முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியத் திரை உலகின் மூத்த கலைஞர் கே.பாக்யராஜ் காலமானார்

இந்தியத் திரை உலகின் மூத்த கலைஞர் கே.பாக்யராஜ் இன்று காலமானார்.


உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் அப்பல்லோ மருத்துவமனை  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் காலமானார். அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

நடிகர், இயக்குநர், வசன கர்த்தா இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர்,  அரசியல் தலைவர் எனப் பல பரிமாணங்களில் திரைத் துறைக்கு தனது பங்களிப்பைச் செய்தவர் கே. பாக்யராஜ். தமிழ் திரை உலகில் நடிகர்கள் இயக்குநராகவும், நடிகர்களாவும் அவதாரம் எடுத்தாலும் இரு கலைகளும் ஒருசேர செய்து இரண்டிலும் சாதித்த வெகு சிலரில் பாக்யராஜும் ஒருவர். தனது தாய் அமராவதி பெயரில் இல்லம், கோபிச்செட்டிபாளையம் வெள்ளாங்கோவில் மக்கள் மண் வாசனை தான் வாழ்வில் தன் உழைப்பு, தன் அறிவு, தன் முயற்சி மூலம் இந்தப் புகழ் வந்த நிலை, 



சமீபத்தில் மறைந்த முதுபெரும் இயக்குனர் பாரதிராஜாவின் சீடராக இருந்தவர் கே.பாக்யராஜ். பாரதிராஜாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஶ்ரீதேவி நடித்த மயில் கதை 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக தனது திரைப் பயணத்தைத் துவங்கினார். இயக்குநர் என்பதையும் கடந்து நடிகராகவும் தனி முத்திரை பதித்தவர் கே.பாக்யராஜ் இன்று காலை நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு நெஞ்சு வலி எனக் கூறியதால் அப்பல்லோமருத்துவமனை அழைத்துச் சென்றபோது அவருடைய உயிர் பிரிந்தது.கே.பாக்கியராஜ்  திரைக்கதை மன்னன் 100 படங்கள் அதில் ஞானப்பழம் போல 25 படங்களை இயக்கியவர்     பொய்சாட்சி போல 75 படங்களில் நடித்திருக்கிறார் 



வெற்றிப் படங்கள் மட்டுமே ஜனங்கள் மத்தியில் மனனமானது திரைக்கதை விஷயத்தில் ஆராரோ ஆரிரரோ , மௌனகீதங்கள் தூறல் நின்னு போச்சு , டார்லிங் டார்லிங் டார்லிங்  உள்ளிட்ட சில படங்கள் ஆய்வு செய்ய உதவும் சிலருக்கு நல்ல குணம் நல்ல ஊரு நல்ல மனைவி என்று இருந்த பாகியராஜ் மகள் வாழ்க்கை ஒரு மார்க்கத்தில் போனதில் மனதில் வருத்தம் கொண்டார் பிள்ளையோ இந்தி தெரியாது போடா லிஸ்ட் 



இரண்டாவதாக அமைந்துள்ள மனைவி பூர்ணிமா சொக்கத் தங்கம் இன்று போய் நாளை வா வை மீண்டும் தன்மகனை வைத்து எடுக்க வேண்டும் என்று நினைத்திருக்க சட்ட நுணுக்கங்களைப் பயன் படுத்தி பாலச்சந்தர் மகள் அதைப் பெற்று இவரை ஏமாற்றினார், 





இவரின் முதல் 20 படங்கள் பல மொழிகளில் பணத்தை பவுனாக அள்ளியது 
தாவணிக் கனவுகளின் கிளைமாக்ஸ் சிறிய மாற்றம் செய்திருந்தால் இன்னும்  வென்றிருக்கும் , அதற்கு பிறகு  என்னதான் எங்க சின்ன ராசா,  ராசுக்குட்டி என அருமையான படம் தந்தாலும் ஏற்றம் தடைக்கலமானது, 





அதனால் தான் காசு இருக்கனும் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தாலும் பெயர் எடுக்காமல் போனது, இயக்குனர் கே பாக்கியராஜ் என்பவரை விமர்சிப்பதை விட 




அவரின் அற்புத படைப்புக்களை மட்டும் பேச வேண்டும், அதில் சில படங்கள் ஆபாசம் இரட்டை அர்த்தம் இருந்தும் ஜனங்கள் ரசனை மாறவில்லை காரணம் திரைக்கதை 
சுவரில்லாத சித்திரங்கள் ஒரு கை  ஓசை  முந்தானை முடிச்சு வரை 1978 துவங்கி 1996 வரை நல்ல படங்களை தந்தவர் அதன் பின் நேற்று வரை தரவில்லை என்றாலும் ,  இயக்குனர் கே.பாக்யராஜ்  ஜோபித்த காலத்தில் சினிமா மற்றும் பத்திரிகை உலகம் கௌரவ உச்சத்திலிருந்தது. அடிப்படை வாழ்வை, அதன் மனிதர்களை, பெண்களை அவர் எப்படியெலௌலாம் கூர்ந்து கவனித்திருக்கிறார் என்பதை அவர் படங்களைப்பார்த்து பலருக்கு வியப்புண்டு.



