சொல்லும் போது திமுக உறுப்பினர்கள் முகம் மலர்ச்சி

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தொடர்ச்சியாக இது குறித்து பேச அனுமதிக்க முடியாதென்று சொல்லச் சொல்ல, தொடர்ந்து எதிர்தரப்பில் பேச அனுமதி கோரிய குரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தது. கொஞ்சமும் பொறுமை இழக்கவில்லை, சபாநாயகர். தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் சபாநாயகர் குரலுக்கு மதிப்பளிக்க வில்லையென்றால், அவைக்காவலர்கள் உள்ளே நுழைந்து மன்ற உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கு உத்தரவிடுவது தான் கடந்தகால வரலாறு. அதை இப்போது பார்க்க முடியவில்லை. உறுப்பினர்களே, "நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்" என்று சொல்லிவிட்டு வெளியேற, "அது உங்கள் விருப்பம்" என்று அதே புன்னகை மாறாத முகத்துடன் வழிவிட்ட காட்சி, முந்தைய கால அவைக்கூட்டத் தொடர்களை நினைவூட்டியது.


பெரும்பாலான வேறு துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா எழுந்தெழுந்து - குறிப்புகள் ஏதும் இல்லாமல் பதிலளித்தது, அவரது பலதுறை சார்ந்த அனுபவ ஆர்வத்தைக் 'காட்டியது. அப்படி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அடிக்கடி எழுந்து பதிலளித்ததை யாரும் கண்ணசைவு மூலம்கூட தடுக்காததில் நேர்த்தி இருந்தது. சொல்லிய கருத்தில் சிறுபிழை இருந்ததை உடனே திருத்தி, தாம் சொன்னதில் இந்த இடத்தில் பிழை என்று சொல்லி தவறை ஒப்புக் கொள்ளும் பக்குவமும் ஆதவ் அர்ஜூனா அவையழகை மேலும் கூட்டியிருக்கிறது. அதே வேளையில் பிற துறைகள் சார்ந்த கேள்விகளுக்கும் ஆதவ் அர்ஜூனாவே எழுந்தெழுந்து பதில் அளித்தது தான் பலருக்கு புரியவில்லை. ஆனால் இந்த செயல் சற்று அதிகம் போல் தோணுகிறது. குறிப்பாய், சபாநாயகர் தலையிட்டுச் சொல்லியும் கூட, "திமுக ஆட்சியில் சட்டசபையில் ஆளுநர் இருக்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை" என்ற கருத்தை திரும்பத் திரும்பச் சொல்லி; தவறான ஒன்றை உண்மையாக்க முயன்ற விதம் தேவையற்ற ஒன்று.

 சபாநாயகரை தமிழ்நாட்டு அரசுக்கு அளித்த முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் சி விஜய் அவர்களுக்கு 

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தமிழ்நாடு சட்டமன்றத்தின் 17-வது கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஒரு போர்க்களமாக மாறியிருந்தது. எதிர்க்கட்சிகளின் கேள்விக் கணைகள், குற்றச்சாட்டுகள், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்களின் சீண்டல்கள் நிறைந்த அந்த சூழலில், முதலமைச்சர் ஜோசப் விஜய் எழுந்து பதிலுரை ஆற்றிய போது, அவை முழுவதும் ஒரு புதிய ஆற்றலால் நிரம்பியது. இது வெறும் பதிலுரை அல்ல; தனது கட்சியை 'நடிகர் கட்சி' என்று கேலி செய்தவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு தெளிவான விளக்கம், எச்சரிக்கை, மக்களின் ஆணையை நம்பி நின்ற ஒரு தலைவரின் உறுதிப்பாடு.

சி. ஜோசப் விஜய் தனது உரையில் முதலில் தனது கட்சியின் தேர்தல் வெற்றியை நினைவுபடுத்தினார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து 35 சதவீத வாக்குகளைப் பெற்று 108 இடங்களில் வென்றது, அதன் மூலம் திமுக-அதிமுக இரட்டை ஆதிக்கத்தை முறியடித்தது என்பதை வலியுறுத்தினார். “பலர் எங்களை நடிகர் கட்சி என்று கேலி செய்தனர், ஆனால் மக்கள் எங்களை நம்பினார்கள்” என்ற அவரது வார்த்தைகள், சினிமா பின்னணியிலிருந்து அரசியலுக்கு வந்த ஒருவரின் தன்னம்பிக்கையைப் பிரதிபலித்தன. இந்தப் புள்ளி எதிர்க்கட்சிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது, ஏனெனில் அவர்கள் தொடர்ந்து தவெகவை சிறுபான்மை அரசென முத்திரை குத்த முயன்றனர்.

