முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கோனப்பட்டி பறிமுதல் செய்யப்பட்ட முருகன் திருமேனியை கமிட்டியிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

 கோயம்பத்தூர் மாவட்டம் ஏழாம் படைவீடான மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைப்பதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் எனச் சுட்டிக்காட்டி, அப்பகுதியில் 500 மீட்டர் சுற்றளவில் பெரிய கட்டுமானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. அதே நிலைதான் திண்டுக்கல் மாவட்டம் சாணார் பட்டி வட்டாரம் கோணப்பட்டி மலையில் ஜோதி முருகன் கோயிலில் இருந்து அகற்றப்பட்ட சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் தான் உள்ளன என நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். இது போன்ற வழக்குகளில், "அரசு புறம்போக்கு நிலத்தில் முருகனும் வேண்டாம், சிலுவையும் வேண்டாம்" என்பது போன்ற கருத்துகள், அனுமதி பெறாமல் வைக்கப்படும் சிலைகளை அகற்றுவது தொடர்பான சட்ட ரீதியான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளன. உரிய அனுமதி பெறாமல் கட்டப்படும் புதிய வழிபாட்டுத் தலங்களை அனுமதிக்கக் கூடாது என்ற விதிமுறை இங்கு முக்கிய...

ஆசை துறந்த புத்தனும், போதைக்கடத்தல் பேராசை கொண்ட பிக்குகளும்

ஆசை துறந்த புத்தன். ஆசை கொண்ட பிக்குகள்! இது மஹாயானமா? ஹீனயானமா? தாய்லாந்தில் இருந்து ரூபாய் .100 கோடி மதிப்புள்ள 110 கிலோ போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்தி வந்த 22 புத்த பிக்குகள் கொழும்பு விமானநிலையத்தில் கைதாகினர். வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக இலங்கை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், தலைநகர் கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது, தாய்லாந்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு நாடு திரும்பிய 22 புத்த பிக்குகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அவர்கள் கொண்டு வந்த பைகளில் பள்ளி உபகரணங்கள், பல்வேறு இனிப்புகளுடன் 110 கிலோ போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு துறவியின் பையில் இருந்தும் தலா 5 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூபாய் .100 கோடி ஆகும். இதையடுத்து, 22 புத்த பிக்குகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். புத்தவிஹா...

செவ்வாய் கிழமை முருகன் வழிபாடு திருச்செந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்

செவ்வாய் கிழமை முருகன் வழிபாடு திருச்செந்தூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் இன்று இரவு 11 மணிக்கு மதுரை பயணம் அங்கிருந்து சாலை மார்க்கமாக நாளை அதிகாலை திருச்செந்தூர் செல்கிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்."ஞானச் செருக்கின் வடிவேல்! - நல் ஞாலத் தவர்உயர் வடிவேல்! ஈனப் பிறவி அறுக்கும் - எங்கள் ஈசன் மகனடிப் போற்றும் வடிவேல்! தூய அடியவர் நெஞ்சே - நிலை தோன்றும் பிரணவ மந்திர வேல்! மாயச் சுழலை அறுக்கும் - இந்த மாண்புயர் ஞானத்தின் வேல்! அசுரனை அழித்த செந்தூர் வடி வேல் " தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் சுற்றுப்பயணங்களின் போது தொண்டர்களால் வழங்கப்படும் முருகன் வேல்-ஐ கையில் ஏந்தி உற்சாகமாக போஸ் கொடுக்கிறார். குறிப்பாக, திருச்சிராப்பள்ளி மற்றும் திருநெல்வேலி ரோடு, காரைக்குடி ஷோக்களில் வேல் மற்றும் கட்சிக் கொடியுடன் அவர் மக்களை சந்தித்த காட்சிகள் உண்டு . இது அவரது காணிக்கை வேல் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய குறியீடாகப் பார்க்கப்படுகிறது வேலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, காரைக்குடி போன்ற இடங்களில் தொண்டர்கள் விஜய்க்கு வேல், வாள், ம...

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய 7 எம்பிக்கள் பாஜக-வில் இணைந்ததற்கு மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல்

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய 7 எம்பிக்கள் பாஜக-வில் இணைந்ததற்கு மாநிலங்களவைத் தலைவரும் துணைக் குடியரசுத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல்.         நாடாளுமன்ற    மாநிலங்களவையில் பா.ஜ.க-வின் பலம் 113-ஆக உயர்வு: 7 ஆம் ஆத்மி எம்.பி-க்களின் இணைப்பை ஏற்றார் அவைத் தலைவர். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய ராகவ் சத்தா உள்ளிட்ட 7 மாநிலங்களவை உறுப்பினர்களும் பா.ஜ.க-வில் இணைவதற்கு மாநிலங்களவை தலைவர் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளார். இதன் மூலம் நாடாளுமன்ற மேலவையில் பாரதிய ஜனதா கட்சியின் பலம் கணிசமாக அதிகரித்துள்ளது. ``ஊழலை ஒழிக்க வந்த கட்சியே ஊழலில் மூழ்கிவிட்டது’’ ``நேர்மையான அரசியலை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, ஊழலின் கூடாரமாக மாறிவிட்டது. ஊழலை ஒழிக்க வந்த கட்சியே இன்று ஊழலில் மூழ்கிவிட்டது’’ கடந்த 18 ஆண்டுகளாக கெஜ்ரிவாலுடன் இணைந்து பயணித்த சுவாதி மாலிவால் கட்சியிலிருந்து விலகிய பின் பரபரப்புக் குற்றச்சாட்டு

