1971ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருக்கும் தோழர் சி.மகேந்திரன், பல பொறுப்புகளை வகித்தார்.
அரசியல்வாதியாக மட்டுமேயல்லாமல், கட்டுரையாளர், பேச்சாளர் போராளி என பன்முகத்தன்மை கொண்டவர்.
தற்போதுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான
மு.வீரபாண்டியனுக்கு முன்னிருந்த முத்தரசனை எதிர்த்துப் போட்டியிட்ட தோழர் சி.மகேந்திரன், தேர்ந்தெடுக்கபடாத நிலையில், கட்சியின் தீவிர செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கியே இருந்தார். எந்த அரசுப்பணிக்கும் செல்லாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவர்! 3 ஆண்டுகளாக அவர் கட்சியில் செயல்பட வில்லை தற்போது த.வெ.கவில் இணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் சி.மகேந்திரன் பேட்டி சி.மகேந்திரனை கம்யூனிஸ்ட் என அழைப்பதை விட தமிழ்த் தேசியவாதி எனலாம் கட்சிக்குள் பலருக்கு உதவியாக இருந்தவரால் தா. பாண்டியன் மறைவுக்கு பின் அக் கட்சியில் அவரால் மேலே வர முடியவில்லை என்பதற்கு பல காரணங்கள் கூறலாம்.
பல தமிழ்த்தேசியவாதிகளைப் போல் இயற்கை விவசாயம், நம்மாழ்வார் வழியில் சிவப்புத் துண்டுடன் பசுமை பாதையில் பயணித்தார். இயற்கை வேளாண்மை, தமிழ்த்தேசியம் என்பவற்றையெல்லாம் கடந்து இவருக்கேற்ற புகலிடமாக தவெக இருக்கக் கூடும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் தோழர் சி.மகேந்திரன் ஜூன் மாதம் 18 ல் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.சென்னை பனையூரிலுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இணைந்தார்.அப்போது பேசியவர், “ஊழலை ஒழிக்க முடியும் என்ற பெரும் நம்பிக்கையை தமிழக முதலமைச்சர் விஜய் தந்துள்ளார். தற்போதைய சமூகம் மேல் தட்டு மக்களுக்கான, ஆதிக்கவாதிகளுக்கான வசதிகளை மட்டுமே செய்து கொடுக்கிறது. ஆனால், என்னதான் அரசியல் பேசினாலும் அரசாங்கத்தின் பணம் மற்றும் உணர்வுகள் அனைத்தும் சாதாரண ஒடுக்கப்பட்ட மனிதனுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதற்கான சாத்தியத்தை, இந்தத் தேர்தல் மூலம் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தொடங்கி வைத்துள்ளது. இது தமிழகத்தின் வெற்றி மட்டுமல்ல, இந்தியாவின் வெற்றியாகவே நான் கருதுகிறேன். இப்படி ஒரு வெற்றியை இந்தியாவில் எங்கும் பார்க்க இயலாது.
எனது அரசியல் வாழ்க்கையில் நான் மிகவும் வியந்து பார்த்த விஷயம் என்னவென்றால், இந்தத் தேர்தல் ஜாதி, மதத்தை ஒழித்துள்ளது. ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடுகளைப் போக்கி, இந்திய ஜனநாயகத்தில் ஒரு சராசரிக் குடிமகனும் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்பதை விஜய் உருவாக்கிக் காட்டியுள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு பாரிஸ் மாநகரத்தில் உலகத் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில், ‘இன்றைய காலத்தில் ஒரு ஏழையால் சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ செல்ல முடியுமா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. ஆனால், பணம் இல்லாதவனும் தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்பதை தற்போதைய தேர்தல் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
இதனை ஜனநாயகத்தின் ஒரு புரட்சியாகவே நான் கருதுகிறேன். அதனால் தான், கட்சிகள் மற்றும் வேறுபாடுகளை கடந்து எளிய மக்களுக்காக காந்தி, பெரியார், அம்பேத்கர் ஆகியோர் கையில் எடுத்ததைப் போன்ற ஒரு பெரிய இயக்கமாக இது வளர வேண்டும். அதற்கான விதை தற்போது போடப்பட்டு விட்டது. எனத் தெரிவிந்தார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இவருக்கான உழைப்பை பெற்று உரிய அங்கீகாரம் வழங்கத் தவறியதாகவே தெரிகிறது. முன்பு போல கம்யூனிஸ்ட் கட்சியில் பாலதண்டாயுதம், ஜீவா, உமாநாத், கலயாணசுந்தரம் போல நல்ல தலைவர்கள் இல்லை என்பதே உண்மை


கருத்துகள்