உரையின் சுவாரசியமான பகுதி, எதிர்க்கட்சிகளை நோக்கி அவர் சொன்ன “குட்டி கதை” பாணி விமர்சனம். அரசியல் எதிரிகளை நக்கலாக, ஆனால் தெளிவாகச் சாடிய இந்த பகுதி, அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், கரூர் ஸ்டாம்பீடு சம்பவத்தில் 41 உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்த போது அவரது குரல் உணர்ச்சிவசப்பட்டது. இது ஒரு தலைவரின் மனிதாபிமானத்தை காட்டியது. மருத்துவக் கல்வி NEET தேர்வுக்கு எதிர்ப்பு, தமிழும் ஆங்கிலமும் என இரு மொழிக் கொள்கையின் ஆதரவு, மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதியில் உறுதி ஆகியவை, காலஞ்சென்ற முன்னால் முதல்வர் ஜெ. ஜெயலலிதா போல அவரது உரையின் முக்கிய அம்சங்களாக இருந்தன. “நாங்கள் யாருடைய B-டீமும் இல்லை, மக்களின் அணி” என்ற அவரது வார்த்தைப் பிரயோகம், தவெகவின் சுயமரியாதையை உறுதிப்படுத்தியது.

ஆனால், இந்த உரையில் விமர்சனத்திற்குரிய சில பகுதிகளும் இல்லாமலில்லை. TASMAC ஊழல், கட்சி நிதி தொடர்பான குற்றச்சாட்டுகளை திமுக மீது சுமத்தியபோது அவை திமுகவினரால் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது உண்மைதான். ஆனால், அரசியல் எதிரிகளைத் தாக்குவதில் செலவழித்த நேரத்தை விட, அரசின் குறுகிய கால சாதனைகள் அல்லது உடனடித் திட்டங்கள் பற்றி அதிக விவரங்கள் கொடுத்திருந்தால் மக்களுக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். சட்டம் ஒழுங்கு, மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு போன்ற எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விரிவான புள்ளிவிவர அடிப்படையிலான பதில்களை அவர் கொடுத்திருந்தாலும், சில இடங்களில் உணர்ச்சி மேலோங்கியிருந்தது. மேலும், கூட்டணி அரசாக இருந்தாலும், சிறுபான்மை அரசு என்ற முத்திரையை முழுமையாக மறுக்கும் வகையில் எண்ணிக்கை அடிப்படையிலான விளக்கங்கள் தேவைப்பட்டன.

ஒட்டுமொத்தமாக இந்தப் பதிலுரை தமிழ்நாட்டு அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. சினிமா உலகிலிருந்து வந்த ஒருவர், மக்களின் நம்பிக்கையால் முதலமைச்சர் பதவியை ஏற்று, சட்டமன்றத்தில் தனது முதல் முழு உரையை அனல் பறக்க வைத்திருக்கிறார். “எந்தச் சக்தியாலும் இந்த அரசை அசைக்க முடியாது” என்ற அவரது உறுதி, எதிர்கால அரசியல் போக்குகளுக்கு ஒரு சமிக்ஞையாக அமைந்துள்ளது. மக்கள் ஆதரவோடு தொடங்கிய இந்தப் பயணம், ஊழலற்ற, சமூக நீதி நிறைந்த, மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் ஆட்சியாகத் தொடரும் என்பது தெரிகிறது, தற்போது முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் இந்த உரை அரசியல் விவாதங்களுக்கு புதிய உயிர் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. அதில் பார்ட்டி ஃபண்ட் என்பது, முழுக்க முழுக்க லஞ்சம். அது மது விற்பனை மூலம் 

அரசு அலுவலகங்களில் சில பணிகளை முடிக்கும் போது முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கொடி நாள் நிதி மாதிரி, கொடி தருவதில்லை வாங்கும் பணத்துக்கு ரசீது கொடுக்கிற விவகாரமா அது? அதுவும் இல்லை 

சுவடுகளை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாத அந்த லஞ்ச லாவண்யம் தொடர்பாக வலுவான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றிருந்தால் அதை சட்டசபையில் வைத்துப் பேசலாம்.