தமிழ் தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு சுமத்தி அதைக் காரணமாக முன்னிறுத்தி மே மாதம் 2 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யத் தீர்மானம் நிறைவேற்றியது, பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையும் அளிக்கிறது. எனவும்  தயாரிப்பாளர்களின் பிரச்னைகளுக்கு சுமூகத் தீர்வு காண அமைப்பு ரீதியாக வேண்டுகோள் விடுத்த போதெல்லாம் சந்திப்புகள் நிகழ்த்தியும், பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் உறுதுணையாக தென்னிந்திய நடிகர் சங்கம் இருந்து வரும் நிலையில், தன்னிச்சையாக இந்த வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது வருத்தத்திற்குரியது. நடிகர்கள், கலைஞர்கள் அனைவரது வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வேலை நிறுத்தம் என்னும் அணுகுமுறையை என்றுமே தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரித்ததில்லை, இனியும் ஆதரிக்காது. அத்துடன் தென்னிந்திய நடிகர் சங்கம் ஒருபோதும் தனது உறுப்பினர்களை வேலை நிறுத்தம் செய்யுமாறு அறிவுறுத்த சட்ட விதிகளில் இடமில்லை.ஓர் ஆண்டுக்கு முன்னரே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னெடுப்பினால், தமிழ் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் இரு தரப்பினருக்கும் இடையே இணக்கமான சூழலை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்த வரைவை இறுதி செய்து ஒப்படைத்...

ஊழல் நிறைந்த தொலைக்காட்சி மற்றும் ஊடக நெறியாளர்களின் உலகம்

தமிழ்நாட்டு தொலைக்காட்சி மற்றும் ஊடக நெறியாளர்களின் உலகம் இன்று ஊழல் நிறைந்த கேவலமான அரசியல் சூழ்ச்சிகளின் மையமாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் செய்திகளை நடுநிலையுடன் வழங்கி பொதுமக்களின் கண்ணாக இருந்தவர்கள் இன்று சேனல் உரிமையாளர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடனமாடும் கோலாக மாறியே விட்டனர். அவர்களது நிலைப்பாடுகள் பெரும்பாலும் கட்சி சார்புடையவையாகவும், நெறியாளுகை பாணி உணர்ச்சிவசப்படுத்தும் கூச்சல்களாலும், ஒருதலைச்சார்பான தாக்குதல்களாலும் நிரம்பியுள்ளன. தமிழ்நாட்டில் திமுக சார்ந்த சன் நியூஸ், கலைஞர் தொலைக்காட்சி ஜமக வின் புதிய தலைமுறை, வேந்தர் தொலைக்காட்சி , நாடார்கள் சங்கமாகவே மாறிய தந்தி டிவி பாமக வின் மக்கள் தொலைக்காட்சி, வி. கே.சசிக்கலா நடராஜன் ஆதரவு ஜெயா தொலைக்காட்சி, பிரேமலதா வின் கேப்டன் தொலைக்காட்சி, எடப்பாடி கே பழனிசாமி நடத்தும் ஜெ தொலைக்காட்சி விசிக நடத்தும் வெளிச்சம் தொலைக்காட்சி,  காங்கிரஸ் வசந்த் தொலைக்காட்சி மெகா தொலைக்காட்சி, மற்றும் திமுக சார்ந்த ஹிந்து நாளேடு, நக்கீரன் வார இதழ் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் என்ற கூலிப் பேசசாளர்கள் உள்ளிட்ட முக்கிய அச்சு ஊடக ம...

ஒருங்கிணைந்த, தடகளத்தை மையமாகக் கொண்ட பார்வையை பட்டியலிட ‘ஸ்ரீநகர் கேல் சங்கல்ப்’

மாண்புமிகு மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, இந்தியாவின் விளையாட்டு எதிர்காலத்திற்கான ஒருங்கிணைந்த, தடகளத்தை மையமாகக் கொண்ட பார்வையை பட்டியலிட ‘ஸ்ரீநகர் கேல் சங்கல்ப்’ தொடங்கினார். ஸ்ரீநகர் கேல் சங்கல்ப் விளையாட்டு வீரர்களை மையப்படுத்திய மற்றும் கூட்டு விளையாட்டு சூழலுக்கு ஒருங்கிணைந்த அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறது ஸ்ரீநகரில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் விளையாட்டு அமைச்சர்களின் சிந்தன் ஷிவிரின் 2 ஆம் நாள் விளையாட்டு நிர்வாக சீர்திருத்தங்கள், உற்பத்தி சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது ஸ்ரீநகர் கேல் சங்கல்ப் இந்தியாவின் விளையாட்டு சூழலை வலுப்படுத்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மையத்தின் ஒருங்கிணைந்த தீர்மானத்தை குறிக்கிறது விளையாட்டு நிர்வாகம், உற்பத்தி மற்றும் இளைஞர்களின் பங்கேற்பு ஆகியவை சித்தன் ஷிவிரின் நிறைவு அமர்வுகளில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஸ்ரீநகர், ஏப்ரல் 26, 2026: ஸ்ரீநகரில் மூன்று நாள் சிந்தன் ஷிவிரின் இறுதி நாளில், ஸ்ரீநகர் கேல் ...