தமிழ்நாட்டின் நிதிநிலை குறி
த்து அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!
தமிழ்நாட்டில் புதிய தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற 30 நாட்களில் நிதி அமைச்சர் என்.மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை மாநிலத்தின் நிதி நிர்வாகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தேர்தல் பிரச்சாரத்திலும் பதவியேற்பு உரையிலும் வாக்குறுதி அளித்தபடி, கடந்த தி.மு.க. 2021 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு ஆட்சியில் உள்ள நிதி நிலைமையைப் பகிரங்கமாக ஆவணப்படுத்துதிற அறிக்கை, வெளிப்படைத்தன்மைக்கான உறுதியை வலியுறுத்துகிறது. இது வெறும் கணக்கு அறிக்கை மட்டுமல்ல; எதிர்கால நிதித் திட்டமிடலுக்கு அடித்தளமாகும் ஆவணம்.
அறிக்கையின் முக்கியமான தகவல், மாநிலத்தின் நேரடிக் கடன் 2021-ஆம் ஆண்டில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2026-ஆம் ஆண்டில் 10 லட்சம் கோடியைத் தாண்டியது என்பதாகும். off-budget liabilities உள்ளிட்ட உண்மையான பொறுப்புகளைச் சேர்த்தால் மொத்தக் கடன் 13.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடன்-ஜி.எஸ்.டி.பி. விகிதம் 28.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு தமிழ்நாட்டுக் குடும்பத்தின் தலையிலும் சுமார் 1,28,034 ரூபாய் கடன் சுமை இருப்பதாகக் கணக்கிடப்பட்டது. இந்த இரட்டிப்பு வளர்ச்சி, கடந்த ஐந்தாண்டு ஆட்சியின் நிதி நிர்வாகத்தின் தரத்தைப் பிரதிபலிக்கிறது. இந்திய அளவில் மொத்தக் கடன் அடிப்படையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) இன்னும் கவலைக்குரியதாகிறது. 2021-ஆம் ஆண்டில் 46,358 கோடி ரூபாயாக இருந்தது 2026-ஆம் ஆண்டில் ரூபாய் 78,324 கோடியாக உயர்ந்துள்ளது, பதிவான உயர்வு. வருவாய் வருமானத்தை விட வருவாய் செலவுகள் அதிகமாக இருப்பதால், முதலீட்டுச் செலவுகளுக்கு கடன் பெற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு ரூபாய் முதலீட்டுக்கு சுமார் 2.26 ரூபாய் கடன் எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வட்டிச் செலவு மட்டும் வருவாயின் 22.8 சதவீதத்தை உறிஞ்சுகிறது. இது நீண்டகால நிதி சுதந்திரத்தை பாதிக்கும் அபாயகரமான போக்காகும்.
பொதுத் துறை நிறுவனங்கள் (PSUs) மற்றும் அரசுக் கழகங்களின் நிலைமை மோசமான வெளிப்பாட்டைத் தருகிறது. மின்சாரத் துறையில் மட்டும் 2.47 லட்சம் கோடி ரூபாய் பொறுப்புகள் உள்ளன. போக்குவரத்துக் கழகங்களின் கடன் ரூபாய் 72,627 கோடியைத் தாண்டியுள்ளது. ஒரு கிலோமீட்டர் பயணத்துக்கு 70.61 ரூபாய் செலவாகும் நிலையில் வருமானம் 25.97 ரூபாய் மட்டுமே. committed expenditures ஊதியம், ஓய்வூதியம், உதவித்தொகைகள் உள்ளிட்டவை மொத்த ஒதுக்கீட்டில் 64.4 சதவீதத்தை எட்டியுள்ளன. புதிய திட்டங்கள் அல்லது உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கு இடம் குறைவாக உள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் உள்ள முரண்பாடுகளும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இடைக்கால