அதிகாரம் கையில் இருந்து என்ன சட்ட நடவடிக்கை வேண்டுமானாலும் என்கிற நிலை இருக்கும் போது, கட்சி மேடைகளில் அள்ளித் விடுவது போல் குரலை உயர்த்தி பேசுவது தான் பிரச்சனையே. இந்த விவகாரத்தில் பெரிய அளவில் PMLA எனும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் எனும் Money Laundering நடைபெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்நடவடிக்கை முடுக்கிவிடப்பட வேண்டும். கடந்த அறுபது ஆண்டுகளாகப் பேசிப் பேசியே நாட்டை ஊழல் குட்டிசுவராக்கி விட்டனர்.

அதனால் தான் முதல்வர் சி ஜோசப் விஜய் பேசாமலிருந்து சாதிக்கிறார், என்கிறார் அவரது தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர்.கருத்து 

வாழ்க்கையில் இனி சகல சௌபாக்கியமும் கிடைக்கட்டும்.கோவில் பணத்தை தின்று கொளுத்த திமுக...

திருக்கோவில் பணத்தில் 10 கோடி ரூபாய் எடுத்து கோவிலுக்கு சம்பந்தமில்லாத மற்றொரு துறைக்கு கார் பார்க்கிங் கட்ட அனுமதி வழங்கியது திமுக அரசின் அறநிலையத்துறை . சுற்றுலா பயணிகள் பயன்படுத்துவதற்காக செய்ததாக முன்னாள் ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். பேசியதைப் பார்க்கும் போது கோவில் பணத்தை திருடியதை இப்படியும் சொல்லலாமா என எனக் கேட்கத் தோன்றுகிறது

கோவில் பணத்தை மற்ற துறைகளுக்கு செலவு செய்வதை ஏற்க முடியாது என்றும் 

இது போன்ற திட்டங்களை ரத்து செய்வதாகவும் கோவில் பணத்தில் கோவிலுக்கு தேவையான வசதிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மட்டுமே செய்து கொடுக்க முடியும் மற்ற விஷயங்களுக்கு கோவில் பணத்தை செலவு செய்ய முடியாது என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் சட்டமன்றத்திலேயே தெரிவித்திருப்பது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.


ஒரு விஷயம் தற்போது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது கோவில் பணத்தை இத்தனை ஆண்டுகள் திமுக திருடித் தின்று கொழுத்துள்ளது, சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கோவில் பணத்தில் எதற்காக மல்டி ஸ்பெஷாலிட்டி கார் பார்க்கிங் கட்ட வேண்டும்!! இதுபோல் பிற மத ஆலயங்களில் ஒரு ரூபாயை எடுத்து அரசு பயன்படுத்த முடியுமா.?

தற்போதைய அரசு கோவில் பணத்தை கோவிலுக்கு மட்டுமே செலவு செய்வோம் என்ன பகிரங்கமாக ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது, அதே வேளையில் கடந்த திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் கோவில் பணம் இது போலவே கொள்ளை அடிக்கப்பட்டது, ஆட்சி மாறினால் இதே நிலைமை திரும்பவும் வரும், எனவே அரசியல்வாதிகள், அரசு கோவிலை விட்டு வெளியேற வேண்டிய காலம் வேதாரண்யம் ஆலயத்தில் இருந்து துவங்கும் அது உச்சநீதி மன்றம் வழங்க உள்ள தீர்ப்பில் அடங்கும். ஹிந்து கோவில்களைத் தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ஹிந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பது மட்டுமே இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்பதையும் மறுக்க முடியாது. அதோடு மற்றும் ஒரு விவகாரம் சென்னை பெருநகர் மாநகராட்சி மேயர் பிரியாவுக்கும் தவெக சட்டமன்ற உறுப்பினர் பல்லவிக்கும் ‘கட்டிடம்’ திறக்கிற இடத்தில் மோதல் போக்கு ஏற்பட்டதில்லையா? அந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்ட மன்ற உறுப்பினர் பல்லவி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்கவிலை எனச் சொன்ன சபாநாயகர், “அனைத்து அரசு நிகழ்வுகளிலும் மரபு நெறிமுறைப்படி அந்தத் தொகுதியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் மரபு நெறிமுறைகளை கடைப்பிடிக்க நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த அலுவலர்களுக்கும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு மதிப்புக்குரிய அரசு தலைமைச் செயலாளர் அவர்களுக்கு உத்தரவிடுகிறேன்” என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்திருந்தார்..

