2012 ல் டெல்லி நிர்பயா பாலியல் கொலைக் குற்றவாளிகளுக்கு 01.02.2020ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு நீதிமன்றம் இறுதி மரணவாரண்ட் உத்தரவு
அணைவரும் எதிர்நோக்கும் கருணையில்லாத கொடும் குற்றவாளிகளின் தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் வழங்கப்பட வேண்டும் எனவும் 'நிர்பயா' என்ற பெயரால் அறியப்படும் பெண்ணின் பெற்றோர் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மிகக் கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு நம்நாட்டில் நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்தாலும், 2015க்குப் பிறகு யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1990 ல் நடந்த மும்பை வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளி யாகூப் மேமனுக்கு நிறைவேற்றப்பட்டது தூக்குத்தண்டனை விதிப்பதில் இந்தியாவை விட மற்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. 2018ல் நான்கு நாடுகளில் அதிகம் உலக அளவில், நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கை குறைவு. கடந்த பத்து ஆண்டுகளில் பா இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது என்று சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பின் மனித உரிமைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
கொலைகள் மற்றும் பாலியல் வன்முறைக் கொலைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 2018ல் இவற்றின் எண்ணிக்கை முறையே 45 மற்றும் 58 என இருந்தது. இந்தத் தண்டனைகள் இந்திய குற்றவியல் சட்ட விதிகளின் (1860)ன் கீழ் நிறைவேற்றப் படுகின்றன.
மத்திய மாநில அரசுகளின் வேறு 24 சட்டங்களின் கீழ் மரண தண்டனை விதிக்க வழி வகை உள்ளன சுதந்திரம் பெற்றதில் இருந்து, அதிகபட்ச எண்ணிக்கையில் மரண தண்டனைகள் உத்தரப் பிரதேசத்தில் என டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் தொகுப்புத் தகவலில் அறியலாம்
சுதந்திரத்திற்குப் பிறகு, அந்த மாநிலத்தில் 354 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கடுத்த இடத்தில் ஹரியானாவில் 90, மத்தியப் பிரதேசத்தில் 73 ம் மற்ற மாநிலங்களில்
2018 ஆம் ஆண்டில் புதிதாக 162 பேருக்கு மரண தண்டனைகள் விதிக்கப் பட்டுள்ளதாக தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொகுப்பு தெரிவிக்கிறது. முந்தைய ஆண்டைவிட அது 50 சதவீதம் அதிகம். சுமார் 20 ஆண்டுகளில் அதுதான் அதிகபட்ச எண்ணிக்கை. ஆந்திராவின் புதிய சட்டப்படி
பாலியல் வன்முறைக் கொலைக் குற்றங்களுக்கு நல்ல சட்ட தீர்வு வந்தது நம் நாட்டு நீதிமன்றங்கள் மூலம் 2018ல் மரண தண்டனை விதிக்கப்பட்ட எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட 35 சதவீதம் அதிகம். சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதால் நிறைய பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் 250ம் வங்கதேசத்தில் 229ம் உலக அளவில், 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை சற்று குறைவு 2017ல் இந்த எண்ணிக்கை 2,591 ஆக இருந்த நிலையில், 2018ல் அது 2,531 ஆகக் குறைந்திருந்தது.
கடந்த ஆண்டுகளில் 690 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம் செய்யும் சர்வதேச பொது மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டைவிட இது 30 சதவீதம் குறைவு.
2018ல் பதிவு செய்யப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றங்களில் 80 சதவீதம், நான்கு நாடுகளில் நடந்துள்ளது:
அரிதாக கடந்த நவம்பர் மாதம் வியட்நாம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில், கடந்த ஆண்டு 85 மரண தண்டனைகளை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும், மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் தகவல்கள் அரசு ரகசியமாகக் கருதப்படுவதால், முந்தைய ஆண்டுகளில் எவ்வளவு பேருக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என்பது பற்றி நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை.
