ஸ்ரீதர் வேம்பு கூறிய திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலுள்ள
'அரவிந்தோ வித்யாலயா' (Aurobindo Vidhyalaya CBSE) மற்றும் 'அபிஸ்ரீ அகாடமி' ஆகியவற்றின் நிறுவனரும் கல்வியாளருமான வினீதா கோவிந்தசாமி தங்களுக்கு நேர்ந்த ஊழல் மற்றும் நிர்வாகக் கெடுபிடிகள் குறித்த புகார்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அரவிந்தோ வித்யாலயா திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைந்துள்ள ஒரு இணை கல்வி, மூத்த மேல்நிலை உறைவிடப் பள்ளியாகும். மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் CBSE இணைப்பு எண்: 1930624 ன் படி இணைந்த நிறுவனம், கல்விக்கான "பண்டைய மதிப்புகள் கொண்ட நவீனப் பள்ளி" அணுகுமுறையை ஊக்குவிக்கும் முக்கியப் பள்ளி,
2012 ஆம் ஆண்டு விவேகானந்தா கல்வி மற்றும் அறக்கட்டளை வகுப்புகளும் அதற்கு முன் நர்சரி முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை (PCM, PCB) மற்றும் ஆர்ட்ஸ், ஆங்கில அணுகுமுறை மற்றும் முக்கிய தூண்கள் பாடத்திட்டம் முழுமையான வாழ்க்கை முறை பயிற்சியுடன் கல்வி கடுமையையும் ஒருங்கிணைக்கிறது. பள்ளி ஒருங்கிணைக்கிறது, CBSE பாடத்திட்டத்துடன் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் (NIOS) ஆதரவு. ஹோலிஸ்டிக் செயல்பாடுகளில் யோகா, விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் கூடிய வளாகத்தில் மண் ஆய்வகம் போன்ற நடைமுறை கற்றல் அம்சங்கள். கொண்டது, இந்த நிலையில் திமுக ஆட்சியில் நடந்த ஊழல் மூறைகேடுகளை
துணிச்சலாக வெளிக் கொண்டு வரும் பள்ளி உரிமையாளர்கள்: ஸ்ரீதர் வேம்புவைத் தொடர்ந்து வினீதா கோவிந்தசாமியும் தி.மு.க அரசு மீது ஊழல் புகார் கூறினார்!‘ லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கோப்புகள நகரும்’ என்கிறார் ஸ்ரீதர் வேம்புவைத் தொடர்ந்து இரண்டாவது கல்வியாளர் குரல்; ‘தவெக ஆட்சியில் ஒப்புதல் தானாக வந்தது’ நம்பிக்கை! என்கிறார்
“கட்டிட அனுமதிக்காக மாதக்கணக்கில் காத்திருந்தோம்; ஆனால் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கோப்பு நகரும் என்ற மறைமுக அழுத்தம்; நேர்மையாக இருக்க முடிவு செய்தோம்” வினீதா கோவிந்தசாமி புகார்; ‘ஸ்ரீதர் வேம்புவின் குற்றச்சாட்டுகள் உண்மைதான்’ ஆதரவு; ‘தவெக ஆட்சி வந்ததும் ஒப்புதல் விரைவாக கிடைத்தது’ மகிழ்ச்சி; கல்வித்துறையில் திமுக ஆட்சியின் ‘கமிஷன் கலாச்சாரம்’ அம்பலமானது !
தமிழ்நாட்டில் தனியார் மற்றும் CBSE பள்ளிகள் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் எதிர்கொண்ட லஞ்ச ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடு முடக்கங்கள் குறித்த புகார்கள் அடுத்தடுத்து வெளிவரத் துவங்கியுள்ளன. Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவின் குற்றச்சாட்டுகள் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், தாராபுரத்தைச் சேர்ந்த பிரபல கல்வியாளரும் பள்ளி நிர்வாகியுமான வினீதா கோவிந்தசாமி தனக்கு நேர்ந்த துயரங்களை பொதுவெளியில் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தாராபுரத்தில் 'அரவிந்தோ வித்யாலயா' மற்றும் 'அபிஸ்ரீ அகாடமி' ஆகியவற்றின் நிறுவனரும் கல்வியாளருமான வினீதா கோவிந்தசாமி, தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்ரீதர் வேம்புவின் பதிவிற்கு ஆதரவாகவும், தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை விளக்கியும் பதிவிட்டுள்ளார்.
