முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அந்த்யோதயா: நலிவடைந்த மக்களின் கண்ணியம், வளர்ச்சியை உறுதி செய்த மத்திய அரசு

அந்த்யோதயா: நலிவடைந்த மக்களின் கண்ணியம், வளர்ச்சியை உறுதி செய்துள்ள மத்திய அரசு

நாட்டின் நலிவடைந்த சமூகங்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசு அந்த்யோதயா கொள்கையை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உள்ளடக்கிய, தரமான கல்வி, திறன் மேம்பாடு,அந்த்யோதயா: நலிவடைந்த மக்களின் கண்ணியம், வளர்ச்சியை உறுதி செய்துள்ள மத்திய அரசு வாழ்வாதார முன்னேற்றம், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றின் மூலம் விளிம்புநிலை மக்கள் முன்னேறி வருகின்றனர்.

மத்திய அரசு பழங்குடியின மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பழங்குடியின மக்களுக்கான வீட்டுவசதி, சாலை இணைப்பு, குடிநீர், மின்சாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற 24,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பிரதமரின் ஜன்மன் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் தொடங்கப்பட்ட பழங்குடியினர் மேம்பாட்டு மையங்கள் மூலம் பழங்குடியின மக்கள் வனம் சார்ந்த பொருட்களைச் சேகரித்து, பதப்படுத்தி விற்பனை செய்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில்  பழங்குடியினப் பெண்கள் ஆயுர்வேத மருந்துகள் தயாரித்து விற்பனை செய்து பெரும் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளனர். பழங்குடியினர் வசிக்கும் கிராமங்களில் நீண்டகாலமாக உள்ள குறைபாடுகளைக் களைவதற்குப் பிரதமரின் பழங்குடியின கிராம மேம்பாட்டு இயக்கம் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. பழங்குடியின மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க 2014-ம் ஆண்டில் 129 ஆக இருந்த ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின் எண்ணிக்கை 2026-ல் 499 ஆக உயர்ந்துள்ளது.

பட்டியல் இன மக்களின் பொருளாதார, கல்வி வளர்ச்சியை உறுதி செய்ய மத்திய அரசால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பட்டியல் இன மக்கள் அதிகம் வாழும் கிராமங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகப் பிரதமரின் அஜய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் 14,782 கிராமங்கள் மாதிரி கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. உயர் கல்வி பயிலும் பட்டியல் இன, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஷ்ரேயாஸ் திட்டம் மூலம் நிதியுதவி, இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஏழை பட்டியல் இன மாணவர்கள் தனியார் உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயில ஷ்ரேஸ்தா திட்டம் வழிவகை செய்கிறது.

இதர பிற்படுத்தப்பட்ட, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய விளிம்புநிலை மாணவர்களுக்குப் பிரதமரின் யஷஸ்வி திட்டம் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிரதமரின் தக்ஷ் திட்டம் விளிம்புநிலை மக்களுக்கு இலவசத் திறன் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. விஸ்வாஸ் திட்டம் பட்டியல் இனத்தவர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தூய்மைப் பணியாளர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்குகிறது. தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும்

முறையை ஒழித்து இயந்திரமயமாக்கவும் நமஸ்தே திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வளர்ச்சியில் பின்தங்கிய 112 மாவட்டங்களை மேம்படுத்த 2018-ல் தொடங்கப்பட்ட முன்னேறும் மாவட்டங்கள் திட்டம், தற்போது 500 வட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண்களைக் கண்காணிக்க 'விருகேர்' என்ற செயலி உருவாக்கப்பட்டு, பிரசவ கால மரணங்கள் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒருங்கிணைந்த திட்டங்களால் நலிவடைந்த பிரிவினரும் நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இணைந்துள்ளன

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...