பட்ஜெட்டில் 19 சதவீதம் என்று கூறப்பட்ட உண்மையான வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக மட்டுமே உள்ளது. மக்கள்தொகை ஜனரேகை மாற்றங்கள், வேலைவாய்ப்பு, வயது, மக்கள் விகிதம் குறைதல், வயதானோர் சார்பு விகிதம் 20-லிருந்து 32.7 ஆக உயர்வு, எதிர்கால செலவுகளை மேலும் அதிகரிக்கும். தமிழ்நாடு மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நிதி செயல்திறனில் பின்தங்கியுள்ளது. உதாரணமாக, குஜராத்தின் நிதிப் பற்றாக்குறை 1.9 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
இந்த வெள்ளை அறிக்கை அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டு, அமைப்பு ரீதியான பிரச்சினைகளை முன்வைக்கிறது. off-budget borrowings மூலம் கணக்குகளை மறைத்தல், வரி நிர்வாகத்தில் லீக்கேஜ், பொதுத் துறை நிறுவனங்களின் செயல்திறன் குறைவு போன்றவை நிதி மோசடிக்கு வழிவகுத்துள்ளன. தேர்தல் வாக்குறுதிகளான பெண்களுக்கு மாத உதவித் தொகை உயர்வு, இலவச பேருந்து பயணம், மின்சாரம், பயிர்க் கடன் தள்ளுபடி போன்றவை ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் தேவைப்படும் என மதிப்பிடப்படுகிறது. இந்தச் சூழலில் நிதி ஒழுக்கம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமல்ல.
வெள்ளை அறிக்கை தீர்வுப் பாதையையும் சுட்டிக்காட்டுகிறது. புதிய வரிச் சுமை இல்லாமல் வணிக வரிகள், ஸ்டாம்ப் டியூட்டி, சுரங்க வருவாய் ஆகியவற்றை சிறப்பாக நிர்வகித்தல்; பொதுத் துறை நிறுவனங்களை மறுசீரமைத்தல்; போக்குவரத்துக் கழகங்களின் செயல்திறனை மேம்படுத்துதல்; CAG பரிந்துரைகளின்படி பட்ஜெட் திருத்தங்கள்; கொள்முதல் செலவுகளைக் குறைத்தல்; வருவாய் லீக்கேஜ்களைத் தடுத்தல்; செயல்படாத சொத்துகளை சிறப்பாகப் பயன்படுத்துதல் ஆகியவை முன்னுரிமை பெற வேண்டும். தனியார் முதலீடுகளை ஈர்க்கும் கொள்கைகள், மத்திய அரசுடன் ஒத்துழைப்பு, தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, விவசாயத் துறைகளின் வலிமையைப் பயன்படுத்துதல் ஆகியவை அவசியம்.
வெள்ளை அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் புதிய பொறுப்புணர்வை அறிமுகப்படுத்துகிறது. கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்று, எதிர்கால தலைமுறைகளுக்கு சுமையை ஏற்றாமல் நிதி ஒழுக்கத்துடன் வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். அடுத்த முழு பட்ஜெட்டில் இந்த அறிக்கையின் பரிந்துரைகள் எந்த அளவு அமல்படுத்தப்படுகின்றன என்பதை மக்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள். நிதி நிர்வாகம், சமூக நீதி, பொருளாதார வளர்ச்சி ஆகியவை ஒருங்கிணைந்தால் மட்டுமே தமிழ்நாடு மீண்டும் முன்னணி மாநிலமாக உயர முடியும். இந்த வெள்ளை அறிக்கை அந்தப் பயணத்தின் முதல் தெளிவான அடியாகவே அமைந்துள்ளது.கடந்த கால திமுகவின் அழிவுகரமான ‘குடும்ப அரசியல், குடும்பக் கொள்ளை’ ஆட்சியின் சீரழிவைத்தான், தற்போது த வெ க அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சிதான் தமிழ்நாட்டு மக்களை பெரும் கடனில் தள்ளியுள்ளது.