முடக்கப்பட்ட கோப்புகள், மாதக்கணக்கில் காத்திருப்பு!
தங்களது பள்ளிக் கட்டட விரிவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த அனுமதிகளுக்காக விண்ணப்பித்திருந்த கோப்புகள் கடந்த திமுக ஆட்சியில் எந்தவிதமான காரணமும் இன்றி பல மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்தன. முறையான ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்த போதிலும், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே கோப்புகள் நகரும் என்ற மறைமுக நெருக்கடியை அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர். நேர்மையான முறையில் பள்ளியை நடத்த விரும்பியதால், அவர்கள் லஞ்சம் கொடுக்க மறுத்து, காத்திருக்க முடிவு செய்தனர்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழக அரசு புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே, எந்த விதமான லஞ்சமும் இன்றி, தங்களது நியாயமான விண்ணப்பங்களுக்கு மிக விரைவாகவும் தானாகவும் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். "நிர்வாகத் தூய்மை என்பது சாத்தியமே என்பதை இந்த மாற்றம் நிரூபித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீதர் வேம்புவின் குற்றச்சாட்டு ஒரு பார்வை!
முன்னதாக, ஸ்ரீதர் வேம்பு தேனி பகுதியில் லஞ்சம் கொடுக்க மறுத்ததால் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியின் CBSE பள்ளி மூடப்பட்டதையும், தென்காசியில் தங்களது கிராமப்புற பள்ளிக்கு நகர் ஊரமைப்புத் துறை இயக்ககத்தின் (DTCP) கட்டிட ஒப்புதல் வழங்க திமுக ஆட்சியில் பணம் கேட்கப்பட்டு, கோப்புகள் முடக்கப்பட்டதையும் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார். அதை முன்னிருத்தி வலுக்கும் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்புக் குரல்!
வினீதா கோவிந்தசாமி போன்ற பெண் கல்வியாளர்களும், கிராமப்புறங்களில் தரமான கல்வி வழங்க முயலும் நிறுவனர்களும் தொடர்ந்து திமுக ஆட்சியில் நிலவிய லஞ்சம் பெறும் 'கமிஷன் கலாச்சாரம்' மற்றும் அதிகாரத்துவக் கெடுபிடிகளைப் பற்றிப் பேசத் தொடங்கியிருப்பது கல்வித்துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பள்ளிகளுக்கான தடையின்மைச் சான்றிதழ் (NOC), அங்கீகாரப் புதுப்பித்தல் (Recognition Renewal) போன்ற ஒவ்வொரு கட்டத்திலும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகங்களை அலைக்கழித்ததாகப் புகார்கள் வலுத்து வருகின்றன.
‘ஸ்ரீதர் வேம்பு, வினீதா கோவிந்தசாமி போன்ற கல்வியாளர்கள் துணிச்சலாக வெளிவரத் தொடங்கியுள்ளனர். இது, கடந்த திமுக ஆட்சியில் கல்வித்துறையில் நிலவிய ஊழல் கலாச்சாரத்தின் உச்சக்கட்டத்தை காட்டுகிறது. கட்டிட அனுமதி, NOC, அங்கீகாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு கூட லஞ்சம் கேட்கப்பட்டது என்பது மிகவும் வேதனையானது.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானதா என்பதை சுயாதீன விசாரணை மூலம் கண்டறிய வேண்டும். மேலும், இதுபோன்ற ஊழல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தவெக அரசு, இந்தப் புகார்களை தீவிரமாக எடுத்துக்கொண்டு, கல்வித்துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில், இந்தக் குற்றச்சாட்டுகள் வெறும் சமூக ஊடகப் பதிவுகளாக மட்டுமே மாறிவிடும்.