நிர்பயா வழக்குக் குற்றவாளிகளுக்கு நமது குடியரசுத்தலைவர் கருணையற்றவர்களின் கருணை மனுவை நிராகரித்ததால் இவர்கள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட மரண வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது
ஏறத்தாழ 7 ஆண்டுகள் கடந்தும், அந்தச் சம்பவத்தின் கோரம் இன்னும் மறையவில்லை. இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் நிகழ்ந்த அந்தச் சம்பவம், இந்தியாவில் வாழும் பெண்களின் அவலநிலையை உலகத்திற்குக் காட்டியது. வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவிக்கு ஆதரவாகப் பல்லாயிரக் கணக்கானோர் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்ய வீதியில் இறங்கினர். தொடர்ந்து அடக்குமுறை, ஆணாதிக்கம், வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், முதலானவற்றுக்கு உள்ளாகும் இந்தியப் பெண் சமூகம், வன்கொடுமை செய்து தாக்குதலுக்கு உள்ளான அந்தப் பெண்ணுக்கு சூட்டிய பெயர், 'நிர்பயா'. 'நிர்பயா' என்றால் 'பயமற்றவள்' என்று பொருள்.
வழக்கில் கைதான 6 பேரில், ஒருவர் சிறார். ராம் சிங் என்ற குற்றவாளி, 2013-ம் ஆண்டு திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காவல்துறை தரப்பில் தற்கொலை என்று சொல்லப்பட்டாலும், ராம் சிங்கின் வழக்கறிஞரும் குடும்பத்தினரும் அதைக் கொலை என்றே கருதுகின்றனர். குற்றவாளிகளோடு இருந்த சிறாருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. மற்ற நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு, நிராகரிப்பு ஆகியவற்றைக் கடந்து, தற்போது நால்வருக்கும் ஜனவரி 22-ம் தேதியன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
திகார் சிறை தூக்குத் தண்டனைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. வரும் ஜனவரி 22-ம் தேதியன்று காலை 7 மணிக்கு, நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாகூர், முகேஷ் ஆகிய நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. வன்கொடுமை வழக்கு ஒன்றில், நாட்டிலேயே முதல்முறையாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதால், திகார் சிறையில் பரபரப்பு நிலவுகிறது.
'டெல்லி சிறை விதிகள் 2018' என்ற விதிமுறைகளின்படி, தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கு என்னென்ன விதிகள் பின்பற்றப்படுகின்றன என்று கூறப்பட்டிருக்கிறது. சிறைக் கண்காணிப்பாளருக்குத் தண்டனையை நிறைவேற்றும் நேரத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் வழங்கப்படுகிறது. தண்டனை நிறைவேற்றும் நேரம் குறித்த அறிக்கையை அவர் காவல்துறை உயரதிகாரி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, அரசு ஆகியோருக்கு அனுப்புவார். பொதுவாக, அதிகாலை வெளிச்சம் வருவதற்கு முன்பே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்; அதற்கான நேரத்தை ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்றவாறு அரசு வெளியிடும். சிறைவாசிகள் யாருக்கும் தூக்குத் தண்டனையைப் பார்வையிட அனுமதி கிடையாது.
முதலில், பொதுப்பணித்துறையைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் ஒருவர், தண்டனை நிறைவேற்றப்படும் தூக்குமேடையை 4 நாள்களுக்கு ஒரு முறை பார்வையிடுவார். தண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்கு முந்தைய நாள் மாலை, சிறைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் தலைமைப் பொறியாளர் தூக்கு மேடையை நேரில் பார்வையிட வேண்டும். தூக்குத் தண்டனைக்குப் புதிய கயிற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று விதிகளில் குறிப்பிடப்படவில்லை. எனினும் தூக்குக்கயிறு பலமுறை சோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கைதியைவிட, ஒன்றரை மடங்கு அதிக எடையுள்ள மணல் மூட்டையை, ஏறத்தாழ 1.83 மீட்டர் முதல் 2.44 மீட்டர் வரையிலான நீளம் கொண்ட கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு, கயிற்றின் பலம் பரிசோதிக்கப்படும். ஒவ்வொரு கைதிக்கும் 2 கயிறுகள் கூடுதலாக வைக்கப்பட்டிருக்கும். தண்டனையின்போது, கயிற்றில் பிரச்னை ஏற்பட்டால், அதற்கு மாற்று ஏற்பாடாக இந்தக் கயிறுகள் பயன்படும்.
