தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநில அரசுகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக, டில்லியில் சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்படுவது வழக்கம். இது, அமைச்சர் பதவிக்கு இணையானது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணாவை மாநில அரசு நியமித்துள்ளது. இவர், முதல்வர் சி. ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர். மற்றும் பல வகையில் ஆடசி அமைப்பதில் உதவியாக இருந்நவர், மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து முறைப்படி பெற்றுத் தர கோரிக்கைகளை வலியுறுத்துவது, இந்தச் சிறப்புப் பிரதிநிதியின் முக்கியப் பொறுப்பாகும்.
கே.வெங்கட் நாராயணா இந்தியாவின் முன்னணித் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பெரிய ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் . தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல முன்னணித் திரைப்படங்களை தயாரித்து விநியோகம் செய்துள்ளார்.
முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் ஜனநாயகன் உள்ளிட்ட பல பிரம்மாண்டமான படங்களின் தயாரிப்பாளராவார்.
இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் குழுமத்தில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார் தற்போது தமிழ் நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம்




கருத்துகள்