தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்த நட்சத்திரம்:
வைகாசி மாதத்தில் வரும் அனுஷ நட்சத்திரம். முக்தியடைந்த நட்சத்திரம்: மாசி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம். ஆகும் இந்த இரண்டு நட்சத்திர நாட்களிலுமே சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.வைகாசி அனுஷ நட்சத்திரம், தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்த நாள்.
கொண்டாடும் நோக்கில், 1935 ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தில், பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியார் தலைமையில், பத்மஸ்ரீ வ.சுப்பையா பிள்ளையும், காழி.சிவக்கண்ணு பிள்ளையும், இன்னும் சிலருடன் சேர்ந்து, 'திருவள்ளுவர் திருநாட் கழகம்' எனும் அமைப்பைத் தோற்றுவித்தனர்.
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் கொண்டாடப்படும் நாளைப் பின்பற்றி, பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்தனர். கோவில், அமைந்தது 400 ஆண்டுகளாக இருக்க வேண்டும் என, தொல்லியல் துறையில் வல்லுனர்கள் கூறுகினறர்.
1810 ஆம் ஆண்டு முதல் 1819 ஆம் ஆண்டு வரை சென்னை ஆட்சியராகவும், பண்டகசாலையின் {கரூவூலம்) தலைவராகவும் இருந்த, சர் பிரான்சிட் ஒயிட் எல்லிஸ், திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளையும் கற்றார். எல்லிஸ் தான், திருவள்ளுவரை உலகறியச் செய்தவர். ஆனால் திருவள்ளூர் பிறந்த காலத்தில் மாற்று மதங்களான கிருஸ்தவம், இஸ்லாமியம், உள்ளிட்டவை உதயமாகவில்லை, ஹிந்து மதத்தின் எட்டு உட் பிரிவுகள் மட்டுமே இருந்தது, அதனால் தான் திருவள்ளூர் புலால் உண்ணாமை குறித்தும் பாடியுள்ளார்,
இராயப்பேட்டை, பெரிய பாளையத்தம்மன் கோவில் கிணற்றின் கைப்பிடிச் சுவரில், இவர் வெட்டி வைத்த கல்வெட்டில், மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில் பற்றிய குறிப்புகள் உள்ளது.
"சென்னை பட்டணத்து எல்லீசு என்பான்பண்டார காரியம் பாரம் சுமக்கையில் புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் திருக்குறளினில் திருவுளம் பற்றி" என்ற கல்வெட்டில், மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில் செய்தி காணப்படுவதை அறியலாம்.
எல்லிஸ் காலத்தை மட்டும் கொண்டால் கூட, 210 ஆண்டுகளுக்கு முன்பாகிறது. எல்லிஸ் காலத்தில் திருவள்ளுவர் கோவிலில், திருவள்ளுவர் அவதார தினமாக வைகாசி அனுஷ நட்சத்திர நாளும், அவர் முக்தி அடைந்த நாளாக, மாசி உத்திர நட்சத்திர நாளும் கடைப்பிடிக்கப் பட்டிருக்கிறது. எல்லிஸ் வருவதற்கு, 100 ஆண்டுகளுக்கு முன், திருவள்ளுவர் கோவில் கட்டப்பட்டது என வைத்துக் கொண்டால், 300 ஆண்டுகளாக அக்கோவில் உள்ளது.
திருக்கோவில் ஆவணத்தில் திருவள்ளுவராண்டு காணப்படவில்லை.
கோவில் பூஜை முறைகளும், நடைமுறைகளுமே கோவில் ஆவணத்தில் இருக்கும். ஆண்டு முதலான கல்வெட்டு சான்றுகளை கொண்டு கணக்கிடுவர். தற்போதும் மயிலை திருவள்ளுவர் கோவிலில், திருவள்ளுவர் அவதார தினம் வைகாசி அனுஷம் என்றும், முக்தி அடைந்த நாள், மாசி உத்திரம் என்றும் கொண்டே, பூஜா காரியங்கள் நடைபெறுகின்றன.
இந்த நடைமுறையையே திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர் ஏற்று, 1935 ஆம் ஆண்டு மே திங்கள், 18, 19 ஆகிய இரு நாட்களில், சென்னை பச்சையப்பன் மண்டபத்தில், தமிழ்நாட்டில் பெரும்புலவர்களை வரவழைத்து, மறைமலை அடிகள் தலைமையில் பெரும் கூட்டம் கூட்டி, திருவள்ளுவரின் பிறந்த நாளை வைகாசி அனுஷ நாளில் கொண்டாடினர்.
மேலும், இந்த கூட்டத்தில் தலைமையேற்ற மறைமலை அடிகள், தன் பேச்சின் ஊடே, 'திருவள்ளுவர், ஏசு கிறிஸ்துவுக்கு, 31 ஆண்டுகள் முன்பே தோன்றியவர் என, ஆய்வு செய்துள்ளேன்' என்று சொல்லிச் சென்றார். தாம் கூறிய ஆண்டு பற்றி, மறைமலை அடிகள் விவாதிக்கவில்லை; வலியுறுத்தவும் இல்லை. போகிற போக்குச் செய்தியாகத் தான் சொன்னார். திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர் இயற்றிய தீர்மானங்களில் ஆண்டு பற்றிக் குறிப்பிடவில்லை.