அதோடு, அமைச்சர் வன்னியரசு, மத்திய அரசுக்கு எதிராக விமர்சனம் வைத்த போதும் சபாநாயகர் உடனே குறுக்கிட்டார்.



இப்படி எல்லாம் சபாநாயகர் நடுநிலையாக இருக்கிறது தான் எதிர்க்கட்சிகளின் மகிழ்ச்சிக்கு காரணம்…எம்ஜிஆர் காலத்தில் சபாநாயகராக இருந்த க.ராஜாராம்,மிகவும் நடுநிலையாக நடந்து கொள்வார்.. எதிர்க்கட்சிகளுக்கும் உரிய சுதந்திரம் கொடுத்திருந்தார்.. அவரைத்தான் நான் பாலோ அப் செய்யனும்னு விரும்புகிறேன்.. அதாவது க.ராஜாராம் மாதிரி நடுநிலையாக இருக்க விரும்புகிறேன்” என முதல்வர் சி. ஜோசப் விஜயிடம் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறி இருக்க வேண்டும் .. முதல்வரும், “சரி" எனக் தெரிவித்தார் என்றும். இது பலரும் தெரிவிக்கும் செய்தி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நடவடிக்கைகளை பாராட்டுற இதே திமுக தரப்பு, போன வாரம் ”சபாநாயகரை” முன்வைத்து சில பிரச்சனைகளைச் செய்தது.அது அசோக் குமாரை காவல்துறை தேடுவதற்கும் காரணம் எனவும் பேசப்படுகிறது,

இதை பத்தி செந்தில் பாலாஜிக்கு மிக நெருக்கமானவங்க கூறுவது “தற்போதைய தவெக ஆட்சி தொடர்ந்து நீடிக்கிறதால திமுகவுக்கு எதிர்காலத்துல ரொம்ப சிக்கலாகிடும்னு எல்லாருமே நினைக்கிறாங்க.

கடந்த மே மாதம் 13-ஆம் தேதி தான் தவெக அரசு மேல நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதனால அடுத்த 6 மாசத்துக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியாது..