வினீதா கோவிந்தசாமியின் அனுபவம், தவெக ஆட்சியில் நிர்வாகத் தூய்மை சாத்தியம் என்பதற்கு ஒரு உதாரணம். ஆனால், இது ஒரு தனிநபர் அனுபவம் மட்டுமே. அனைத்து துறைகளிலும் இந்த மாற்றம் ஏற்பட வேண்டும்.’சி.பி.எஸ்.இ.தொடங்க ரூபாய் .40 லட்சம்-புதுப்பிக்க ரூபாய் .10 லட்சம்
சென்னையில் லஞ்சம் வாங்குவதற்காகவே தனி அலுவலகம் நடத்திய முன்னால் திமுக ஆடசியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
முந்தைய தி.மு.சு. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் புரையோடிப் போயிருந்ததாக தமிழ்நாடு நர்சர் பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயளைர் நந்தகுமார் அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தவர்,
முந்தைய ஆட்சியில் புதிய சி.பி.எஸ்.இ.பள்ளிகளைத் தொடங்குவதற்கான தடை இல்லா சான்றிதழ் (NOC)பெற ரூபாய் பல லட்சம் வரை லஞ்சம் கேட்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். மேலும்,
பள்ளிகளின் அங்கீகாரத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க ரூபாய் லட்சம் முதல் ரூபாய் 10 லட்சம் வளர இடைத்தரகர்கள் அது யாரென்பது பலருக்கு தெரியும் அதில் ஒருநபர் விராலிமலை மனைவி வழியில் துர்கா ஸ்டாலின் உறவினர் அவர்கள் மூலம் கட்டாய வசூல் செய்யப்பட்டதாகவும். பணம் தராத பள்ளிகளின் கோப்புகள் பல ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தி.மு.க. ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி லஞ்சம் வாங்குவதற்காகவே தனி அலுவலகம் வைத்திருந்ததாகத் நெரிவித்தார். சென்னை திநகரில் உள்ள குளோபல் 360 என்ற நிறுவனத்தில் லஞ்சம் பெறப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்
கல்வி அமைச்சராக இருந்த அன்பில் மகேஷி பொய்யாமொழி குறித்து நந்தகுமார் கூறுகையில்
குடும்ப உறுப்பினர். நண்பர் மற்றும் தி.மு.க.வினர் என பலர் லஞ்சம் வாங்குவதற்காக நியமனம் செய்யப்பட்டனர். குளோபல் அலுவலகத்தின் 2-வது மாடியில் இதற்கான தனி அறை
அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பாக அமைக்கப்பட்டிருந்தது. தமிழ் நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத் துணை தலைவர் என்ற பெயரில் அலுவலகம், அமைச்சர்கள் மட்டுமல்லாமல் அதிகாரிகளும் லஞ்சம் பெற்றனர். 10 முதல்
15 லட்சம் ரூபாய் வரை வாங்கியதாக புகாரளிந்தவர். சீ.பி எஸ்.இ., தனியர் பள்ளிகள் என மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப லஞ்சம் வாங்கினார்கள்.
இவ்வாறு நந்தகுமார் அளித்த பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விலகாரம் குறித்துப் பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன். தற்போதைய சூழலில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால், பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் NOC சான்றிதழ்களை பெற இனி ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என உறுதியளித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பணம் கொடுக்க வேண்டும் என நாங்கள் சோர்வடைந்துவிட்டோம்
திமுக ஆட்சியில், பள்ளியை நடத்தியது போதும் மூடிவிடலாம் என்கிற எண்ணம் பல முறை வந்துள்ளது
பேராசைக்கும் கூட ஒரு எல்லை இருக்கும், ஆனால் எங்களிடம் பணத்திற்கு எதிர்பார்த்தமைக்கு எல்லை இல்லை
பள்ளி தொடர்பான எந்த அங்கீகாரத்திற்கு சென்றாலும் பணம் எதிர்பார்த்தனர்
