முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கனிமவளக் கொள்ளையைத் தடுத்து அரசு வருவாய் கூட்ட முதல்வர் ஆய்வுக் கூட்டம்

முதலமைச்சர் தலைமையில் இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் கனிமவளங்களின் துறை உயர் அலுவலர்கள் வருவாயை பெருக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.  அதில் அரசின் நிலை இனித் தெரியவரும் Ministry of Geological Mines Mineral Resources New Law & Act, Rules மீறாமல் இருந்தால் சரி, தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற ரூபாய் .4,500 கோடி அளவில் நடந்த சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில், வேலூர், அரியலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை (ED) ஏற்கனவே சம்மன் அனுப்பியது. மாவடட ஆட்சியர்கள்


உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையிலுள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.  அதில் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் அரசு சம்பளம் பெறும் ஊழியர்கள் ஆவர் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராகவே வழக்குத் தொடர்ந்தனர்.  அதற்காகவே அவர்களை பணி நீக்கம் செயயலாம் ஆனால் திமுக ஊழல் காரணமாக செய்யவில்லை இந்த நிலையில் மாநில அரசு எதிர்பபு இல்லாத நிலையில் உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறையின் சம்மனுக்குத் தடை விதித்திருந்தது. 





அதனால் வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது தமிழ்நாடு அரசின் ஊழலுக்கு ஆதரவான அந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, 5 மாவட்ட ஆட்சியர்களும் அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி மணல் குவாரி ஊழல் திருட்டு முறைகேடுகள் குறித்த ஆவணங்களைச் சமர்ப்பித்தனர். முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் மீது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் விசாரணை இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில் கனிம வளக் கொள்ளையைத் தடுக்க தமிழ்நாடு கனிம வளத்துறையின் அமைச்சர் டாக்டர் து. க.பிரபு தீவிரமாக நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகிறார்.




மாநிலம் முழுவதும்  முடிந்த வரை அதிரடியாக சோதனைகள், ட்ரோன் ஆய்வுகள் மற்றும் அலுவலர்கள் மூலம் சட்டவிரோதக் குவாரிகள் மீது கடுமையான அபராத நடவடிக்கைகள் ஆகியவை இவரது முக்கிய நடவடிக்கைகளில்  முறைகேடுகளைத் தடுக்க தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் இரவிலும், பகலிலும் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டார் .  குவாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் கனிமங்களை வெட்டி எடுக்கிறதா என்பதைத் துல்லியமாக அறிய, ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிரக் கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது. குவாரிகள் மாநிலம் முழுவதும் பல பகுதியில் ஆய்வு செய்யப்பட்ட 431 குவாரிகளில், 155 குவாரிகளில் மற்றும் கனிம இடங்களில் விதிகள் மீறப்பட்டதைக் கண்டறியப்பட்டதில் விதிமுறைகளை மீறிய 67 குவாரிகளின் செயல்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டது.



மேலும் 88 குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட 76 குவாரிகளில், அளவுக்கு அதிகமாகக் கற்களை வெட்டி எடுத்த 23 குவாரிகள் உடனடியாக மூடப்பட்டன. தற்போது நல்ல செயல்பாடு என பலரது பாராட்டுக்களைப் பெருகிறார் நமது அமைச்சர் அதேபோல் கடந்த காலத்தில் மதுரை மாவட்டம், மேலூர் கீழவளவு பகுதியில் நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் குவாரி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதக் குவாரிகள் தொடர்பான 200-க்கும் மேற்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன.




மேலூர் பகுதியில் முறைகேடான குவாரியால் அரசுக்கு ரூபாய் .16,000 கோடி முதல் ரூபாய் .1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியராக இருந்து நீதிமன்றம் வழங்கிய சிறப்பு அதிகாரம் மூலம் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் தலைமையிலான ஆணையம் கண்டறிந்தததில் பி.ஆர்.பி. கிரானைட்ஸ்,  மற்றும் P.R.P. Exports, மதுரா கிரானைட்ஸ், மற்றும் ஒலிம்பஸ் உள்ளிட்ட பல்வேறு பெரிய நிறுவனங்கள் மீது கடுமையான வழக்குகள் பதியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.   அப்போது மேலூர் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய மேலூர் நீதித்துறை நடுவரான மகேந்திரபூபதி கூட பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு தனியார் நிலங்களில் பதுக்கப்பட்ட கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரும் வழக்குகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்த கீழமை நடுவர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த வழக்குகளும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன .தற்போதைய நிலையில் : 2012-ஆம் ஆண்டு குவாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில்,



