முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெடுஞ்சாலைத் துறையில் ஒரு விஞ்ஞானப் பூர்வ ஊழல் சிக்கிய திமுகவின் முன்னால் அமைச்சர் ஏ. வா. வேலு

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் ஒரு விஞ்ஞானப் பூர்வமான ஊழல் சிக்கிய திமுகவின் முன்னால் அமைச்சர் 


தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் கீழ் வரும் சாலைகள் மூன்று வகையாக பிரிக்கலாம்.  

மாநில நெடுஞ்சாலைகள் SH - State Highways, 

முக்கிய மாவட்ட சாலைகள் MDR - Main District Roads,

பிற மாவட்ட சாலைகள் ODR - Other District Roads,


ஒரு சாலை புதிதாக போடப்பட்டால் அந்த ஒப்பந்ததாரர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்த சாலையின் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும்.   இதை நெடுஞ்சாலை துறையில் - Defect Liability என்கிறார்கள்.  புரியும்படி கூறினால் ஒரு பொருளுக்கு வாங்கும் போது வழங்கும் கியாரண்டி.


தமிழ்நாடு பெரும்பாலான சாலைகள் புதிய சாலைகளே.    இந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி மாதம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாலைகளையும் பராமரிக்க திமுகவின் முன்னால் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவில் நெடுஞ்சாலைத் துறையின் Construction மற்றும் Maintenance பிரிவின் தலைமைப் பொறியாளர் சத்யபிரகாஷ் 600 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு டெண்டர் விட்டார்.   



தமிழ்நாடு சாலைகளில் மொத்தமாக பராமரிப்புப் பணிகளை (Patch Works) மேற்கொள்ள எந்தத் தேவையும் இல்லை.   லஞ்சம் வாங்குவதற்காக மட்டும் ஜனவரி மாதம் 2026 ஆம் ஆண்டில் இந்த டெண்டர் விடப்பட்டு 600 கோடியில் 35 சதவிகிதத்தை கமிஷனாகப் பெற்றார் அமைச்சர் எ.வ. வேலு.  ஒப்பந்ததாரர்களுக்கும் இது வசதி.   பணியே செய்யாமல் எளிதாக வரும் இந்த லஞ்சப் பணத்துக்காக ஒப்புக்கொண்டு 35 சதவிகித கமிஷன் லஞ்சத்தை ஜனவரி மாதம் கொடுத்து விட்டனர்.   


நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சத்யபிரகாஷ் Construction & Maintenance பிரிவுக்கு நியமிக்கப்பட வேலுவுக்கு கொடுத்த லஞ்சம் 40 கோடி.ஒரு வருடத்துக்கு.  ஒரு வருடம் முடிந்ததும் Top Up செய்ய வேண்டும்  இப்பதவிக்கு வந்ததும், சத்யபிரகாஷ் நெடுஞ்சாலை துறையில் இருந்த 43 மண்டலங்களிலும் தலா 25 லட்ச ரூபாய் வசூல் செய்து முடித்தார்.  அது தான் முதல்வர் கூறிய பார்ட்டி பண்ட்டாக இருக்கலாம் 


இது போக, தனக்கு வசூல் செய்து தருவதற்கென்றே, ஒரு தலைமைப் பொறியாளரை பதவி அளித்து நெடுஞ்சாலை துறையில் வைத்திருந்தார் அந்த ஊழல்வாதியான ஏ. வ.வேலு.    நெடுஞ்சாலைத்துறையில் சந்திரசேகர் என்ற தலைமைப் பொறியாளர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓய்வு பெற்று விட்டார்.   அவரை Senior Technical Officer என்ற பணியில் நியமனம் செய்து, தனக்கு வசூல் செய்து தருவதற்காகாவே பிரத்யேகமாக வைத்திருந்தார்.அந்த ஊழல் வாதி ஏ. வ. வேலு.


இதுபோல தோண்டத் தோண்ட ஒவ்வொரு துறையிலும் ஊழல் லஞ்சம் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் மீது கரூர் சாலை அமைக்க மாநில நெடுஞ்சாலை டெண்டரில் ஊழல் நடந்ததாக அறப்போர் இயக்கத்தின் புகாரில் முதல் தகவல் அறிக்கை 



அரசு ஒப்பந்தத்தில் முறைகேடு புகார் தொடர்பாக கரூரிலுள்ள அரசு ஒப்பந்ததாரர்  எம்.சி.சங்கர் ஆனந்த் வீட்டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.