அடுத்ததாக, தண்டனை நிறைவேற்றப்படும் நாளுக்கு 4 நாள்களுக்கு முன்பு, மருத்துவ அதிகாரி ஒருவர் கைதியின் எடைக்கு ஏற்ப, எவ்வளவு நீளத்தில் அவரது உடல் தொங்கவிடப்பட வேண்டும் என்பதைக் கணக்கிடுவார். எடை அதிகமாவதற்கேற்ப நீளம் குறைக்கப்படும்.
கைதியின் எடை 45.36 கிலோவுக்குக் கீழ் இருந்தால், தூக்குமேடையிலிருந்து தரைக்கு 2.44 மீட்டர் நீளத்தில் தொங்கவிடப்படுவார்; 45.33 கிலோ முதல் 60.33 கிலோ வரை எடையுள்ள கைதிக்கு, 2.29 மீட்டர் தூரமும், 60.33 கிலோ முதல் 75.33 கிலோ வரை எடையுள்ள கைதிக்கு 2.13 மீட்டர் தூரமும், 75.33 கிலோ முதல் 90.72 கிலோ வரை எடையுள்ள கைதிக்கு, 1.98 மீட்டர் தூரமும் உடலைத் தொங்கவிடுவதற்கான நீளமாக நிர்ணிக்கப்பட்டிருக்கின்றன. 90.72 கிலோ எடைக்கும் அதிகமாக உள்ள கைதிக்கு, 1.83 மீட்டர் நீளம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கைதிகளின் உயரம், எடை ஆகியவற்றின் விவரங்கள் ஏற்கெனவே சிறைத்துறையின் பதிவுகளில் இருந்தாலும், தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு 4 நாள்களுக்கு முன்பு, அவை மீண்டும் அளவிடப்படும். தூக்குக் கயிற்றின் நீளம், உடல் தொங்கவிடப்படும் உயரம் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பு, மருத்துவ அதிகாரிக்கு வழங்கப்படும். தூக்குக் கயிறு, பருத்தி அல்லது மணிலாவால் தயாரிக்கப்படும். அதன் சுற்றுவட்டம் 2.59 முதல் 3.81 சென்டிமீட்டர் வரை இருக்கும்.
சிறை
கைதியின் இடது காதுக்குக் கீழ் தாடைப் பகுதியிலிருந்து, கைதியின் உயரம் துல்லியமாக அளவிடப்படும். கயிறு தொங்கவிடப்பட்டுள்ள இடத்திலிருந்து, கீழே கட்டப்பட்டிருக்கும் இடம் வரையிலான நீளம் கணக்கிடப்படும். கைதியின் கழுத்தின் சுற்றளவு கணக்கிடப்படும். இந்தக் கணக்குகளை வைத்து, தூக்குத் தண்டனை ஒத்திகை நடைபெறும். ஒத்திகை சரியாக நடந்து முடிந்த பிறகு, கயிற்றின் சுருக்குப் பகுதியில் மெழுகு அல்லது வெண்ணெய் தடவப்பட்டு, இரும்புப் பெட்டி ஒன்றில் வைத்து பூட்டி வைக்கப்படும். அது, சிறையின் துணை கண்காணிப்பாளரின் பொறுப்பில் அளிக்கப்படும்.
சிறையின் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், மருத்துவ அதிகாரி, சிறையின் மருத்துவர் ஆகியோர் தண்டனை நிறைவேற்றப்படும் வரை இருக்க வேண்டும். மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அல்லது துணை மாஜிஸ்ட்ரேட் தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பு, கையெழுத்திட வேண்டும். தண்டனை பெறும் கைதி விரும்பினால், அவரின் மத நம்பிக்கைக்கு ஏற்ப மத குரு ஒருவர், பாதுகாப்பு மற்றும் சிறை விதிமுறைகள் ஆகியவற்றை மீறாமல் அனுமதிக்கப்படுவார். அரசு சிறப்பு ஆணை பெற்ற ஆய்வாளர்கள், மனநல நிபுணர்கள் ஆகியோருக்கு சிறப்பு அனுமதி உண்டு.
திகார் சிறை
ஆயுதம் தாங்கிய சிறைக் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடலாம். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு, கைதியின் உடல் சிறை வளாகத்தை விட்டு வெளியேற்றப்படும் வரை, எந்தச் சிறையும் திறக்கப்படாது. கைதிகள், தங்கள் சிறையிலேயே இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன.
