முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனிநபர் தலையீடு இல்லாத ஊழலற்ற நிர்வாகம் முதல்வர் உறுதி

சென்னை தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை மாளிகையில்,





மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மற்றும் காவல்துறை வனத்துறை உயர் அதிகாரிகள் மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில்  29.6.2026 பிற்பகல் நடைபெற்றதில் முதலமைச்சர்  பேசுகையில், “வெளிப்படையான, நேர்மையான, லஞ்சம்-ஊழலற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உறுதியான முடிவின் அடிப்படையில் தான் மக்கள் நமது அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, சட்டத்தின் அடிப்படையில் காவல்துறை சுதந்திரமாக முடிவெடுக்கலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாகவும் துரிதமாகவும் நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதே நேரத்தில், நிரபராதிகள் யாரும் பாதிக்கப்படக் கூடாது. மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தை நடத்துவதற்கு முன்பாக மாவட்ட அளவிலான அலுவலர்கள் கூட்டத்தை ஆன்லைனில் நடத்த வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் கூட்டங்களை முறையாகவும், கனிவுடனும் நடத்த வேண்டும். மனு அளிக்க வருகிற மக்களிடம் அன்போடு குறைகளை கேட்டறிந்து, அவர்களின் பிரச்சினைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு, உடனடியாக அதற்கான நடவடிக்கைகளை எடுத்து தீர்வு வழங்க வேண்டும் பெரும்பாலான மக்கள் பட்டா உள்ளிட்ட அடிப்படைஅ தேவைகளுக்கான சான்றிதழ்களைப் பெறவே அரசு அலுவலகங்களுக்கு வருகிறார்கள். அவர்களை நம் வீட்டில் உள்ளவர்களைப் போல மரியாதையுடனும் மனிதநேயத்துடனும் நடத்தினாலே அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மக்களுக்கு வங்கிச் சேவைகள் ஒழுங்காகக் கிடைக்கிறதா என்பதை வங்கியாளர்களுடன் கூட்டம் நடத்தி ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்களைப் பொறுத்தவரை, திங்கட்கிழமையைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காலை நேரங்களில் கள ஆய்வுக்குச் செல்ல வேண்டும். மனுக்களைப் பெறுவது மட்டுமே மாவட்ட ஆட்சியரின் பணி அல்ல. தொடர் கண்காணிப்பும் நிர்வாகமும் மிகவும் முக்கியமானது. அதற்காக ஒரு அலுவலரை நியமித்து தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்களிடம் குறைகளைக் கேட்பதைவிட, அவற்றைத் தீர்ப்பதே மிகவும் முக்கியம். மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான கூட்டங்களை நடத்தி, சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். முக்கியமான ஒவ்வொரு வழக்கிலும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, குற்றவாளிகள் தப்பித்து விடாத வகையில் சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மேலும், மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து ஆலோசித்து, எந்த ஒரு சம்பவமும் நடைபெறுவதற்கு முன்பே அதன் மூலக் காரணங்களை கண்டறிந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்

போக்குவரத்து இழப்பு காரணமாக ஆண்டுக்கு ரூபாய் .200 கோடி இழப்பு ஏற்படுகிறது. வேர் ஹவுசிங் கார்ப்பரேஷன் 

TNCSC குடோன்களில் அறிவியல் ரீதியான எடை பொறிமுறை இல்லாததால், அரிசி மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படுவதால், பல லட்சம் டன் அரிசி மற்றும் பிற பொருட்கள் உட்பட பொது விநியோகத் திட்டப் பொருட்களில் கணிசமான கசிவு ஏற்பட்டுள்ளது. ஆதாரங்களின் படி, TNCSC குடோன்களில் ஏற்றப்படும் கன்னி பைகளின் எடை மின்னணு அமைப்பு மூலம் பதிவு செய்யப்படாமல், பணியாளர்களால் கைமுறையாக உள்ளிடப்படுகிறது, இதுவே பிரச்சனைக்கு மூல காரணம். இதனால், 50.65 கிலோ எடையுள்ள அரிசி மூட்டை, ரேஷன் கடைகளுக்கு வரும் போது, ​​47 கிலோ முதல் 48 கிலோ வரை மட்டுமே உள்ளது. ரேஷன் கடைகளில் வரும் மூட்டைகளை, இருப்பு வைக்கும் முன், எடை போடாததால், பைகளை திறந்து, நுகர்வோருக்கு அரிசி வினியோகிக்கப்படுவது தெரிய வந்தது. மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படலாம். தனிநபர்களின் தலையீடு நமது அரசில் இருக்காது,         

சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் நடத்தையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். பெண்கள் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். அதில் சமரசம் கூடாது. சிறப்பு ஏற்பாடுகளை செய்தே ஆக வேண்டும்.

மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்துவதுடன், ஒவ்வொரு பள்ளிக்கும் அருகில் உள்ள கடைகளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் நேரங்களில் அங்கு சோதனை ந டத்த வேண்டும். போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தின் மு



ன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தருவதை உறுதிப்படுத்த வேண்டும் "என மாநாட்டில் முதல்வர் பேசினார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...