அவரது குருவான பாரதிராஜா சாமானியர்களை திரை நட்சத்திரமாக்குவார். ஆனால் சீடர் கே.பாக்யராஜ், தெருக்கூத்து  மற்றும் நாடகக்கலைஞர்களை திரைப்பிரவேசம் செய்ய வைத்து வாழவைத்திருக்கிறார். 



மண்ணாங்கட்டி சுப்பிரமணிக்கு தனது படங்களில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கினார், மற்றும் கௌண்டர் மணி என்கிற நாடக நடிகரை '16 வயதினிலே' படத்தில் நடிக்க வைத்த போது கவுண்டமணி என தவறாகப் பெயரெழுதியவர். அதுவே அவர் பெயராக நிலைத்தது. 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் ராதிகாவின் அக்காள் கணவர் வேடத்துக்கு நடிகர் டெல்லி கணேஷை பாரதிராஜா நினைத்திருக்க இவர் கவுண்டமணியைச்சொல்லி சிபாரிசு செய்கிறார். வேடம் மணிக்கு என உறுதி ஆனதும் அவரைத் தேடி நள்ளிரவில் அவர் வீடு வரை போகிறார். இவரைப்பார்த்ததும் கவுண்டமணி "ஒத்துக்கிட்டாரா?..எனக்கு வேடம் உண்டா?" என ஓடி வந்து கேட்டதும் அவரை அடுத்துள்ள முக்கு கோவிலுக்கு அழைத்துப்போகிறார். தானே வாங்கிக்கொண்டு வந்த கற்பூரம், தீப்பெட்டியைக் கொடுத்து ஏற்றச்சொல்கிறார் கே.பாக்யராஜ். 

'இந்தப்பாத்திரத்தில் இனி கவுண்டமணிக்கு ஏறுமுகம் தான்' என உணர்ந்ததை வெறும் வாய் வார்த்தையோடு சொல்லாமல் தானே கற்பூரம் வாங்கி கோவிலுக்கு அழைத்துப்போய் சூடம் ஏற்ற வைத்துச் சொல்லி இருக்கிறாரென்றால் அவர் கவுண்டமணியோடு கொண்ட நட்பின் ஆழம் வியக்க வைக்கிறது.

நாடகக்கலைஞர்கள் மேல் தனி வாஞ்சையோடு அவர் அணுகிய விதத்தால்,  சங்கிலி முருகன், கவுண்டமணி, கே.கே.சௌந்தர், செந்தில், கல்லாப்பெட்டி சிங்காரம், செந்தாமரை, குலதெய்வம் ராஜகோபால், சி.ஆர் சரஸ்வதி என வளர்ந்த கலைஞர்கள் ஏராளம். 


தன்னோடு வாய்ப்புத் தேடிக்கொண்டு அலைந்த ராதாகிருஷ்ண மூர்த்தி என்கிற வாலிபன் தான் இயக்குனரானதும் "இன்னும் எத்தனை நாள்யா நடிக்க சான்ஸ் தேடுவாய்..வா...இந்த நடிப்பெல்லாம் தூக்கிப்போட்டுட்டு என் கூட அசிஸ்டண்ட்டா வந்துடு.." என அழைத்து அவரை பார்த்திபனாக்கியவர். 

இலக்கிய உலகில் உள்ளவர்கள் திரையில் பிரகாசிக்க வேண்டுமென பிரபஞ்சன் எழுதிய 'தேநீர்' கதையை ஊமை ஜனங்கள் எனப் படமாக்கிய போது இயக்குனர் ஜெயபாரதியின் மனைவியோடு நாயகனாக நடித்துக்கொடுத்தவர். எழுத்தாளர் பாலகுமாரனை இது நம்ம ஆளு திரைப்படம் மூலம் இயக்குனராக்கியது தெரிந்த கதை. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரை தனது உதவி இயக்குனராகவே வைத்திருந்தார்.




சென்னைக்கு பயணமான போது முதலில் தான் வேலை செய்த இயக்குனர் ராமகிருஷ்ணனுக்கு 'பொய் சாட்சி' படத்தில் நடித்துக் கொடுத்தார். தயாரிப்பாளரோ கே.பாக்யராஜ் பெயரை வைத்தால் தான் விற்பனையாகுமெனச் சொல்ல இயக்குனர் ராமகிருஷ்ணன் விலகிவிடுகிறார். மிச்சத்தை கே.பாக்யராஜே எடுத்து பூர்த்தியாக இயக்குனர் பெயராக பாக்யராஜ் பெயர் வேண்டுமென சொல்ல பாக்யராஜ் மறுக்க கடைசியில் இயக்குனர் பெயரில்லாமல் வந்தது.

