முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊழல் தடுப்பு ஆய்வாளர் விமலா பணியிடை நீக்க உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்த ராஜலட்சுமிக்கு எதிராக எழுந்த ஊழல் லஞ்ச ஒழிப்பு மற்றும் சொத்துக் குவித்த புகாரை விசாரித்து, ஆய்வாளர் விமலா அறிக்கை


சமர்ப்பித்திருந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை , ஜனவரி மாதம் 6 ஆம் தேதி  ஒரு குறிப்பாணையை வெளியிட்டதில், ஆய்வாளர் ராஜலட்சுமிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) தயார் செய்யுமாறு ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.     ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே மனுதாரர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். முதல் தகவல் அறிக்கையைத் தயார் செய்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநரின் ஒப்புதலுக்கு மனுதாரர் அனுப்பியுள்ளார்.  பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று, ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் அறிக்கையை ஆய்வு செய்து, சில திருத்தங்களை மேற்கொண்ட பின்னரே முறைப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

​இந்தச் சூழ்நிலையில், வழக்கு பதிவு செய்த காரணத்திற்காக மனுதாரரான விமலாவை பணியிடை நீக்கம் செய்து  ஜுன் மாதம் 17 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆய்வாளர் விமலா மீதான இந்தப் பணியிடை நீக்க உத்தரவு முற்றிலும் உள்நோக்கம் கொண்டது என்பது முதற்கட்டமாகத் தெரிகிறது எனவும் .​ ஜூலை மாதம் 9 ஆம் தேதிக்குள் இதுகுறித்து ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும்.



மேலும், இந்த இடைநீக்க உத்தரவிற்கு  ஜுலை மாதம் 9 ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் அடுத்த விசாரணையை ஜுலை மாதம் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. காவல்துறை உதவி ஆய்வாளராக   ராஜலட்சுமி 1999 ஆம் ஆண்டில் பணியில்  சேர்ந்தது முதல்,  அவரது முழுநேர வேலை “வசூல் ”.என பலரும் விமர்சனம் செய்யும் நிலையில் 

பொருளாதாரக் குற்றப் பிரிவு, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு, என மாறி இறுதியில் ராஜலட்சுமி வந்து சேர்ந்தது விபச்சாரத் தடுப்புப் பிரிவில் ராஜலட்சுமியின் மாத மாமூல் 50 லட்சம் எனவும் .    இதில் 30 லட்சம் மாதம் தோறும் மேல்மட்டம் வரை சென்றதாகவும் தகவல் இத்தொகையை மாதம்தோறும் வாங்கித்  தந்தவர் முகாம் உதவியாளர் ஐயப்பன் எனவும் தகவல் வருகிறது,

ராஜலட்சுமி வசூலில் கொடிகட்டி பறக்கும் விஷயம் அவருடன் பணியாற்றும் பல உதவி ஆய்வாளர்களுக்குத் தெரியவந்தது.   லஞ்ச ஒழிப்புத் துறை முழுக்க இத் தவகவல் பரவியது.    




தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையில் அவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு  செய்தவர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் விமலா.   

பிப்ரவரி மாதம் 2026 ல் பதிவு செய்யப்படுகிறது.  அப்போது ராஜலட்சுமி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது வழக்கு விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் 



 அருண் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நியமிக்கப்படுகிறார்.   ஒரு சில நாட்கள்    

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்த முதல் வேலை, மாதம் 30 லட்சம் மாமூல் கொடுத்ததாகக் கூறப்படும் ராஜலட்சுமி மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்த விமலா என்ற ஆய்வாளரை இயக்குனர் பணியிடை நீக்கம் செய்தார் எனவும் . அதோடு ஜாய் தயாள் என்ற துணைக் கண்காணிப்பாளரை நீலகிரி மாவட்டம் உதகமணடலத்திற்கு மாற்றினார் எனவும் 



“ ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே லஞ்சம் வாங்கிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்” என்று இயக்குனரிடம் மாத மாமூல் வாங்கும் நபர்கள் தகவலைப் பரப்ப, இசெய்தி உண்மையா இல்லையா என்பதை புலனாய்வு செய்து விசாரிக்காமலேயே எப் ஐ ஆர் பதிவான நிலையில் தான் செய்தி பதிப்பானது பல இதழ்களில் 

 விமலா, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி தனக்கு நேர்ந்த பாதிப்பை தனது வழக்கறிஞர் அய்யாத்துரை மூலம் மனு தாக்கல் செய்து முறையிட்டார்.   சென்னை உயர்நீதிமன்றம், ய்வாளர் விமலாவின் பணி இடைநீக்கத்தை “உள்நோக்கம் கொண்டது” என்று கூறி தடை செய்திருக்கிறது   

