முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாணிக்க வாசகப் பெருமான் ஆனித் திருமஞ்சனத் தேரோட்டம் நடராஜர் உற்சவம்

ஸ்ரீ  ஆத்மலிங்க வடிவில் இறைவன் இப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிறப்பை - அருவ நிலையை - ஆத்மசொரூபமாக உள்ள நிலையை

"பார்த்து நாம் குருவாய் வந்தனுக்கிரம்

பதனமாய் வைத்து மனத்துள்ளே - நிதம்

பத்திசெய் வேறொன்றுமில்லை யில்லை - இது

பரம ரகசியம் என்று கொள்ளே 




- என மாணிக்கவாசகர் விலாசம் எனும்  நூல் புகழ்கிறது.பாணடிய நட்டின் மந்திரி பிரதானி குதிரை வாங்கச் சென்ற மாணிக்கவாசகர் எழுப்பி திருவாசகம் பாடிய திருப்பெருந்துறை, தான் ஆவுடையார் கோவில், திருவிளையாடல் புராண ஸ்தலம் ஆவுடையார் கோவில் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி கோயிலின் திருத்தேர், தமிழ்நாட்டில் மிகப்பெரிய தேர்களில் ஒன்று. இங்கு ஆனித் திருமஞ்சன விழாவின் போது, அவர் அவதரித்த தினமான இன்று மாணிக்கவாசகப் பெருமானுக்காக இந்தத் தேர் வீதி உலா ஆண்டு தோரும் நடந்து வருகிறதன் அந்தப் பிரம்மாண்டமான தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு 90 அங்குலமும், அகலம் 36 அங்குலமும் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் - பிரசித்தி பெற்ற ஆவுடையார்கோவில் ஸ்ரீ ஆத்மநாதர் சுவாமி திருக்கோவிலில்   ஆனி திருமஞ்சனம் தேரோட்டத் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் சிவனடியார்களும் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே - ஆவுடையார்கோவில் -லில் திருவாடுதுறை ஆதினத்தின் நிர்வாகத்திற்கு சொந்தமான ஸ்ரீ    ஆத்மநாதர் சுவாமி திருக்கோயில் மாணிக்கவாசகரால் பாடப்பட்டு புகழ் பெற்ற ஆலயத்தில் - ஆனித் திருமஞ்சனத் தேரோட்டம் , மற்றும் மார்கழி திருவாதிரை திருவிழா தேரோட்டம், என ஆண்டுக்கு இருமுறை மாணிக்கவாசகருக்கான தேரோட்ட வீதியுலா திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு ஆணித் திருமஞ்சனத்  திருவிழா 9 நாட்களுக்கு முன் காப்புக்கட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதன் பின்பு நாள்தோறும் சுவாமி வீதி உலாக் காட்சிகளும் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகளும் நடைபெற்ற நிலையில் இன்று விழாவில் முக்கிய நிகழ்வான  திருவிழாத் தேரோட்டம் நடைபெற்றது,

அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மாணிக்கவாசகர் வீட்றிருக்க, சிவனடியார்களும் சிவாச்சாரியார்களும் தேவாரம் திருவாசகம் உள்ளிட்ட முற்றோதல் திருமந்திரங்களைப் பாட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது ,

கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் ஆடி அசைந்து தேர் பவனி வர சிவ சிவா கோசங்களோடு தேரை வடம் பிடித்திழுத்தனர்.

மார்கழித் திருவாதிரை  தேரோட்ட திருவிழாவில் தமிழ்நாடு பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த சிவனடியார்கள் சிவ பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்,

 இந்த தேரோட்டத்தில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார் 





ஆவுடையார் கோவில் காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதேபோல் மதுரை மாவட்டம் திருவாதவூர், சிவகங்கை மாவட்டம் கோவிலூர் மடாலய நிர்வாகததால்  அமையப்பெற்ற நடராஜர் ஆலயத்தில் மாணிக்கவாசகர் அவதாரதினம் நடந்தது 


அதில் சிவனடியார்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள், முற்றோதல் நிகழ்வு மற்றும் அபிஷேக ஆராதனைகளும் சிறப்பாக நடந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...