2023-ஆம் ஆண்டு இறுதியிலும் 2024-ஆம் ஆண்டிலும் மேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சேக்கிப்பட்டி, அய்யாபட்டி, திருச்சுனை ஆகிய கிராமங்களில் புதிய குவாரிகளுக்கு திமுக ஊழல் மந்திரி ஆதரவில் ஏலம் விடப்பட்டதற்கு அப்பகுதி மக்களும் விவசாயிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்குகளில் சிக்கிய அல்லது சட்டவிரோத முறைகேடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாக தமிழ்நாட்டில் விசாரணையில் உள்ள முக்கியக் குவாரிகளாக :: பல்லடம் குவாரி அரசு அனுமதித்த அளவுக்கு மாறாக, அனுமதிக்கப்பட்ட 5 லட்சம் கன மீட்டருக்குப் பதிலாக 25 லட்சம் கன மீட்டருக்கும் அதிகமாக சட்டவிரோதமாகப் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு பூமி சுரண்டப்பட்டுள்ளது. தகவல் மூலம் அறியலாம்,

திருநெல்வேலி (அடைமிதிப்பான்குளம்) குவாரி:: கனிம வளத்துறை அனுமதித்த அளவைத் தாண்டி அளவுக்கு அதிகமாகக் குவாரி நடத்தப்பட்டதால் ஏற்பட்ட பாறை சரிவு விபத்தில் தொழிலாளர்கள் சிக்கினர் அடுத்து கன்னியாகுமாரி மாவட்டம் (கப்பியறை குருசுமலை) குவாரி: மலைப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் கல் குவாரி உரிமம் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.: சட்டவிரோத முறைகேடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் காரணமாக மாநிலத்தில் பல குவாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.




மேலும், முறைகேடாகச் செயல்பட்ட 23 கல் குவாரிகளை தமிழ்நாடு அரசு மற்றும் சுற்றுசூழல் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக மூடியுள்ளது, சுற்றுச்சூழல் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறதா என்பதை அறிய, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டால் அறியலாம்,  தமிழ்நாட்டில் கனிமவளத் துறையில் நிலவும் முறைகேடுகளை ஒழிக்கும் நோக்கில்,தற்போது அறப்போர் இயக்கம் நேற்று ஜூன் மாதம் 3 ஆம் தேதி கனிமவளத் துறை அமைச்சர் டாக்டர் து. க. பிரபுவிடம் நேரில் சந்தித்து மூன்று முக்கிய மனுக்களை அளித்ததில் திமுக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ரூபாய் .700 கோடி கற்குவாரி ஊழல், 20,000 கோடி இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒருமுறை ஒழுங்குபடுத்தும் திட்டம் மற்றும் இ-பாஸ் முறையில் மோசடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, உடனடி நடவடிக்கை கோரப்பட்டுள்ளது. மனுக்களைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.




அதில் முதலாவது அறப்போர் இயக்கம்   ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையிலும், தமிழ்நாடு கடந்த திமுக அரசாங்கத்திலும் 2024 ஆம் ஆண்டு கொடுத்த திமுக அரசின்  ரூபாய் 700 கோடி திருநெல்வேலி கல்குவாரி ஊழல் மீது கிரிமினல் நடவடிக்கையும், கனிமவள இழப்பை மீட்கும் அபராத நடவடிக்கையும் உடனடியாக எடுக்க வேண்டும். எனவும் அறப்போர் இயக்கத்தின் புகாரில் FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உடனடியாக அரசு அனுமதி வழங்க வேண்டும்.

மேலும் மூன்றாவதாக கடந்த திமுக ஆட்சியில் ஜனவரி மாதம் 2026 ல் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட  GO(Ms) No 2026 One Time Regulairization scheme அரசாணையை புதிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அதன் மூலம் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு ஏற்பட இருக்கும் வருமான இழப்பு உடன் தடுக்கப்படும்.

