விருதுநகர் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர்
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியையின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) தற்போதைய தலைவராக நியமிக்கப்பட்டார். ஜூன் 2026 ல் TNCC தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைமை இவரைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமித்துள்ளது.மாற்றம்: இதற்கு முன்னர் தலைவராக இருந்த கே. செல்வம் நீக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். இவர் தமிழ்நாடு விருதுநகர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விருதுநகர் தொகுதியில் 2009, 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று .மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் (Whip) செயல்படுகிறார்.
ஜூன் 1, 1975 அன்று பழைய இராமநாதபுரம் ஜில்லா தற்போது சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் பிறந்தார். தந்தை புலவர் பகீரத நாசசியப்பன் தமிழாசிரியர் மற்றும் சமூக நல்லினக்கம் கொண்ட பரோபகாரி இவர் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பி.ஏ., எல்.எல்.பி (BA LLB) சட்டப் படிப்பு முடித்துள்ளார். ஆரம்பகாலத்தில்: 1994 ல் NSUI மாணவர் அமைப்பில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் டில்லியில் தொடங்கினார். பின்னர் இளைஞர் காங்கிரஸ் அமைப்பிலும் பல்வேறு தேசிய அளவிலான பொறுப்புகளை வகித்துள்ளார்.கட்சிப் பொறுப்புகள்: ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கான காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய (AICC) பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். காங்கிரஸ் இயக்கத்தின் தலைவரான ராகுல் காந்தியுடன் மிக நெருக்கமான அரசியல் தொடர்பில் இருப்பவராவார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றவர் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருடைய தாத்தா அதாவது ஐயா 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய மயில்ராயன்கோட்டை நாட்டின் சொக்கலிங்கம் அம்பலம் காங்கிரஸ் கட்சி சார்ந்தவர்.




கருத்துகள்