அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் – தில்லி மாநகராட்சி இடையே நகர்ப்புறச் சாலை சீரமைப்பு பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
நகர்ப்புற சாலைகளின் கட்டமைப்பு, மதிப்பீடு தரநிலை மற்றும் தில்லி மாநகராட்சி பொறியாளர்கள், ஊழியர்களின் திறன் மேம்பாட்டுக்காக மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் – தில்லி மாநகராட்சி இடையே ஜூன் 10-ம் தேதி அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும், மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் வடிவமைத்துள்ள எஃகு கழிவுப் பொருள்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடடினயாக அடைப்பதற்கான சுற்றுச்சசசூழலுக்கு உகந்த தொழில்நுட்ப மேலாண்மை ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
சாலைகளின் தரநிலை குறித்த மதிப்பீடு, உத்தரவாதம், பராமரிப்பு போன்ற அம்சங்களில் அறிவியல் ரீதியிலான புதிய தொழில்நுட்பங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதன் மூலம் தில்லி நகர்ப்புறப் பகுதிகளில் சாலைக் கட்டமைப்பின் தரநிலைகளை மேம்படுத்துவதுடன் அவற்றின் நிலைத்தன்மையையும் அதிகரிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தில்லி மாநகராட்சி ஆணையர் திரு சஞ்சீவ் கிர்வர் இ.ஆ.ப., நகர்ப்புறச் சாலை திட்டமிடல் மற்றும் பராமரிப்பில் தொழில்நுட்பம் சார்ந்த நடைமுறைகளை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இத்தகைய கூட்டு முயற்சிகள் தில்லி மாநகராட்சியின் தொழில்நுட்பத் திறன்களை வலுப்படுத்துவதுடன் விரைவான நீண்டகாலம் பயனளிக்கும் பழுதுபார்ப்புப் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ளவும் உதவிடும் என்றும் திரு சஞ்சீவ் கிர்வர் தெரிவித்தார்.
கருத்துகள்