வளர்ச்சியடைந்த பாரதத்திற்காக வளரிளம் பெண்களை அதிகாரப்படுத்துதல் கடந்த ஜூன் 24 அன்று தொடங்கப்பட்ட நவ்யா (வளரிளம் பெண்களுக்கான தொழில் பயிற்சி மூலம் விருப்பங்களை நிறைவேற்றுதல் ) முன்முயற்சி, வளர்ந்து வரும் துறைகளில் வேலைகளுக்கு இளம் பெண்களைத் தயார்ப்படுத்தும் நடவடிக்கையாகும். இது, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் முன்னோடி கூட்டு முயற்சியாகும். அவர்களிடையே நம்பிக்கை, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் மனப்பான்மையை வளர்ப்பதே இதன் நோக்கமாகும். உத்தரப்பிரதேசத்தின் சோன்பத்ராவில் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தகுதியுடன் 16–18 வயதுடைய பெண்களுக்கானது. இது குறிப்பாக பின்தங்கிய மற்றும் பழங்குடிப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களை உள்ளடக்கியதாகும். டிஜிட்டல் மார்க்கெட்டிங், சைபர் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் சேவைகள், கிராஃபிக் வடிவமைப்பு, ட்ரோன் அசெம்பிளி, தொழில்முறை ஒப்பனை கலைஞர், சிசிடிவி மற்றும் சோலார் தகடுகள் நிறுவல் போன்ற பாரம்பரியமற்ற மற்றும் வளர்ந்து வரும் வேலைகளில் தேவை...
RNI:TNTAM/2013/50347