அரசு ஒப்பந்தத்தில் ஊழல் முறைகேடு புகார் தொடர்பாக கரூரில் அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்த் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.எம்.சி.சங்கர் ஆனந்த் முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் பினாமியாகும். என்பது சிறப்புத் தகவல்,ஐந்து ஆண்டுகள் என்பது 1825 நாள்கள். சிறையில் இருந்தது 471 நாள்கள். பதவி விலகியது 27.04.2025.   ஆக அதில் ஒரு 365 நாள்கள் பதவி கிடையாது.

ஏன் செந்தில் பாலாஜி மின்துறை தொடர்ந்து விளக்கம் தருகிறார். ஏன் ஊழலே இவரது ஜெயம். இனி தண்டனை தான்.தீர்வு.கரூர் சாலை ஊழலில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு 3.23 கோடி மோசடி 







ஜூன் 24, 2026  ல் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை  தலைமையக குற்றப்பிரிவு Crime No.3/2026 FIR பதிவு செய்யப்பட்டது. அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் அளித்த புகாரின் படி திமுகவின் முன்னாள் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு,


FIR பதிவு தேதி: 24.06.2026

குற்றம் நடந்த காலம்: மார்ச் மாதம் 2022 ஆம் ஆண்டு 

அரசு ஆணை எண் AC/411-2/2026 Public (S.C.) Department dated 23.06.2026 ன்படி 

 “பணியே செய்யாமல் ரூபாய் 7 கோடிக்கு ஒப்பந்தம், மார்ச் மாதம் 2022-ஆம் ஆண்டில் ரூபாய் 3.23 கோடி பணப் பரிமாற்றம்; பணிகள் நடக்காத நிலையில் 77 சதவீதம் பணம் வழங்கிய நிலையில் குற்றத் தடயம் ஆதாரங்களை அழிக்க ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி இரவு அவசர அவசரமாக சாலை அமைக்கப்பட்டதாகப்  புகார்.

2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம், கரூர் (உயர்வழி) கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்பிரிவில் (C&M Sub Division TPR-007) ‘விரிவாக்கம் மற்றும் முன்னேற்றம், சவாரி தரத்தில் மேம்பாடு, குறுக்கு வடிகால் பணிகள்’ உள்ளிட்ட பணிகளுக்காக சங்கரானந்த் இன்ஃப்ரா  நிறுவனத்திற்கு ரூபாய் 7 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் பணியே செய்யாமல் ரூபாய் 3.23 கோடி வழங்கப்பட்டது,

ஆனால், அந்தப் பணிகள் மார்ச் 2022 வரை நடைபெறவில்லை. இருப்பினும், மார்ச் மாதம் 25 மற்றும் 28-ஆம் தேதிகளில் ரூபாய் 3.23 கோடி (77 சதவீதம் ) பணம் செலுத்தப்பட்டது.

பணிப் பெயர் செலுத்தப்பட்ட தொகை விபரம் முதலாவது :-வாரணாசி - கன்னியாகுமரி சாலையில் (தோட்டக்குறிச்சி மற்றும் கரூரில் கைவிடப்பட்ட NH7 பகுதி) கிலோ மீட்டர்  281/296 – 283/2-ல் சவாரி தரத்தில் மேம்பாடு 76,62,942           அடுத்ததாக :-மண்மங்கலம் - நன்னியூர் சாலையில் கிமீ 0/0 – 3/8-ல் சவாரி தரத்தில் மேம்பாடு  98,80,661 

மூன்றாவதாக :-நேரூர் - தலவாபாளையம் சாலையில் கிமீ 0/0 - 1/6 முதல் KM 12/0 வரை புதூர் - நன்னியூர் சாலை வரை சவாரி            தரத்தில் மேம்பாடு  26,80,562 

நான்காவதாக :-கரூர் - ஈசானத்தம் - கூம்பூர் - விரியம்பட்டி சாலையில் கிமீ 6/6 – 7/0, 8/0 – 8/2, 9/8 - 11/0 வரை இடைநிலை                        வழியிலிருந்து இருவழி மற்றும் முன்னேற்றம்  1,21,03,385  ஆக மொத்தம் 3,23,27,550 

ஆதாரங்களை அழிக்க இரவு 8-ஆம் தேதி அவசர சாலையை அமைத்து மோசடி 

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஏப்ரல் மாதம் 5, 2022-ல் புகார் அளித்ததைத் தொடர்ந்து, 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும், குற்ற ஆதாரங்களை அழிக்கும் நோக்கில், ஏப்ரல் மாதம் 8, 2022 ல் இரவு, ஒப்பந்ததாரருக்கு காவல்துறை பாதுகாப்புடன் சாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டதாக புகாரில் கூறப்பட்டது.