மறைமலை அடிகள் வைகாசி அனுஷத்தை, திருவள்ளுவர் பிறந்த நாளாக ஏற்றுக் கொண்டவர். அதனால் தான், அந்தக் கூட்டத்திற்கு தலைமையேற்றார். மறைமலை அடிகளைத் தவிர, அக்கால தமிழ்ச் சான்றோர் அனைவரும், வைகாசி அனுஷ நட்சத்திர நாளை ஏற்றுக் கொண்டனர். அவ்வாறு ஏற்றுக் கொண்ட பெருமக்களில் சிலர் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் ., சிவ கவிமணி சுப்பிரமணிய முதலியார், திரு.வி.கல்யாண சுந்தரம் பிள்ளை ., வையாபுரிப் பிள்ளை, ரா.பி.சேதுப்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், கி.வா.ஜகநாதன்., அ.ச.ஞானசம்பந்தம், சி.இலக்குவனார், கா.பொ.ரத்தினம், டாக்டர் மு.வரதராஜன் ., ஆகியோர் ஆவர் .திருவள்ளுவா் போன்ற ஞானிகளுக்கு வாழ்க்கையில் ஓா் உன்னத நோக்கமிருந்தது. ஒட்டுமொத்த சமூகத்தின், அனைத்து மக்களின் நல்வாழ்வு தான் அந்த நோக்கம். ஞானிகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கோ, யுகத்துக்கோ உரியவா்கள் அல்லா். எல்லாக் காலத்துக்கும் பொருத்தமானவா்கள்.சென்னை, கிண்டியில் உள்ள லோக்பவன் ஆளுநா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற திருவள்ளுவா் திருநாள் விழாவில் அளுநர் பேசியதாவது: "திருக்குறளைப் படித்தால் திருவள்ளுவா் எத்தகைய மாமனிதா் என்பதை உங்களால் உணர முடியும். திருவள்ளுவா் நமக்கு கவிதை வடிவிலான பேரறிவைத் தந்துவிட்டுச் சென்றுள்ளாா்.
ஜனாதனத்தில் நம்பிக்கை இல்லாதவா்கள் கூட, திருவள்ளுவா் முன்பு வந்து தலைவணங்கித்தான் ஆக வேண்டும். அதுதான் திருவள்ளுவரின் சக்தி. இதுதான் திருவள்ளுவரின் ஆகச்சிறந்த பெருமை.ஜனாதனத்துக்கு ஆதியும் அந்தமும் இல்லை: ஜனாதனம் என்பதற்கு ‘நித்தியமானது, என்றும் புதியது’ என்று பொருள். இதற்கு ஆதியுமில்லை, அந்தமுமில்லை. எனவே திருவள்ளுவரின் ஜனாதனிதான். அப்படியிருக்கும் போது அவரை ‘ஜனாதனப் பாரம்பரியத்தின் சீடா்’ என்று அழைப்பதில் என்ன தவறு?. அதுதான் உண்மை, அதை நம்மால் மறுக்க முடியாது. அவரது கருத்துகள் அவா் ஜனாதனப் பாரம்பரியம், மனிதநேயத்துக்காக வாழ்ந்தாா் என்பதை விளக்கும் என்றாா் ஆளுநா் ஆா்லேகா்.
விருது வழங்கல் விழாவில், சென்னை, நந்தனம் அரசு கலைக் கல்லுாரியின் தமிழ்த் துறைப் பேராசிரியா் க.பலராமனுக்கு ‘தமிழாகரா் சாமி தியாகராஜன் நினைவு விருது-2026’ என்ற விருதை ஆளுநா் வழங்கினாா். நிகழ்வில், தேனி ஸ்ரீசுவாமி சித்பவானந்தா ஆஸ்ரம நிா்வாக அறங்காவலா் சுவாமி சமானந்தா, தமிழறிஞரும், பாரதிய இதிகாச சங்கலன சமிதி அமைப்பின் அகில இந்திய நிா்வாகக் குழு உறுப்பினருமான டி.வி.ரங்கராஜன், திருவள்ளுவா் திருநாள் கழக ஆலோசகா் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் திருவள்ளுவா் திருநாள் கழக உறுப்பினா்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திருவள்ளுவா் சங்கங்கள், தமிழ்ச் சங்கங்களின் உறுப்பினா்கள், தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அறிஞா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மீண்டும் பாரம்பரிய ஆன்மீக உடையில் திருவள்ளுவா் அருளும் புகைப்படம்
ஆளுநா் பங்கேற்ற விழா மேடையில் வைக்கப்பட்டு இருந்த பேனரில், திருவள்ளுவா் நெற்றியில் திருநீறுடன், கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.



.jpg)


கருத்துகள்