மதம் மாறிய பின் ஜாதிச் சலுகை தமிழ்நாடு அரசாணை (G.O. No. 31) அரசியலமைப்பிற்கு முரணானதென ரத்து செய்த உயர் நீதிமன்றம்
தூத்துக்குடி என்.சமீர் அகமது பழைய பெயர் என்.பரமசிவம். ஹிந்துப் பெற்றோருக்குப் பிறந்தவர்,
இஸ்லாமிய மதத்தைத் தழுவி தனது பெயரையும் கயத்தாறில் சுன்னத் ஜமாஅத் மூலம் 2015-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சான்றிதழில், மாற்றிய மனுதாரர் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவர் தான் பின்பற்றுவதாகக் குறிப்பிட்ட ‘முஸ்லிம் மதம் லெப்பை’ உட்பிரிவின் கீழ் தனக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் கயத்தாறு வட்டாட்சியருக்கு விண்ணப்பம் அளித்ததை நிராகரித்தார்.
அதனால் அவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் 2022 ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். ‘முஸ்லிம் மதம் ஜாதி லெப்பை’ எனக் குறிப்பிட்டு ஜாதிச் சான்றிதழ் வழங்க வட்டாச்சியருக்கு உத்தரவிடுமாறு தனது மனுவில் கேட்டுக்கொண்டிருந்த சூழலில் 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் . பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC), சீர்மரபினர் (DNC) அல்லது அட்டவணைப் பட்டியலினத்தவர் (SC) ஆகிய பிரிவுகளிலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறும் ஒருவர், இடஒதுக்கீட்டுப் பலன்களைப் பெறுவதற்காகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிமாகக் கருதப்படலாம் என்றும்; அவ்வாறு மதம் மாறும் போது, அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஏழு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவராகக் குறிப்பிட்டு ஜாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்றும் அது BC (M) என அழைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த அரசாணையின் அடிப்படையில், தனக்கு பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) ஜாதிச் சான்றிதழ் வட்டாச்சியர் வழங்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார். உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு 2024-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை (G.O. No. 31) சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இது அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவித்து ஜூன் 26, 2026 அன்று ரத்து செய்துள்ளது. இந்த அரசாணை, பிற்படுத்தப்பட்ட (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) மற்றும் பட்டியல் சமூகத்தில் (SC) இருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு 'BC முஸ்லிம்' என ஜாதிச் சான்றிதழ் வழங்கி இடஒதுக்கீடு பெற வழிவகை செய்திருந்தது. இந்து மதம் உள்ளிட்ட பிற மதங்களிலிருந்து இஸ்லாமிய மத்திற்கு மாறுபவர்களை 'BC முஸ்லிம்' என்று வகைப்படுத்த முடியாதென நீதிமன்றம் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்துள்ளது. இஸ்லாம் மத்திற்கு மதம் மாறுபவர்கள் 'வெறும் முஸ்லிம்' மட்டுமே என்றும், ஜாதி அல்லது சமூக அடிப்படையிலான பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு அவர்கள் உரிமை கோர முடியாதென்றும் நீதிமன்றம் தற்போது தெளிவுபடுத்தியுள்ளது இஸ்லாம் மதத்திற்குள் காலகாலமாகப் பிறப்பால் அடையாளப்படுத்தப்படும் லெப்பை, மரைக்காயர், ராவுத்தர் மற்றும் தக்காணி முஸ்லிம்கள் போன்ற மரபுவழிப்பட்ட 7 குறிப்பிட்ட இஸ்லாமிய உட்பிரிவினருக்கு மட்டுமே தொடர்ந்து BC முஸ்லிம் இடஒதுக்கீடு பொருந்தும். தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத உள் இடஒதுக்கீடு தொடர்ந்து நடைமுறையில் உள்ளதை தற்போது மதம் மாறியவருக்கு 'பிசி-முஸ்லிம்' என ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து
வேறு மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்துக்கு மாறியவருக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் என ஜாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மனுவை விசா ரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், பி.பி.பாலாஜி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு அரசு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9-ஆம் தேதி பிறப்பித்த அரசாணை அடிப்படையில், மனுதாரர் தனக்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் என ஜாதிச் சான்றிதழ் கோரி மனு அளித்துள்ளார். அரசாணை யில், பிற்படுத்தப்பட்ட வருப் பினர், மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர், சீர்மரபினர் அல்லது பட்டியல் ஜாதி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 7 பிரிவுகளில் ஏதேனும் ஒன்றுக்கு மாறும் போது அவர்களுக்கு 'பிற்படுத் தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள்' என சான்றிதழ் வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மதம், இளம், ஜாதி, பிரிவு, பிறந்த இடம் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடை செய்கிறது. அதேநேரம், சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பிள தங்கிய குடிமக்கள் அல்லது பட்டியல் ஜாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினரின்
முன்னேற்றத்துக்காக சிறப்புச் சலுகைகள் வழங்க அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இடஒதுக்கீடு விஷயத் நில் தமிழ்நாடு அரசு கவனமாகச் செயல்பட்டுள்ளது. முஸ்லிம் மதத்தைப் பின்பற்றும் அனைவரையும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் சேர்க்காமல், குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பிளர் பிரிவில் சேர்த்துள்ளது.
