முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இமாச்சலப்பிரதேச விவசாயி உருவாக்கியுள்ள அதிக குளிர் தேவைப்படாத ஆப்பிள்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அதிக குளிர் தேவைப்படாத ஆப்பிள் வகையை உருவாக்கியுள்ளார் இமாச்சலப்பிரதேச விவசாயி மலர்வதற்கும், கனியாவதற்கும் அதிக குளிர்ந்த நேரங்கள் தேவைப்படாத வகையில் சுய மகரந்தச் சேர்க்கையில் வளரும் புதுமையான ஆப்பிள் வகையை இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார். கோடைக்காலத்தில், 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆப்பிள் விளைகிறது. மணிப்பூர், ஜம்மு, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா, சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வணிக ரீதியாக இந்த ஆப்பிள் வகையைப் பயிரிடும் பணி தொடங்கப்பட்டுள்ளதோடு, புதுச்சேரி உள்ளிட்ட  23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கனியாகும் தருவாயில்  உள்ளது. இமாச்சலப்பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பனியாலா கிராமத்தைச் சேர்ந்த முற்போக்கு விவசாயியான திரு ஹரிமன் ஷர்மா, ஹெச்ஆர்எம்என் 99 என்ற புதிய ஆப்பிள் வகையை உருவாக்கி இதர விவசாயிகளுக்கு ஊக்கமளித்துள்ளார். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் தேசிய புதும...

டிரோன் செயல்பாடுகளுக்காக தமிழ்நாட்டில் 7 இடங்கள் உட்பட 166 கூடுதல் பசுமை பகுதி இடங்களுக்கு ஒப்புதல்

உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்  டிரோன் செயல்பாடுகளுக்காக தமிழ்நாட்டில் 7 இடங்கள் உட்பட 166 கூடுதல் பசுமை பகுதி இடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது அனுமதியின்றி செயல்படக்கூடாது என்ற விதியோடு டிரோன் செயல்பாடுகளுக்காக தமிழ்நாட்டில் 7 இடங்கள் உட்பட 166 கூடுதல் பசுமை பகுதி இடங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம்  ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் ஆளில்லாத குட்டி விமான போக்குவரத்துக்கு தேவையான வசதிகளை அளித்து அதை ஊக்கப்படுத்துவதற்காக இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இடங்களில் தரை அளவை விட 400 அடி உயரத்திற்கு டிரோன்களை இயக்கலாம். 66 பசுமை பகுதி இடங்களுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ள நிலையில், ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள அனைத்து இடங்களின் பட்டியலை டிஜிட்டல் ஸ்கை தளத்தில் பார்க்கலாம் (https://digitalsky.dgca.gov.in). விதிமுறைகளின் படி, ஆளில்லாத குட்டி விமானங்களை இயக்குவதற்கு முன், டிஜிட்டல் ஸ்கை தளம் மூலம் அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாமல் டிரோன்களை இயக்கக் கூடாது. விமானப் போக்குவரத்து அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அனைத்து உத்த...

ஆபத்தான லேசர் கதிர்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கும் தன்மையுடைய இயற்கை சாயம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆபத்தான லேசர் கதிர்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கும் தன்மையுடைய இயற்கை சாயம் அவரைக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் தாவர இலையிலிருந்து கிடைக்கும் கருநீல (இண்டிகோ) சாயத்திற்கு, அபாயகரமான லேசர் கதிர்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கும் தன்மை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். லேசர் கதிர்களைத் தடுக்கும் ஒளியியல் வரம்புகளை உருவாக்க இது பயன்படக்கூடும். பெங்களூருவைச் சேர்ந்த ராமன் ஆராய்ச்சிக் கழகம் மற்றும் கென்ஸ்ரீ பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இயற்கை கருநீல சாயத்தின் ஒளியியல் தன்மைகள் பற்றி ஆய்வு செய்து, லேசர் கதிர்களிலிருந்து மனித கண்களைப்  பாதுகாக்கும் கருவியாக செயல்படும் திறனை இந்த சாயம் பெற்றிருப்பதைக் கண்டறிந்தார்கள். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி, ‘ஆப்டிகல் மெட்டீரியல்ஸ்' என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக துணிகளுக்கு இயற்கை முறையில் வர்ணம் தீட்டுவதற்கு இந்த வகையான சாயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிவியல் ஆய்வகங்களில் வழிகாட்டு நெறிமுறைகளைப் ...

தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் (TDB) நடவடிக்கைகள் கொவிட்-19 ஐ எதிர்கொள்வதில் முக்கிய பங்கு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அறிவியில் ரீதியிலான முயற்சிகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் (TDB) நடவடிக்கைகள் கொவிட்-19 ஐ எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பங்களை விரைவாகக் கொண்டுவருவதிலும், தொற்றுநோயைச் சமாளிக்க தேசத்திற்கு உதவுவதிலும் அறிவியல் அடிப்படையிலான தொடக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆராய்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்கள் திறன்களையும், இந்த பிரமாண்டமான போரை அனைத்து முனைகளிலும் எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளையும் ஒருங்கிணைத்ததால், பல அறிவியல் அடிப்படையிலான தொடக்கங்கள் (அ) முயற்சிகள் புதிய தொழில்நுட்பங்களை வெளிக்கொண்டு, தற்போதுள்ள தொழில்நுட்பங்களை மீண்டும் உருவாக்கி, அதன் செயல்பாடுகளை அளவிட்டு, அரசாங்கத்தின் ஆதரவுடன் சந்தைப்படுத்தப்படுகின்றன. இந்த காலகட்டத்தில் நாட்டை மேம்படுத்தும் வகையில் பிபிஇ கவச உடைகள், முகக்கவசங்கள், சோதனைக்கான உள்கட்டமைப்பு, தடுப்பூசிகளுக்கான ஆராய்ச்சி ஆகியவற்றின் உற்பத்தி திறனை அதிகரிக்க தற்போதுள்ள திறன், உள்கட்டமைப்பு மற்றும் வளங்கள் நிய...

காதி கைவினைக் கலைஞர்களுக்கு உதவ ரூபாய் 45 கோடி மதிப்பு ஆர்டர்களை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பெற்றுள்ளது

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்  இரண்டாவது கொவிட்-19 பொதுமுடக்கத்தின் போது காதி கைவினை கலைஞர்களுக்கு உதவும் வகையில் ரூபாய் 45 கோடி மதிப்பிலான கொள்முதலை கேவிஐசி இடமிருந்து அரசு செய்ய உள்ளது கொவிட்-19 இரண்டாவது அலையின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காதி கைவினை கலைஞர்களுக்கு உதவும் விதமாக ரூபாய் 45 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பெற்றுள்ளது. பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், இந்திய ரயில்வே மற்றும் ஏர் இந்தியா ஆகியவற்றிடம் இருந்து இந்த கொள்முதல் ஆர்டர்களை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பெற்றுள்ளது. பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்ட 6.38 லட்சம் மீட்டர் பாலி காதி துணிக்கான ஆர்டர், ரூபாய் 20.60 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் மீட்டர் பாலி காதி துணிக்கான ஆர்டராக விரிவு படுத்தப்பட்டுள்ளது. ரூபாய் 19.50 கோடி மதி...

கொவிட்-19 பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த தகவல்களை இணையதளத்தில் பதியுமாறு மாநிலங்களை தேசிய ஆணையம் தகவல்

பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்  கொவிட்-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த தகவல்களை இணையதளத்தில் பதியுமாறு மாநிலங்களை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, "பால் ஸ்வராஜ் (கொவிட்-பராமரிப்பு இணைப்பு)" எனும்  கண்காணிப்பு இணையதளத்தை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கியுள்ளது. ஆதரவு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளின் நலனை தாமதமின்றி உறுதி செய்வதற்காக ஆணையத்தின் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.  கொவிட்-19 காரணமாக பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த குழந்தைகள் குறித்த தகவல்களை இணையதளத்தில் பதியுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதோடு, குழந்தைகளுக்கான நலத் திட்டங்களுக்கு அதிக நிதி உதவி தேவைப்படும் மாநிலங்களையும் கண்டறிய முடியும். இது தொடர்பாக மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்தும...

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு கேத் ஆய்வகம்

எரிசக்தி அமைச்சகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்திய எரிசக்தித் தொகுப்புக் கழகத்தின் நிதி உதவியுடன் சிறப்பு கேத் ஆய்வகம் மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் மகாரத்னா பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் இந்திய எரிசக்தி தொகுப்புக் கழகம், கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன் தமிழகம் உள்ளிட்ட ஏராளமான மாநிலங்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. இந்தக் கழகத்தின் நிதி உதவியோடு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருதயம் சார்ந்த பிரச்சினைகளைப் பரிசோதிக்கவும், சிகிச்சை அளிக்கவும் ஓர் கேத் ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெகுவாகப் பயனடைவார்கள். இதேபோல பஞ்சாப், சிக்கிம், மிசோரம், மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தில் பெருநிறுவன சமூக பொறுப்பு நடவடிக்கையின் கீழ் ரூ. 2.66 கோடி மதிப்பில் குளிர்சாதன உபகரணங்களை இந்தக் கழகம் வழங்கியுள்ளது. லே, லடாக்கின் தொலைதூரப் பகுதிகளில் கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை மேற்கொள்வதற்கு ஏதுவாக பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய வாகனங்களையும் இந்திய எரிசக்தித் தொகுப்புக் கழகம்...