2022 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டி விளம்பரத்திற்கு எங்கள் பள்ளி வாகனத்தை வற்புறுத்தி இலவசமாகப் பெற்றனர்
மு.க.ஸ்டாலினின் பிரமாண்ட புகைப்படத்துடன் எங்கள் பள்ளி வாகனத்தில் விளம்பரம் செய்து கொண்டனர்
உலகக் கோப்பை செஸ் முடிந்த பிறகும் கூட மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய விளம்பரத்தை அகற்றவில்லை
விளம்பரத்தை அகற்றிக் கொடுங்கள் எனக் கேட்டதற்கு நீங்களே செலவு செய்து அகற்றிக் கொள்ளுங்கள் என்றார்கள்
பணம் தாருங்கள் என வேண்டுகோள் வைக்க மாட்டார்கள், கொடுங்கள் என டிமாண்ட் செய்வார்கள்
தொடர்ச்சியாக தாக்குதலில் இருந்த எங்களுக்கு தற்போது நிம்மதி கிடைத்துள்ளது" என்கிறார்
தி.மு.க ஆட்சி மீது தாராபுரம் அரவிந்தோ வித்யாலயா பள்ளியின் தாளாளர் வினிதா கோவிந்தசாமி அவர் தரும் பட்டியல் பெரிது,
"தமிழ்நாடு அரசின் Single Window Portal மூலமாக DTCP Approval பெற விண்ணப்பித்தவர்களுக்கு உடனுக்குடன் அனுமதி கொடுத்துள்ளனர். அதற்கான பட்டியல் ஆன்லைனில் உள்ளது. உங்கள் பள்ளியின் கட்டிடத்திற்கு DTCP அனுமதி எப்போது விண்ணப்பித்தீர்கள்?" என திமுக ஆட்சியில் பள்ளி கட்டிட அனுமதி தராமல் இழுத்தடித்ததாக குற்றம்சாட்டிய ஸ்ரீதர் வேம்புவுக்கு சமூக வலைத்தளத்தில் நெட்டிசன் ஒருவர், கேள்வி எழுப்பியுள்ளார்.
Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தளத்தில் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், "கிராமப்புற குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிப்பதற்காக நாங்கள் கலைவாணி கல்வி மையம் என்ற பள்ளியை தொடங்கினோம். அப்பள்ளிக்கு கடந்த ஆட்சியில் ஒப்புதல் பெறுவதற்கு கால தாமதத்தை சந்திக்க வேண்டி இருந்தது. மேலும், குறிப்பட்ட அளவு பணமும் கேட்கப்பட்டது. இலவசக் பள்ளியாக இருந்தாலும் இது ஒன்று மட்டுமே வழி எனக் கூறப்பட்டது. தற்போது முதல்வராக சி. ஜோசப் விஜய் வந்த பிறகு, ஒப்புதல் உடனடியாகக் கிடைத்துவிட்டது" எனத் தெரிவித்திருந்தார்.
ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டை திமுகவினர் திட்டவட்டமாக மறுத்தனர். ஸ்ரீதர் வேம்பு சொல்வது போல் திமுக ஆட்சியில் அப்ரூவல் பெற காத்திருந்தார் என்பது உண்மைக்கு மாறான தகவலாக உள்ளது. இவரின் Kalaivani Kalvi Maiyam என்பது மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் National Institute of Open Schooling வகையை சார்ந்தது. இதன் ஒப்புதல் அனைத்தும் மத்திய அரசை சார்ந்து இருக்கும் போது எதற்காக திமுக அரசின் முடிவுக்கு காத்திருந்தார்? எனக் கேள்வி எழுப்பி இருந்தனர்.
மேலும், கலைவாணி கல்வி மையம் 2024 ஆம் ஆண்டிலேயே முழுமையாகச் செயல்பட்டு வருவதாக ஸ்ரீதர் வேம்புவே ஏற்கனவே சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். பள்ளி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்ட பிறகு, இப்போதுதான் புதிய அரசு அனுமதி கொடுத்தது என்று கூறுவது எப்படி உண்மையாக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
தன் மீதான விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் விளக்கப் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "தவெக அரசுக்கு உதவுவதற்காக நான் பொய் சொல்வதாக திமுகவினர் என் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். உண்மை என்னவென்றால், நாங்கள் தென்காசி மற்றும் தேனி ஆகிய இரு இடங்களிலும் கிராமப்புறக் குழந்தைகளுக்கு இலவச 'கலைவாணி கல்வி மைய' பள்ளிகளை நடத்தி வருகிறோம்.
