முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

முகலாயத் தோட்டம் மார்ச் 16, 2022 வரை குடியரசுத் தலைவர் மாளிகையின் 35 ஆம் எண் நுழைவாயில் வழியாகவே பார்வையாளர்கள் அனுமதி

முகலாயத் தோட்டம் குடியரசு தலைவர் மாளிகையில் மார்ச் 16, 2022 வரை (பராமரிப்பு தினமான திங்கட்கிழமை மற்றும் அரசிதழ் விடுமுறை தினமான மார்ச் 01, 2022 தவிர) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (கடைசி நபர் நுழைவு மாலை 4 மணி) பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கும்  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு மணி நேர அளவிலான 7 முன்பதிவு செய்யப்பட்ட நேர ஒதுக்கீடுகள்  உள்ளன.  கடைசி நபர் நுழைவு மாலை 4 மணியாகும்.  ஒவ்வொரு ஒருமணிநேரத்திற்கும் அதிகபட்சமாக 300 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்.  இந்த பயணத்தின் போது பார்வையாளர்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.  நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.   முகக்கவசம் அணியாத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  குடியரசுத் தலைவர் மாளிகையின் 35 ஆம் எண் நுழைவாயில் வழியாகவே பார்வையாளர்கள் உள்ளே சென்று வர வேண்டும். முன்பதிவு செய்வதற்கான இணைய தள முகவரி https://rashtrapatisachivalaya.gov.in or https://rb.nic.in/rbvisit/visit_plan.aspx.

இராஜஸ்தானில் ₹250 கோடி மதிப்பீட்டில் மரபு கழிவுகளுக்கு தீர்வு காண இந்திய அரசு ஒப்புதல்.

இராஜஸ்தானில் ₹250 கோடி மதிப்பீட்டில் மரபு கழிவுகளுக்கு தீர்வு காண இந்திய அரசு ஒப்புதல். புவியியல் ரீதியாக மிகப்பெரிய மாநிலமான ராஜஸ்தான், 3.4 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது, ஆரவல்லி மலைத்தொடர், பாரத்பூரின் கியோலேடியோ தேசிய பூங்கா, ரந்தம்பூர் தேசிய பூங்கா மற்றும் முகுந்த்ரா ஹில்ஸ் புலிகள் காப்பகம் போன்ற பலவற்றுடன் இயற்கையுடன் பழமையான உறவைப் பகிர்ந்து கொள்கிறது. அதன் மக்கள்தொகையில் 25% (2011 கணக்கெடுப்பின் படி) நகர்ப்புறங்களில் வசிக்கும் நிலையில், 3.5 லட்சத்திற்கும் அதிகமான தனிநபர் வீட்டுக் கழிப்பறைகளையும் 31,000 க்கும் மேற்பட்ட சமூக மற்றும் பொது கழிப்பறைகளையும் நகர்ப்புற குடியிருப்பாளர்களுக்காக 2014 முதல் தூய்மை இந்தியா திட்டத்தின்  பல்வேறு திடக்கழிவு மேலாண்மை முன்முயற்சிகளின் மூலம் அம்மாநிலம் கட்டியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 198 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நாள் ஒன்றுக்கு 4,800 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் உருவாகின்றன. இந்தக் கழிவுகளில் 28% மட்டுமே அறிவியல் பூர்வமாக செயலாக்கப்படுகிறது. துங்கர்பூர் போன்ற நகரங்கள் முன்னுதாரணமாக பணியாற்றும் போதிலும், மூலத்திலேயே ...