திமுக ஆட்சியில் மாநிலத்தின் நேரடிக் கடன் கிட்டத்தட்ட ரூபாய் 10 லட்சம் கோடியாக இரட்டிப்பாகியது. பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால் மாநிலத்தின் மொத்தக் கடன்கள் ரூபாய் 13.18 லட்சம் கோடியை எட்டியுள்ளன. வருவாய் வரவுகளில் 23 சதவீதம் வட்டி செலுத்தலுக்கே செல்கிறது என்பதோடு இந்த செலவு மூலதன செலவீடுகளை விட அதிகம் என்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் ரூபாய் 1.28 லட்சம் கடனுடன் பிறக்கின்றன. இது வாக்கு வங்கி மற்றும் 'ஒரு குடும்பத்தின் நலனுக்காக தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்தை அடகு வைத்த திமுக அரசின் மோசமான நிர்வாகத்தை வெளிக்காட்டுகிறது. திமுக விட்டுச் சென்ற நிதி சீரழிவை த வெ க அரசு சுட்டிக்காட்டியுள்ளதை உண்மையான தமிழ்நாடு நேர்மை தவறாத மக்கள் வரவேற்க வேண்டும்.
(கடந்த ஐந்து ஆண்டாக திமுக நம்பிய பொருளாதார நிபுணர் இந்த ஜெயரஞ்சன்)ஆனால் இந்த வெள்ளை அறிக்கை த வெ க அரசின் மீது பல்வேறு கடுமையான வினாக்களை எழுப்புகிறது. நிதி நிலை மிகவும் மோசமாக இருப்பதை அறிந்தே, தேர்தல் காலத்தில் த வெ க பல கோடி மதிப்புள்ள இலவசத் திட்டங்களை அளித்த சொந்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குவதற்கு இந்த அறிக்கையைப் பயன்படுத்துகிறது.
வணிக வரி, முத்திரை, கலால், சுரங்கத் துறைகளில் பெரும் ஊழல் இழப்புகளைத் தடுக்க வேண்டும்; நஷ்டத்தில் இயங்கும் மாநில பொதுத் துறை நிறுவனங்களை (குறிப்பாக மின்துறை) மீட்டெடுக்க வேண்டும்; மேலும் மது விற்பனை தனியாருக்கு விலை அதிகம் வைத்து ஏலம் விட வேண்டும், பயனற்ற, ஊழலுக்கு வழிவகுக்கும் இலவசத் திட்டங்களிலிருந்து உற்பத்தியை பெருக்கும் மூலதன செலவீடுகளுக்கு மாற வேண்டும். நிர்வாகமின்மை மற்றும் பெரும் ஊழலால் தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் மற்றும் மொத்த மாநில உற்பத்தி விகிதம் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. கடந்த கால திமுக வின் நிதி மோசடி மற்றும் குடும்ப ஆதிக்க ஊழலை அம்பலப்படுத்தும் விரிவான வெள்ளை அறிக்கையை முன்னால் நிதியமைச்சர் தவறை மறைத்து குறை கூறுவது சரியா என்பது மக்கள் பார்வைக்கு விட்டுவிடலாம்,
அதிக மூலதன முதலீடு, தொழில் வளர்ச்சி, எளிதான வணிகச் சூழல், மற்றும் பொருளாதாரத்தைத் திவாலாக்காத இலக்கு வைக்கப்பட்ட நலத்திட்டங்கள் என மாநில வளர்ச்சிப் பாதையை நோக்கி கொண்டு செல்ல தமிழ்நாட்டின் உழைக்கும் மக்கள், வலுவான தொழில் தளம் மற்றும் தொழில் முனைவோரின் நம்பிக்கை ஆகியவைகள் மலிவு மற்றும் இலவச அரசியலை கடந்து தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு வழிவகுக்க உண்மையான சீர்திருத்தங்கள், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
‘வளர்ச்சி பெற்ற தமிழ்நாட்டுக்காகவும், வளர்ச்சியும், நல்லாட்சியும் தான் மக்களின் நம்பிக்கை
























கருத்துகள்