உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்காக ஆஜராக இரண்டு மூத்த வழக்கறிஞர்கள் நியமனம் !
இந்திய உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜராகும் வகையில், மூத்த வழக்கறிஞர்களான பிரசாந்தோ சந்திர சென் மற்றும் ஹரிப்ரியா பத்மநாபன் ஆகியோர் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அந்தஸ்தில் தமிழக அரசின் சட்ட ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை (நீதிமன்றங்கள்-IV) துறை சர்பில் அரசாணை வெளியிட்டுள்ளதன்படி, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பரிந்துரையின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த இரண்டு மூத்த வழக்கறிஞர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரசாந்தோ சந்திர சென் மற்றும் ஹரிப்ரியா பத்மநாபன் ஆகியோர், தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதிடுவார்கள். இவர்களுக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக தமிழ்நாடு முழுவதும் பதிவுத்துறையில் 575 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நோடல் அலுவவர்கள் நியமனம் !
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 575 சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப் பதிவு பணிகளை கண்காணிக்க துணைப் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள் நோடல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு அதிகம் ஊழல் செய்த சார்பதிவாளர்கள் சிலர் மாற்றம்
பதிவுத்துறையில் செயல்படுத்தப்பட்டுள்ள STAR 3.0 மென்பொருள் மூலம், பொதுமக்கள் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் இணையவழியில் ஆவணப் பதிவு சேவைகளைப் பெற முடிகிறது.
குறிப்பாக, மனைப்பிரிவுகளில் மனைகளின் முதல் விற்பனை மற்றும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளின் முதல் விற்பனை உள்ளிட்ட பதிவுகளை இணையம் வாயிலாக மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பயனர்கள் தாங்களாகவே தேவையான ஆவணங்களை வடிவமைத்து பதிவேற்றம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நிலம் மற்றும் சொத்து தொடர்பான பரிவர்த்தனைகள் காகிதமில்லா முறையில் மேற்கொள்ளப்படுவதுடன், வில்லங்கச் சான்றிதழ் தொடர்பான தேடல்களையும் எளிதாக மேற்கொள்ள முடிகிறது.
இந்தத்திட்டத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தவும், பதிவு சேவைகள் முறையாக நடைபெறுவதைக் கண்காணிக்கவும், பொதுமக்களுக்கு விரைவான சேவைகளை வழங்குவதை உறுதி செய்யவும் இந்த நோடல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக புதிய பதிவுத்துறை ஐஜி அருண் சுந்தர் தயாளன் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு சட்டசபை செயளாளர் சமீபத்தில் சீனிவாசன் ராஜினாமா செய்துள்ளார் இந்த நிலையில் அந் இடத்தில் தற்போது சாந்தி இஆப நியமனம், தமிழ்நாடு அரசின் சட்டத் துறை முதல் பெண் செயலாளராக ப. சுமதி இ ஆ ப நியமனம்.ஆளுநரின் புதிய செயலாளராகப் பொறுப்பேற்ற சஜ்ஜன்சிங் ஆர். சவான், IAS, தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துப் பெற்றார்! நல்லவைகளை வரவேற்கலாம்









கருத்துகள்