ITR Filing கடைசி தேதி நவம்பர் 21 வரை நீட்டிப்புனு WhatsApp-ல் News பார்த்ததும் எல்லாருக்கும் Time இருக்குனு நினைச்சிடாதீங்க!
*CBDT செப் 28 அன்று வெளியிட்ட Circular No. 07/2026* படி இந்த Extension *Tax Audit தேவைப்படும் குறிப்பிட்ட Taxpayers-க்கு மட்டும் தான்.*
*மாற்றப்பட்ட தேதிகள்:*
1. *Tax Audit Report:*
பழைய தேதி: September 30, 2026
*புதிய தேதி: October 21, 2026*
2. *Income Tax Return (Audit Cases):*
பழைய தேதி: October 31, 2026
*புதிய தேதி: November 21, 2026*
இது FY 2025-26 / AY 2026-27 க்கானது.
*யாருக்கு பொருந்தும்?*
நீங்க Salary வாங்குறீங்க, Mutual Fund, Shares வாங்கி விற்கிறீங்கன்னா Tax Audit வராது. Business / Profession செய்றவங்களுக்கு Turnover, Gross Receipts, Cash Transactions, Presumptive Taxation-ஐ பொறுத்து தான் Audit முடிவாகும்.
*ஏன் ரெண்டு Date?*
Tax Audit Report தாக்கல் பண்றது ஒரு வேலை, ITR File பண்றது இன்னொரு வேலை. CA கிட்ட Bank Statements, Sales, Purchase, GST Details கொடுத்து Audit முடிக்க Oct 21 வரை Time. அதுக்கு பின் அந்த Details-ல் ITR File பண்ண Nov 21 வரை Time.
*கவனம்:* Oct 20-க்கு Documents கொடுத்தா போதும்னு நினைக்காதீங்க. Missing Entries, Reconciliation-க்கு Time வேணும். இந்த Extra Time-ஐ Postpone பண்ணாம Mistakes இல்லாம File பண்ண பயன்படுத்துங்க!
*Reference: CBDT Circular No. 07/2026, http://F.No. 225/128/2026/ITA-II dated 28.09.2026, Sec 119 & Sec 536*


கருத்துகள்