அரசாணையில், பிற்படுத் தப்பட்ட வகுப்பினர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் அல்லது பட்டியல் ஜாதியினர் பிரிவில் இருந்து அதன் முலம் பிற மதத்துக்கு மாறிய ஒருவர் இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற 'பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)' எனக் கருதலாம். மதம் மாறிய பிறகு லெப்பை உள்ளிட்ட 7பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவர் என்பதற்கான ஜாதிச் சான்றிதழ் வழங்கலாம் என்றும் சுறப்பட்டுள்ளது. இது சட்டப்படி செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது,
மதமாற்றத்தை இந்து மதம் போல அல்லாமல் தங்களது மதங்கள் சமூக சமத்துவத்தை அளிப்பதாக கிறிஸ்தவ மிஷனரிகளும், முன்லிம் பிரச்சாரகர்களும் கூறி வரும் இத்தகைய நிலைப் பாடு இருக்கும் போது முஸ்லிம் மதத்தில் சில பிரிவுகளை 'பிற்படுத்தப்பட்டவை என்றும், மற்றவற்றை'முன் னேறியவை' என்றும் வகைப்படுத்துவது குர்ஆனின் கட்டளை களுக்கு முரணானது. இஸ்லாம் ஒரு சமத்துவ சமுதாயத்தை உரு வாக்கவே விழைகிறது இறைவனின் பார்மையில் அனைவரும் சமம். அங்கு சமூகப் படி நிலைகள் ஏதும் இல்லை.
இருப்பினும், வரலாற்று ரீதி யான காரணங்களால், முஸ்லிம் சமூகமும் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இது இந்து மதத்தில் உள்ள
ஜாதி அமைப்புக்கு இணை யானவை என்று கூட துணிந்து கூறலாம். ஜாதி எவ்வாறு பிறப் பால் தீர்மானிக்கப்படுகிறதோ. அதே போல ஒருவர் பிறப் பாலேயே லெப்பை, ராவுத்தர். மரைக்காயர் அல்லது தக்காணி முஸ்லிமாக அறியப்படுகிறார்.
சென்னை உயர்நீதிமன்றம் 75 ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பித்த உத்தரவில், 'முஸ்லிம் மதத்துக்கு மாறியவுடன் ஒருவர் முஸ்லிம் ஆகிறார்' என்று கூறப்பட்டுள்ளது. அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவுக்குள் அடக்க முடியாது. இந்த உத்தரவு அமலில் இருக்கும்போது வெறும் அரசாணையால் நீதிமன்ற உத்தரவை மாற்றியமைக்க முடியாது.
சட்டம் நிறைவேற்ற சட்டப் பேரவைக்கு அதிகாரம், தகுதி இருந்தாலும் அரசு நிர்வாகத்துக்கு அத்தகைய உரிமை இல்லை. அரசு நிறுவனம் ஒரு போதும் நீதி மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு எதிராகச் செயல்பட முடியாது. அரசுக்கு எதிரான முடிவாக இருப் பதாகக் கூறி அதை மீறுவதற்கு நினைத்தால், அது சட்ட ஆட்சியின் முடிவுக்கு வழிவகுக்கும்.
முஸ்லிம் மதத்துக்கு மாறிய வர்கள் ஏதேனும் ஒரு வகையான இட ஒதுக்கீட்டுப் பலனை தொடர்ந்து பெறுவதை உறுதி செய்ய மட்டுமே மாநில அரசு இத்தகைய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. எனவே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிக வும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9-ஆம் தேதி பிறப்பித்த அரசாணை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு முரண்பாடு என . அந்த அரசாணை ரத்துசெய்யப்படுகிறது.
இதனால், முஸ்லிமாக மதம் மாறிய ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம் என்ற அந்தஸ்தை கோர முடியாது. அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை என நிதிபதிகள் கூறியுள்ளனர். BC முஸ்லீம்கள் இடஒதுக்கீடு.7 பிரிவினர் இதைப் பெறுவார்கள். மற்ற மதங்களில் இருந்து இஸ்லாமியத்திற்கு மாறுபவர்கள் பொதுப் பிரிவாகக் கருதப்படுவார்கள். இந்து BC/MBC/DNC/SC யில் இருந்து இஸ்லாமிற்கு மாறும் போது BC முஸ்லீம்கள் அரசியலமைப்பிற்கு முரணானதாகக் கருதப்படும் 2024 ஆம் ஆண்டின் GO ஐ மட்டுமே தீர்ப்பு ரத்து செய்கிறது.







கருத்துகள்