அடுத்ததாக புதிய தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து  கல் குவாரிகளையும் முறையாக சர்வே செய்து, விதிமீறிய கல்குவாரிகள் அனைத்தும் சட்டப்படி மூடப்பட்டு, இழந்த பணத்தை அவர்களிடமிருந்து மீட்டெடுத்து, அரசின் வருமானத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய குவாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் செய்த புவியியல் சுரங்கம் மற்றும் கனிமவளங்கள் துறை வருவாய்துறையினர் ஆன பொது ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு கல்குவாரி அனுமதி சம்பந்தப்பட்ட அனைத்துத் தகவல்களையும் வெளிப்படையாக பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். இ-பாஸ் என்ற பெயரிலே  நடந்து வரும் மோசடி பாஸ் முறையை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். எடை மேடை மற்றும் செக் போஸ்ட்களில் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு மெட்ரிக் டன்னும் மொத்த அனுமதியில் கழியும் படி உண்மையான இ-பாஸ் முறை உடன் கொண்டுவரப்பட வேண்டும்.

இது, சட்டவிரோதக் கற்குவாரிகளை ஒருமுறை ஒழுங்குபடுத்தி, அரசுக்கு ரூபாய் .20,000 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தக்கூடியதை தடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் தரிவித்து, கடந்த ஊழல் திமுக அரசை குற்றம்சாட்டுகிறது.

எனவே, ஊழல் செய்வதற்கு ஆதரவாக போடப்ப்பட்ட அரசாணையை புதிய தவெக கூடடணி அரசு இந்த  GO(Ms) No 2026 One Time Regulairization scheme    அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


அனைத்துக் கற்குவாரிகளின் சர்வே மற்றும் உண்மையான இ-பாஸ் முறை அமலாக்கம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கற்குவாரிகளையும் முழு ஆய்வு செய்து, விதிமீறல்களில் இயங்கும் குவாரிகள் சட்டப்படி மூடப்பட வேண்டும்.

அரசின் வருமானத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய கற்குவாரிகள் மற்றும் ஊழல் அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தற்போது ‘இ-பாஸ்’ என்ற பெயரில் நடைபெறும் மோசடி முறையை உடனே நிறுத்த வேண்டும்.

உண்மையான இ-பாஸ் முறையை கொண்டு வர வேண்டும்  அதாவது, மாவட்ட மாநில சோதனைச் சாவடிகள் மற்றும் எடை மேடைகளில், கடத்திச் செல்லப்படும் ஒவ்வொரு மெட்ரிக் டன் கனிமத்தின் அளவும் மொத்த அனுமதியில் கழிக்கப்படும் வகையில் வெளிப்படையான முறை அமலாக்கப்பட வேண்டும்.


மேலும், ஒவ்வொரு கற்குவாரி அனுமதி தொடர்பான அனைத்துத் தகவல்களையும் மக்கள் பார்வைக்கு வெளிப்படையாக வைக்க வேண்டும்.

அமைச்சர் டாக்டர் து. க.பிரபுவின் வரவேற்கத்தக்க முந்தைய நடவடிக்கைகளை அணைத்து விபரம் அறிந்த ஊழலுக்கு எதிரான மக்கள் மத்தியில் பராட்டுப் பெறுகிறது அது மேலும் தொடர வேண்டும்,

அமைச்சர் டி.கே. பிரபு, ஏற்கனவே சில கற்குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டு, அவற்றை தற்காலிகமாக மூடியிருப்பது வரவேற்கத்தக்கது என்று அறப்போர் இயக்கம் சார்பில் தெரிவித்துள்ளது. இந்த மனுக்களைப் பரிசீலித்து, அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.  நமது பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் வாசகர்கள் சார்பிலும் வைக்கும் கோரிக்கை :-


“ரூபாய் .700 கோடி ஊழல், 20,000 கோடி இழப்பு என்று கணக்குகள் ஊழல் மூலம் நம்முன் ஏற்கனவே இருக்கின்றன தமிழ்நாடு கனிமவளத் துறையில் நிலவும் ‘கருப்புப் பணப்’ பொருளாதாரத்தின் அளவைக் காட்டுகின்றன தவெக வின் தமிழ்நாடு  அமைச்சர் மற்றும் அரசு இந்தப் பிரச்சினைகளில் உடனடியாகத் தலையிட்டு, சிபாரிசு மற்றும் ஊழல் லஞ்ச லாவண்யத்திற்கு எதிரான கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ‘இ-பாஸ்’ முறையில் மோசடி என்பது, வெளிப்படைத்தன்மையையே கேள்விக்குள்ளாக்குகிறது. அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.” 


 அவருக்கு வாழ்த்துக்கள், தொடரட்டும் நற்பணி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...