தேனியில் நேர்மையான ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவரால் தொடங்கப்பட்ட பள்ளியை, முந்தைய திமுக அரசு தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கக் கோடிக்கணக்கில் லஞ்சம் கேட்டு அலைக்கழித்ததால் அவர் மூடினார். அதன் பின்னரே அந்த அறக்கட்டளையை நாங்கள் ஏற்று நடத்தினோம். மாநில அரசின் முறையான அங்கீகாரம் இல்லாததால் தேனி பள்ளி தொடர்ந்து முந்தைய அரசால் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளானது; அங்கீகாரம் பெற மீண்டும் லஞ்சம் கேட்கப்பட்டதால் அந்த விவகாரம் இழுபறியிலேயே இருந்தது" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ஸ்ரீதர் வேம்புவுக்கு நெட்டிசன் ஒருவர் சமூக வலைத்தளத்தில், கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீதர் வேம்புவை குறிப்பிட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "படித்தவர் நீங்கள்.. நிச்சயம் தமிழ்நாடு அரசின் Single Window Portal மூலமாக தான் DTCP Approval வாங்க Apply செய்து இருப்பீர்கள். இது இந்த 2026ஆம் ஆண்டு தென்காசியில் கொடுக்கப்பட்ட அனுமதி பட்டியல். அனைத்தும் உடனுக்குடன் கொடுத்து இருக்கிறார்கள். உங்கள் பள்ளியின் கட்டிடத்திற்கு DTCP Approval எப்போது Apply செய்தீர்கள்? எப்போது கிடைத்தது? என்ற தகவல் கொடுக்கலாமே.." எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தென்காசியில் பள்ளிகளுக்காக விண்ணப்பித்த விண்ணப்பங்களையும் ஆதாரத்திற்காக தனது பதிவில் அவர் இணைத்துள்ளார்.. போடாத ரோடு, வெட்டாத கிணறு, கட்டாத கக்கூஸ் ஏராளம். பணம் மட்டும் தாராளம். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். ஒட்டுமொத்த உள்ளாட்சி ஊழலுக்கும் சென்னை மாநகராட்சி ஆகச் சிறந்த உதாரணம்.
ஊழலை வெளிக் கொண்டு வருவதில் இடதுசாரிகள் ஏன் இப்போதும் மௌனம் காக்கின்றனர்? கடந்த காலத்தில் திமுகவின் ஊழலுக்கு துணையாக கூட்டாக இருந்ததாலா யாராக இருந்தாலும் சரி, பல கோடி ஊழல், எதுக்கு இவ்வளவு ஊழல் பணம்? நீண்ட நாள் வாழ்வதை விட நீள் விசும்பு போற்றும் வண்ணம் வாழ்வதே வாழ்க்கை.
அடிமைத் தொழில் அறவே இன்றி, அடியார் பயனுற வாழ்வதே வாழ்க்கை நாம் ஊழல் செய்து உயர்ந்தோமா என்று பார்க்காமல்
பிறர் உயர பயன்படும் வாழ்வே மேலான வாழ்க்கை. அதை தற்போது தவெக செய்திறது, திமுக தோல்விக்கு காரணம் அவர்கள் செய்த ஊழலே,நான் "மரணத்துக்கே அஞ்சாதவன் ; திமுகவினருக்கு மனசாட்சி இருந்தால் கொள்ளையடித்த பணத்தை தந்து விட்டு என்னை பற்றி விமர்சிக்கட்டும்" என ஸ்ரீ தர் வேம்பு பதில் புல்லாங்குழலிலிருந்து வெளிப்படும் சங்கீதம் மூங்கிலை நினைப்பதில்லை. மூங்கிலின்றி வேணு கானம் இல்லை. ஒன்றை மறப்பது தான் மற்றொன்றின் குணம் மனிதத்திலும் இருப்பது இயற்கை தானே! மக்களை மதித்து நடக்காத திமுக தோல்வி அடைந்து தவெக வென்றது, முகம் தெரிந்த கடந்த கால ஊழல் அமைச்சர்களை விட முகம் தெரியாமல் வென்று ஊழல் ஒழிந்து நடைபெறும் ஆட்சி தான் சிறப்பு















கருத்துகள்