மத்தியக் கல்வித் துறை மொழிச் சான்றிதழ், செல்ஃபி இயக்கத்தை தொடங்கியுள்ளது

மொழிச் சான்றிதழ், செல்ஃபி இயக்கத்தை மத்தியக் கல்வித் துறை தொடங்கியுள்ளது நாட்டின் கலாச்சார பன்முகத் தன்மை மற்றும் பன்மொழி பயன்பாட்டை ஊக்குவித்து, ஒன்றுபட்ட பாரதம்-வலிமையான பாரதம் என்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக, மத்திய கல்வித் துறை, மொழிச் சான்றிதழ் செல்ஃபி இயக்கத்தை தொடங்கியுள்ளது. மத்திய கல்வித் துறை மற்றும் மை-கவ் இந்தியா ஆகியவை இதற்கென பாஷா சங்கம் என்ற செல்போன் செயலியை உருவாக்கியுள்ளன.  இந்த செயலியை பயன்படுத்தி, அட்டவணையிடப்பட்ட 22 இந்திய மொழிகளில் மக்கள்  அன்றாடம் பயன்படுத்தும் 100+ வாக்கியங்களை கற்றுக் கொள்ளலாம்.  இந்த முயற்சி மக்கள் இந்திய மொழிகளில் அடிப்படை பேச்சுத் திறன் பெறுவதை உறுதி செய்யும்.  மொத்தம் 75 லட்சம் மக்கள் இதுபோன்ற அடிப்படை பேச்சுவார்த்தை திறனை அடையச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  செல்போன் பயன்படுத்துவோர் தங்களது ஆன்ட்ராய்டு மற்றும் ஐ ஓ எஸ் செல்போன்களில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதில் 22 இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அனைத்து நிலைகளையும் முடித்து, தேர்வில் பங்கேற்று, சான்றிதழை பெறலாம். இந்த சான்றிதழுடன்  ம...

உக்ரைனிலிருந்து முதல் கட்டமாக 270 இந்திய மாணவர்கள் மீட்பு.

 உக்ரைன் அதிபர்  வொலாடிமிர் ஜெலென்ஸ்கி உடன் பிரதமர் உரையாடல் பேச்சு உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசினார். உக்ரேனில் தற்போது நிலவி வரும் போர் சூழல் குறித்து பிரதமரிடம் அதிபர் ஜெலென்ஸ்கி விளக்கமாக எடுத்துரைத்தார். நடைபெற்றுவரும் போரின் காரணமாக ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் சொத்துகளின் சேதம் குறித்து பிரதமர் தமது ஆழ்ந்த வேதனையைத்  தெரிவித்தார். உடனடியாக வன்முறையை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு தாம் விடுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், அமைதி முயற்சிகளுக்கு தன்னால் முடிந்த அளவுக்குப்  பங்களிக்க இந்தியா தயாராக இருப்பதாகக்  கூறினார். உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்புக்  குறித்து பிரதமர் தமது ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்தினார். இந்தியர்களை அங்கிருந்து விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்றுவதற்கு உக்ரேனிய அதிகாரிகளின் உதவியை அவர் கோரினார்.  உக்ரைனிலிருந்து முதல் கட்டமாக 270 இந்திய மாணவர்கள் மீட்பு. உக்ரைன் - ருமேனியா எல்லை வழியே பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். ருமேனியா தலைநகர்...

படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி (OFT) 75 ஆம் ஆண்டு பிளாட்டினம் விழாவில் மரம் அறக்கட்டளை இணைந்து அமைத்த பழப்பண்ண தோட்டம்

படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி (OFT)  தமிழ்நாட்டிலுள்ள பாதுகாப்புத் தொழிற்சாலை . 329 & 366 - DSC.DET,OFT இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் கீழ் இயங்கும் 41 படைக்கலத் தொழிற்சாலைகளில் ஒன்றாகும்.  1947 முதல் உறுவானது கடந்த  1966 ஆம் ஆண்டு ஜுலை மூன்றாம் நாள் அன்று அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது.  மேலும் உற்பத்தி 1967 ல் துவங்கியது.            படைக்கலத் தொழிற்சாலை இஷாபூர் மற்றும் சிறிய ஆயுத தொழிற்சாலை, கான்பூர் ஆகியவற்றிற்கு உதவியது. 1965 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போருக்குப் பிறகு இந்த தேவை உணரப்பட்டது . படைக்கத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி (OFT) , ஆர்ட்னன்ஸ் ஃபேக்டரி திருச்சி என அழைக்கப்படுகிறது , இது திருச்சிராப்பள்ளியில் மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் எக்யூப்மென்ட் இந்தியா லிமிடெட் மூலம் இயக்கப்படும் ஒரு சிறிய ஆயுதத் தொழிற்சாலை ஆகும் , இது முன்னர் இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தின் ஒரு பகுதியாக இருந்தது . நிறுவ...