ஆய்வாளர் விமலா ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் CSU 3 பிரிவில் பணியாற்றுகிறார்.  ஆய்வாளர் விமலாவை  பணியிடை நீக்கம் செய்யும் போது, ஜாய் தயாள் எனும் துணைக் கண்காணிப்பாளரை, விமலாவின் பணியை சரிவர மேற்பார்வை செய்யவில்லை  என நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திற்கு மாற்றியதாக  பிரபல ஆங்கில இதழ் செய்தியாளர்  தெரிவிக்கிறார்.    ஆய்வாளர் 

விமலா பணியாற்றுவது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் CSU 3.  இந்த பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் கந்தசாமி. ஆறனால் ஜாய் தயாள் பணியாற்றுவது Chennai City IV.  ஆய்வாளர் விமலாவை சரியாக மேற்பார்வை செய்யவில்லை என பணிமாற்றம் செய்யவேண்டுமென்றால் துணைக் கண்காணிப்பாளர் கந்தசாமியைத்தான் இடமாற்றம் செய்திருக்க  வேண்டும்.  எனவும் 

சம்பந்தமே இல்லாமல் துணைக் கண்காணிப்பாளர் ஜாய் ஏன் ஊட்டிக்கு மாற்றப்பட்டிருகிறார் என்பது நீதிமண்றத்தில் வழக்கறிஞர் எழு வினா 

இந்த நிலையில் 

ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பணியகத்தின் இயக்குநராக அருண் ஐபிஎஸ்-ஐ தமிழ்நாடு அரசு நியமித்த நாள்: மே மாதம் 25, 2026.

சென்னை பெருநகர விபச்சார தடுப்புப்பிரிவு ஆய்வாளர் ராஜலட்சுமி, பணிபுரியும் பிரிவில்​1 ஆய்​வாள​ராக பணிபுரிகிறார். இவர் சென்னை                 திரு​மங்​கலம், வெல்​கம் காலனி​யில் குடும்​பத்​துடன் வசிக்​கிறார்.

இவர் பணி​யின்​போது தனது அதி​காரத்தை தவறாகப் பயன்​படுத்தி முறை​கே​டாக அதி​கள​வில் பணம் சம்​பா​தித்து வரு​வ​தாகக் குற்​றச்​சாட்டு எழுந்ததை அடிப்​படை​யாக வைத்து கடந்த 13-ஆம் தேதி இவரது வீட்​டில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்​புத் துறையினர் சோதனை நடத்​தினர்.

முடி​வில் பல்​வேறு சொத்​துகள் தொடர்​புடைய முக்​கிய ஆவணங்​களைப் பறி​முதல் செய்து எடுத்​துச் சென்​றதன் தொடர்ச்​சி​யாக வருமானத்தை விட 372 சதவீதம் அதிக சொத்துச் சேர்த்​த​தாக ஆய்​வாளர் ராஜலட்​சுமி மீது வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

அதில், “குற்​றச்​சாட்​டுக்கு உள்​ளான ஆய்​வாளர் ராஜலட்​சுமி மது விலக்கு அமலாக்​கப் பிரிவு, பொருளா​தார குற்​றப்​பிரிவு, பாலியல் தடுப்​புப் பிரிவு, போக்​கு​வரத்து புல​னாய்​வுப் பிரிவு போன்ற முக்​கிய​மான இடங்​களில் பணிபுரிந்​த​போது தனது பதவியை துஷ்பிரயோகம் செய்​து, 01.06.2017 முதல் 30.06.2025 வரையி​லான கால​த்​தில், அசை​யும் மற்​றும் அசையா சொத்​துக்​களை வாங்கிக் குவித்துள்​ளார்.

நேரடி எஸ்​ஐ-​யாக பணி​யில் சேர்ந்த ராஜலட்​சுமி,         ஆய்​வாள​ராக பதவி உயர்வு பெற்ற பிறகு, 2010 ஆம் ஆண்டு முதல் சென்னை நகருக்​குள் மட்​டுமே முக்​கிய​மான இடங்​களில் பணிபுரிந்​துள்​ளார். எனவே அவரது சட்​ட​விரோத வருவாயைக் கணக்​கிட 01.06.2017 முதல் 30.06.2025 வரையி​லான காலம் கணக்​கிடப்​பட்​டது.

இந்தக் காலத்​தில் அவர் வரு​மானத்தை விட ஊழல் மற்​றும் சட்​ட​விரோத வழிகளில் ரூபாய் .5.42 கோடிக்கு சொத்​துகளை தனது பெயரிலும், குடும்ப உறுப்​பினர்​களின் பெயரிலும் வாங்​கி​யுள்​ளார்.

அதாவது வரு​மானத்தை விட 372 சதவீதம் அதி​மான அள​வில் சொத்துச் சேர்த்​துள்​ளார். இதையடுத்​து, அவர் மீது ஊழல் தடுப்புத் சட்​டத்​தின் கீழ் சொத்துக் குவிப்பு வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது” என்று குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...