சமீபத்தில் நடிகை கௌதமி தடிமல்வா அதிமுகவில் இருந்து விலகினார்
1990-ஆம் ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வந்தவர். 13 ஆண்டு காலம் கமலஹாசன் உடனிருந்த பின் பிரிந்து பாஜகவில் இருந்த காலத்தில் இவர் தான் சென்சார் வாரிய பதவி பெற்றார், சினிமாவில் நடித்து சேர்த்த பணத்தில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பல்வேறு சொத்துகளை வாங்கி வைத்திருந்தார்.
2004-ஆம் ஆண்டு நடிகை கௌதமிக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டபோது அவரது சொத்துகளை பராமரிப்பதற்காக பொது அதிகார முகவராக சினிமா படத் தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான சி.அழகப்பனை நியமித்திருந்தார்.
அதன்படி 2004-ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சொத்தை விற்று செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில் வேறு சொத்தை அழகப்பன் வாங்கியுள்ளார். அந்த இடத்தை நடிகை கௌதமி பெயரிலும் அவரது மனைவி நாச்சம்மை பெயரிலும் பதிவு செய்திருந்தார்.
இதுகுறித்து நடிகை கவுதமி அளித்த புகாரில், கோட்டையூர் அழகப்பன், நாச்சம்மை, மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் கே.எம்.பாஸ்கர், ஓட்டுநர் ஜி.சதீஷ்குமார் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து விசாரணையம் நடத்தினர். சில நாட்கள் கழித்து இந்த வழக்கில் நிபந்தனை ஜாமின் பெற்றார். சென்னையில் மட்டுமல்லாது திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராமநாதபுரம் என அழகப்பன் மூலம் நடிகை கௌதமியின் சொத்துகள் அணைத்தும் அபகரிக்கப்பட்ட இடங்களில் தனித்தனியாக நடிகை கௌதமி அளித்திருந்த புகாரின் அடிப்படையில் தனித்தனியாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடந்தது.
கௌதமியின் சகோதரர் ஸ்ரீகாந்துக்கு சொந்தமான நிலத்தையும் அழகப்பன் தனி பொது அதிகார ஆவணம் அதிகாரம் பெற்று ரூபாய் .60 லட்சத்துக்கு விற்றுள்ளார். பின்னர் இதனை சில மாதங்கள் கழித்து ரூபாய் 1கோடியே 63 லட்சத்துக்கு விற்றுள்ளனர். மோசடியாக விற்பனை செய்ததுடன், அந்தத் தொகையையும் ஸ்ரீகாந்துக்கு அவர் கொடுக்கவில்லை. இது தொடர்பாக கௌதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன், சுகுமார், ரகுநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதுவும் விசாரணை நடைபெறுகிறது.
இந்த நிலையில், கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை, மதுரை உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளின் அடிப்படையில் சென்னை, மதுரையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
சென்னையில் அண்ணா நகர், வானகரம் உள்ளிட்ட 3 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை எனத் தகவல் வெளியாகி உள்ளது.
கௌதமியின் சொத்துக்களை விற்பனை செய்து சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததாகவும், அது PMLA சட்டப்படி வரும் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அழகப்பன் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பணப்பரிமாற்ற மோசடி குறித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்துகிறது.



.jpg)








கருத்துகள்