தூயவனிடம் காப்பிரைட்டராக சில நாட்கள் இருந்ததால் அவரை தயாரிப்பாளராக்கி 'விடியும் வரை காத்திரு' படத்தில் நடித்தார்.

தன் முதல் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த சி.ஆர்.சரஸ்வதியை தன் கட்சியில் மகளிரணித் தலைவியாக்கி இருந்தவர் வருமானத்துக்காக ''எங்க சின்ன ராசா'வில் சித்தியாக்கினார். சரஸ்வதி பெரிய நடிகையானார்.

 காலனாக வந்த முன் இரவு விருந்து 

பலரது வாழ்க்கையின் திரைக்கதையை மாற்றி எழுதியவர். இவரை சினிமா நினைவில் வைக்கும் ஒரு காட்சி பாக்கியராஜ் படத்தில் இருந்து , நினைவூட்டக் கூறினால்.  பல கூறலாம் மாரடைப்பு வராமல் இருக்க நடைப் பயிற்சி மேற் கொள்ளச் சொல்கிறார்கள்.நடைப் பயிற்சியில் இருக்கும் போதே மாரடைப்பு வந்து இறந்திருக்கிறார். ஊட்டியில்,ஜாகிங் செய்து இறந்த நடிகர் முத்துராமன் நினைவுக்கு வருகிறார்.

நேற்றிரவு தொலைக்காட்சியில் சுவரில்லாத சித்திரங்கள் பார்த்தேன்.

....... காதலியைப் பார்க்க ஊட்டிக்குப் போகும் பாக்யராஜிடம் நல்ல சட்டை பேண்ட் இல்லை.

புல்லட்டில் அமர்ந்திருக்கும் சுதாகரின் சட்டையைத் தொட்டு பாக்யராஜ் கேட்கிறார்.

இது டெரிலின்ங்களா?  இல்ல பாலியஸ்டர்

உங்க கிட்ட இப்படி நெறையத் துணியிருக்கா?          ஏன் என்ன விஷயம்?

இல்ல,நாளைக்கு ஒரு கல்யாணத்துக்குப் போகணும். சார்,நேத்து  ரிகர்சலுக்கு ஒரு டிரெஸ் போட்டுட்டு வந்தீங்கல்ல.அது ரொம்ப நல்லா இருந்தது.....ஒரு நாளைக்கு எரவல் தர்றீங்களா?

சுதாகரின் முகம் மாறுகிறது

இடது கையை நெஞ்சின் மீது வைத்தபடி பாக்யராஜ் சொல்கிறார்.

"எங்க அம்மா சத்தியமா நாளைக்கு ராத்திரியே திருப்பிக் குடுத்துடறேன் சார்" இது அன்றைய கால சாமானியர் எதார்த்தம் 

ஜாதகம் அதிர்ஷ்டம் வாய்ப்புக்கு முயற்சி இது மூண்றும் சரியாக அமைய வேண்டும் அது கே.பாக்கியராஜ் சாருக்கு சரியாக அமைந்தது அதுவே அவரது வெற்றிப் பயணம் அரசு மரியாதையுடன் இறுதிப் பயணம்....திறமை கலை உலகம் - புதனும் சுக்கிரன்,


சினிமா திரை உலகம் -ராகு சுக்கிரன்,

திரைக் கதை வசனம் - ராகு குரு புதன் 

இயக்குனர்கள் -குரு சூரியன் 

சினிமா திரையுலக இபக்குனர் - சுக்கிரன் ராகு குரு  இவை உச்சம் 

மனதைக் கவர்ந்த சினிமா திரையுலக இயக்குனர் - சந்திரன் சுக்கிரன் ராகு குரு 

பன்முக வித்தகர் - குரு சுக்கிரன் சந்திரன் புதன் இவை தான் பலமான நிலை..அதேபோல் 

இது ஆளு நம்ம படத்தில் கலைஞானம் சுண்டல் விறக பூணூல் போடாது போன, இப்போ வேள்விக்கு பூணூல் என்பது தான் இவர் எம்ஜிஆர் கலை வாரிசு கடைசி காலத்தில் திமுக தலைவரின் தோழன்  கால மாற்றம் தான் காரணம்.     


                                "காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது....

அந்த  பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது ....   ஏரிக்கரை பூங்காற்றே…

நீ போற வழி தென்கிழக்கோ….

தென்கிழக்கு வாசமல்லி…".மாறா நினைவாக நுங்கம்பாக்கம் ஏரிக்கரை லேக் ஏரியா பசுமை நினைவுகள் என்றும் மாறாது. பாக்யா இதழ் ஆசிரியர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், பல்கலை வித்தகருக்கு பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் அஞ்சலி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...