முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தியாகி வாளுக்கு வேலி அம்பலம் பிறந்தநாள் விழா அரசு விழாவாக நிகழ்வு

1801 ஆம் ஆண்டில் 


ஆங்கிலக் கிழக்கிந்தியக் கும்பெனி அரசுக்கு எதிராக திருப்பத்தூர் கோட்டையில்



மருதுபாண்டியர்களை மீட்கப் படைதிரட்டி புறப்பட்டு கத்தப்பட்டில் வாளுக்கு வேலி அம்பலம் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட இடத்தில் அவரது தம்பி கருத்த ஆதப்பனால் வீரநடுகல் பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ளது, அதில் வாளுக்குவேலி அம்பலத்தின் ஒரு கையில் ஈட்டியும் மறு கையில் வளரியும் உள்ளது.

ஆறூர் வட்டகை நாட்டு தலைவர் நன்னி அம்பலம், கிழக்கு நாட்டு தலைவர்களான சேதுபதி அம்பலமும் - சண்முகபதி அம்பலமும், பாகனேரி நாட்டுத் தலைவரான வாளுக்கு வேலி அம்பலமும்  சுதந்திரப் போராட்டத்தில், சிவகங்கை சமஸ்தானத்தில் உள்ள தன்னாட்சிக் கள்ளர் நாட்டு அம்பலங்களில் முக்கியமானவர்கள். இதில் நன்னி அம்பலம், சேதுபதி அம்பலம், சோலைமலை அம்பலக்காரர், கருப்பண்ண அம்பலக்காரர் பற்றிய குறிப்புகள் நேரடியாகவே உள்ளன. ஆனால் வாளுக்கு வேலி அம்பலம் நடுகல் வழிபாடு தவிர, அவரை  பற்றிய நேரடிக் குறிப்புக்கள் இல்லை, சிறுகதை மன்னன் திருக்கோஷ்டியூர் எஸ். எஸ். தொன்னரசு எழுதிய கதையில் மற்றும் முன்னால் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி எழுதிய தென்பாண்டிச் சிங்கம் மூலம் தான் மக்கள் ஆறு தலைமுறை கடந்து அறிந்த நிலை உள்ளது என்பதால், அந்தத் தியாக சீலரை கற்பனை என்று இழிபிறவிகள் சில பேசுவதை நாம் காணமுடிகிறது. 

தென்பாண்டி சிங்கம் மாவீரன் வாளுக்குவேலி அம்பலம் அவர்களின் நேரடி வாரிசான மணிமாறன் உள்ளிட்ட பலர் நமது அண்பைப் பெற்ற அண்ணன்கள் உண்டு வீரதீர செயல் அழியாப் புகழ் கண்டு, ஒரு மாவீரனை ஒரு கற்பனை வீரன் என்று அற்பர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள், ஆனால் அம்பலகாரரின் புகழ் நாளுக்கு நாள் எட்டுதிக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. மாவீரன் வாளுக்குவேலி அம்பலம், மாவீரன் பண்டார வன்னியன் பற்றிய வீர வரலாறு ஆங்கிலேய குறிப்புகளில் இல்லை என்றாலும், அந்தப் பகுதி மக்கள் கருணதந்திர கதையாக அல்லது வாய்மொழி மூலம் பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வந்தது.  மேலும் வீரச்சாவு அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்பு கொடுக்கப்பட்டு வந்தது. வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக் கற்களை மக்கள் வணங்கி வந்தமை பற்றியும் பண்டைக்கால இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. அதுபற்றி ஆய்வுகள் நடந்துள்ளது,  அப்படிப் பட்ட நினைவுக்கல் வைத்து வணங்கப்பட்டவர்கள் 




மாவீரன் வாளுக்குவேலி அம்பலம், மாவீரன் பண்டார வன்னியன். இதனால் நாம் அறியக் கூடியது என்னவெனில் இவர்களது வரலாறு உண்மையான தென்பதே.வாளுக்கு வேலி என்றசொல்லின் சிறப்பிற்கு ஏற்றார் போல வாழ்ந்து மறைந்த மாவீரர் நம் பாகனேரி நாட்டு அம்பலக்காரர் ஒரு உயிரை , உடமையை , மக்களை, காத்து நிற்பது வாள் என்றால், அந்த வாளுக்கே வேலிபோல காப்பவன் என்பதே அச்சொல்லின் பொருள். அப்பொருளுக்கேற்ற அப்பழுக்கற்ற சுத்தவீரர் தென்பாண்டி சிங்கம் மாவீரன் வாளுக்குவேலி அம்பலத்தேவர் தன்னாட்சிக் கள்ளர் நாடுகளில் பாகனேரி நாடு ,தனித் தன்மை கொண்டது தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை சமஸ்தானம் அடங்கிய மாவட்டத்திற்குட்பட்ட,



சிவகங்கை வட்டம், காளையார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஊர் "பாகனேரி நாடு" தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் காளையார் கோவில், கல்லல், திருப்பத்தூர், சிவகங்கை ஊராட்சி ஒன்றியங்களின் பகுதிகளை உள்ளடக்கியது. பாகனேரி எனும் ஊர் 13 ஆம் நூற்றாண்டில் போகனேரிப் பற்று எனவும், கத்தப்பட்டு எனும் ஊர் கற்றைப்பட்டு எனவும் வீரபாண்டியனின் வரிச்சியூர் எனும் பெரிச்சிகோயில் கல்வெட்டு மூலம் தெரிகிறது. இந்த இரண்டு ஊர் நாட்டார்களாக முறையே இரும்பாழி உடையான் மற்றும் சுந்தர பாண்டிய காலிங்கராயர் ஆகியோர் இருந்துள்ளனர். "வறியோரின் சொந்தமடா.

படை நடுங்கும் தோள்களடா எந்த பகைவரின் மனதும் பதைக்குமடா…

வைரம் பாய்ந்த நெஞ்சமடா அவன் வாளெடுத்தால் வரும் வாகையடா…

தென்பாண்டிச் சிங்கமடா தேன் தமிழ் பாடும் தங்கமடா…வரிப்புலியின் வர்க்கமடா "



வாளுக்கு வேலி அம்பலத்தார் தியாக வரலாறு! சுதந்திர போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் பிறந்த நாளில் அரசு விழாவாக சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் சொக்கநாதபுரம் அருகே நகரம்பட்டியில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் சிவகங்கை கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா முன்னிலையில் கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி. கே.பிரபு, எம்.எல்.ஏ.,க்கள் குழந்தைராணி, சீனிவாச சேதுபதி, இளங்கோவன், கல்லாணை, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர். தென் இந்திய பார்வேர்ட் பிளாக் சார்பாக அதன் தலைவர் கே. சி. திருமாறன் ஜி. தலைமையில் பலரும் அ.தி.மு.க., 


தி.மு.க.,மற்றும் அனைத்துக் கட்சி, அமைப்பினர் சார்பில் பலரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அவரது நினைவு நாளில் கத்தப்பட்டில் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் அக்டோபர் மாதம் நினைவு அஞ்சலி செலுத்தி வருவது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...