ஆனால் , நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இணையா தவெக அரசுக்கு நெருக்கடி தருவது மாதிரி சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முடியும். அந்த தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டால் அதை வைத்து தவெக ஆட்சியை கவிழ்க்க முடியும்னு ஒரு திமுக தரப்பு பேசுகிற நிலை .ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, மக்கள் ஆதரவு தவெகவுக்கு உள்ளவரை மற்றும் லஞ்சம் ஊழலை பொருத்த வரை அரசு ஊழியர்களை மட்டுமோ, அரசியல்வாதிகளை மட்டுமோ குறை சொல்வதற்கு இல்லை. மக்களே தவறு செய்வதை வழக்கமாக்கிக் கொண்டு அதை கண்டு கொள்ளாமல் இருக்க அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து பழக்கி வைத்திருக்கிறார்கள். அதேபோல் எரிவாயு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விநியோகம் செய்யும் நபர், உணவு விற்பனை ஊழியர், போன்றோருக்கு பலரும் இரக்கப் பட்டோ, தங்கள் பணத்திமிரைக் காட்டவோ டிப்ஸ் எனும் லஞ்சம் கொடுத்துப் பழக்கி வைத்திருக்கிறார்கள். இந்தப் பழக்கம் தற்போது உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களும் online Cab booking நிறுவனங்களும் கட்டாய டிப்ஸ் முறையை தங்கள் APP லேயே அறிமுகப்படுத்தும் நிலைக்கு வந்து விட்டது. கடைசியில் கடும் வெயிலில் அடுப்படியில் வெந்து சமைக்கும் உழைப்பாளிகளுக்கு சம்பளத்தை தவிர வேறு என்ன கிடைக்கும்? நாட்டில் நீதி தவறும் போது ஒருவருக்கொருவருடனான ஒப்பீடு களால் குற்றங்கள் பலமடங்கு பெருகத் தானே செய்யும்? இனி ஊழலை ஒழிப்பேன், லஞ்சத்தை ஒழிப்பேன் என கூக்குரலிடும் யாராவது ஒருவர் பைத்தியமாக இருக்க வேண்டும் அல்லது பித்தலாட்டக்காரனாக இருக்க வேண்டும்.! என்ற நிலையில் கடவுள் மீதான நம்பிக்கையாலும், பாவம் செய்தால் அதன் விளைவுகளை எதிர் கொண்டே ஆக வேண்டும் என்கிற அச்சம் இருந்ததாலும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு மக்கள் ஓரளவு நேர்மையுடன், ஒழுக்கத்துடனும் வாழ்ந்து வந்தார்கள். இன்று அந்த நம்பிக்கையும், அச்சமும் தகர்க்கப்பட்டு விட்டது. இனி கடவுளானாலும் மனித சமூகத்தைக் காப்பாற்ற முடியாது! என்ற நிலையில் தவெக ஆட்சி அமைந்த பின்னர் ஊழல் திமுக ஆட்சியில் இருந்ததை விட ஒரு 25 சதவீதம் குறைத்துள்ளது, மேலும் இது 75 சதவீதம் தாண்டினால் தமிழ்நாடு ஆட்சியில் தவெக அசைக்க முடியாத நிலை வரும் திமுக அதிமுக இரண்டும் தேய்வாகும், இதுவே உண்மை. கடைசியாக முதல்வர் சி. ஜோசப் விஜய் தங்களது அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகம் பற்றிய ஒற்றை வரித் தகவலை வெளியீட்டு இருக்கிறார் 

மத்திய அரசுடன் எங்கள் அரசியல் வேறு 

மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஆன நிர்வாக அணுகுமுறை என்பது வேறு,

என்கின்ற தெளிவான கருத்துப் பரிமாற்றம் இன்று வெளிபட்டுள்ளது 

ஒரு உதாரணம் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஒரு சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை மத்திய அரசு பல கோடியில் கட்ட அனுமதி கேட்டு கடந்த திமுக ஆட்சியில் மறுக்கப்பட்டது என சட்ட சபையில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்திருக்கிறார் .. 

அதை இந்த ஆட்சி தொடரப் போகிறது என்றும் மத்திய அரசு அளிக்கும் பல திட்டங்கள் தொடர கடைசியாக விஜய் அவர்கள் தங்களது அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகம் பற்றிய ஒற்றை வரி தகவலை வெளியீட்டு இருக்கிறார் 

மத்திய அரசுடன் எங்கள் அரசியல் வேறு 

மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஆன நிர்வாக அணுகுமுறை வேறு 

என்கின்ற தெளிவான கருத்து பரிமாற்றம் இன்று வெளிபட்டு இருக்கு 

ஒரு உதாரணம் .. பழனி அருகே ஒரு சித்த மருத்துவ கல்லூரி / மருத்துவமனை மத்திய அரசு பல கோடியில் கட்ட அனுமதி கேட்டு கழக ஆட்சியில் மறுக்கப்பட்டது என சட்ட சபையில் அமைச்சர் ரமேஷ் அவர்கள் தெரிவித்து இருக்கிறார் .. 

அதை இந்த ஆட்சி தொடர போகிறது என்றும் மத்திய அரசு அளிக்கும் பல திட்டங்கள் தொடர போவதாக 

நல்ல துவக்கம் தெரிகிறது 

நாங்களும் தமிழர்கள் தான் .. அதரக்காக மத்திய அரசுடன் மோதல் போக்கு இல்லை என்பது  நல்ல துவக்கம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...