FIR-ல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றப்பிரிவுகள்:

IPC: பிரிவுகள் 120B (குற்றச் சூழ்ச்சி), 409 (பொது ஊழியரின் நம்பிக்கைத் துரோகம்), 468 (போலி ஆவணம்), 471 (போலி ஆவணத்தை உண்மையானதாகப் பயன்படுத்துதல்)

ஊழல் தடுப்புச் சட்டம் (Prevention of Corruption Act, 1988): பிரிவு 7(c) (பொது ஊழியர் தகாத நன்மையை ஏற்றல்), 13(2) r/w 13(1)(a) (பொது ஊழியர் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சொத்து குவித்தல்,

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 120B: குற்றச்சதி (Criminal conspiracy).

பிரிவு 420: ஏமாற்றுதல் (Cheating).

பிரிவு 409: பொதுப் பணத்தைச் சீர்குலைத்தல் அல்லது கையாடல் செய்தல் (Criminal misappropriation).

பிரிவு 468: மோசடி செய்யும் நோக்கத்திற்காக போலி ஆவணங்களைத் தயாரித்தல் (Forgery for purpose of cheating).

பிரிவு 471: போலியான ஆவணத்தை உண்மையானது எனப் பயன்படுத்துதல்.

பிரிவு 109: குற்றச் செயலுக்குத் தூண்டுதல் (Abetment).

ஊழல் தடுப்புச் சட்டம் (Prevention of Corruption Act, 1988) பிரிவுகள்:

பிரிவு 7(c): அரசு ஊழியர் தனது கடமையைச் சரியாகச் செய்யாமல், சட்டவிரோத அல்லது ஊழல் மூலம் ஆதாயம் பெறுதல்.

பிரிவு 13(2) r/w 13(1)(a): அரசு ஊழியர் தனது அலுவலகப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி முறைகேடான ஆதாயம் அடைதல்.

பிரிவு 12: ஊழல் செயல்களுக்கு உடந்தையாக இருத்தல்.

இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியல் விபரம்:


எ.வ.வேலு (முன்னாள் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுக அமைச்சர், தற்போது திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)

ஆர். கண்ணன் (முன்னாள் நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர், கரூர்)

பூபாலன் சிங் (முன்னாள் நெடுஞ்சாலைகள் துறை இளநிலைப் பொறியாளர், கரூர்)

கே. பெரியசாமி (முன்னாள் நெடுஞ்சாலைகள் துறை கோட்டக் கணக்காளர், கரூர்)

ஆர்.பி. சத்தியபாமா (முன்னாள்நெடுஞ்சாலைகள் துறைக் கோட்டப் பொறியாளர் (ஓய்வு பெற்றவர்), கரூர்)

வி.வி. நிதிலன் (முன்னாள் நெடுஞ்சாலைகள் துறை கோட்டப் பொறியாளர், ஈரோடு NABARD & Rural Roads)

ஏ. ரஃபீக் முகமது (முன்னாள் நெடுஞ்சாலைகள் துறை உதவிகா கோட்டப் பொறியாளர், கரூர் NABARD & Rural Roads)

சி. தீபிகா (முன்னாள் நெடுஞ்சாலைகள்துறை உதவிப் பொறியாளர், கரூர் NABARD & Rural Roads)

எஸ். கார்த்திக் (முன்னாள் நெடுஞ்சாலைகள் துறை உதவிப் பொறியாளர், கரூர் NABARD & Rural Roads)

என்.எஸ். சத்யா (முன்னாள் நெடுஞ்சாலைகள் துறை கோட்டக் கணக்காளர், கரூர் NABARD & Rural Roads)

சங்கரானந்த் இன்ஃப்ரா (ஒப்பந்ததாரர், கரூர்)

‘அறப்போர் இயக்கம் புகாருக்கு, இறுதியாக  FIR பதிவு செய்தது. கரூர் சாலை ஊழல் வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் உயர் அதிகாரிகள் அலுவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது, தமிழக வெற்றிக் கழக அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு முக்கிய வெற்றிப் படியாகும். இருப்பினும், FIR பதிவு மட்டும் போதாது. குற்றவாளிகள் மீது விரைவான விசாரணை நடத்தப்பட்டு, கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். இந்த வழக்கில் குற்ற ஆதாரங்களை அழிக்க நடத்தப்பட்ட முயற்சிகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்புகளாகும்.                 இவர்கள் ஊழலால் தோற்றது திமுக.

சமூக ஊடகங்களை பயன்படுத்தி தவெக ஆட்சிக்கு வந்தது என்பது மடைமாற்றம். நல்ல தலைவர்கள் பத்து ஆண்டாக தமிழ்நாட்டில் இல்லை மக்கள் தேடிய தலைவராக முதல்வர் சி. ஜோசப் விஜய் வரவு  என்பதே உண்மை. ஊழல் தடுப்பது சிறப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...