தூக்குத் தண்டனை எப்படி நிறைவேற்றப்படும்?
தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு சிறைக் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர், மாவட்ட மேஜிஸ்திரேட், மருத்துவ அதிகாரி ஆகியோர் கைதியின் சிறைக்குச் சென்று அவரை சந்திப்பார்கள். கைதியின் கையெழுத்து தேவைப்படும் ஆவணங்கள், அவரது உயில், முதலானவை சிறைக் கண்காணிப்பாளர், மாவட்ட மேஜிஸ்திரேட் ஆகியோரின் பார்வையில் கைதியால் கையெழுத்திடப்படும்.
அதன்பிறகு, சிறைக் கண்காணிப்பாளர், மாவட்ட மேஜிஸ்திரேட், மருத்துவ அதிகாரி ஆகியோர் தூக்குமேடைக்குச் சென்றுவிடுவர். கைதியுடன் துணை கண்காணிப்பாளர் இருக்கலாம். தூக்குமேடை தயார்செய்யப்பட்டதும், துணை கண்காணிப்பாளர் காவலர்களுடன், கைதியின் கையைப் பின்னால் கட்டி அழைத்து வருவார்கள். முன்னால் இரு காவலர்கள், பின்னால் இரு காவலர்கள், ஒவ்வொரு கையையும் பிடித்துக்கொள்ள, இரு காவலர்கள் என மொத்தம் 6 காவலர்கள் கைதியைத் தூக்குமேடைக்கு அழைத்து வருவார்கள்.
சிறைக் கண்காணிப்பாளர், மாவட்ட மேஜிஸ்திரேட்டிடம் கைதியை நேரில் அடையாளம் கண்டதாகவும், கைதிக்குப் புரியும் மொழியில் அவருடைய தண்டனை வாரண்ட் படித்துக் காட்டப்பட்டதாகவும் கைதி முன்னிலையில் உறுதியளிப்பார். பருத்தியால் செய்யப்பட்ட முகமூடியால் கைதியின் முகம் மூடப்படும். தூக்கு மேடையைப் பார்வையிடுவதற்கு, கைதிக்கு அனுமதியில்லை. தூக்கு மேடையில் ஏற்றப்பட்டு, கைதியின் கழுத்தில் சுருக்கு மாட்டப்படும் வரை, கைதியின் இரு கைகளையும் பிடித்தவாறு பாதுகாப்புக் காவலர்கள் இருக்க வேண்டும். சிறைக் கண்காணிப்பாளர் சிக்னல் தந்ததும், தண்டனையை நிறைவேற்றுபவர் லீவரைப் பிடித்து இழுக்க, தூக்கு மேடையில் தரைத்தளம் திறக்கும்.
தூக்கு மேடை
தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, 30 நிமிடங்களுக்கு கைதியின் உடல் தூக்குக்கயிற்றில் தொங்கவிடப்படும். அதன்பிறகு, சிறை மருத்துவர் கைதி இறந்துவிட்டதை உறுதி செய்வார். தூக்குத் தண்டனையை நிறைவேற்றுபவருக்கு, டெல்லி மாநில அரசு ஒவ்வொரு கைதிக்கும் ஏற்ப தனித்தனியாக சம்பளம் வழங்கும்.
தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு இறந்த கைதியின் உடலை, அவரது மத நம்பிக்கைக்கு ஏற்ப இறுதிச் சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்யப்படும். கைதியின் உறவினர்கள் உடலை வாங்கும் பட்சத்தில், காவல்துறையின் பாதுகாப்போடு, கைதியின் இறப்பு, பொது நிகழ்வுகள் எதுவும் இல்லாமல், அஞ்சலி செலுத்துவதற்காக அளிக்கப்படும். சிறையிலிருந்து கைதியின் உடல் தகனம் செய்வதற்காக ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்படும். அதற்கான வாடகையை சிறைக் கண்காணிப்பாளர் அளிக்க வேண்டும். தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது என்பதை வாரண்ட்டில் பூர்த்திசெய்து, காவல்துறை தலைமைக்கும் நீதிமன்றத்திற்கும் அனுப்ப வேண்டியது சிறைக் கண்காணிப்பாளரின் பொறுப்பு.
கருத்துகள்