இந்தியாவின் புதிய உளவுத்துறைத் தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்: காஷ்மீரில் பணியாற்றிய அனுபவமிக்கவருக்கு முக்கியப் பொறுப்பு!
இந்தியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான ‘இண்டெலிஜென்ஸ் பீரோ’ (IB) வின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில பிரிவைச் சேர்ந்த 1993 ஆம் ஆண்டு கேடர் ஐபிஎஸ் அதிகாரியானவர், தனது பணிக்காலத்தில் மிகவும் சவாலான காலகட்டங்களில் ஸ்ரீநகரில் உள்ள ஐபியின் துணை உளவுப் பிரிவின் (SIB) தலைவராகப் பணியாற்றியவர். குறிப்பாக, ஜம்மு, காஷ்மீர் மற்றும் லே ஆகியப் பகுதிகளின் பாதுகாப்பு நிலவரங்களைக் கண்காணிப்பதில் இவரது பங்கு மிக முக்கியமானது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில், அங்கு நிலவிய பிராந்தியப் பாதுகாப்பு சவால்களைக் கையாள்வதிலும், உள்நாட்டு அமைதியை நிலைநாட்டுவதிலும் இவர் மிக முக்கியப் பங்காற்றினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதன்மை உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பான 'இன்டெலிஜென்ஸ் பீரோ' (IB) புதிய இயக்குநராக, 1993-ஆம் ஆண்டு அண்ட்ரா கேடரைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய இயக்குநர் தபன் குமார் தேகாவின் பதவிக்காலம் நிறைவடைவதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு இந்த ஒப்புதலை வழங்கியுள்ளது.
தற்போது உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக இருக்கும் மகேஷ் தீட்சித், இரண்டு ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார்.


கருத்துகள்