இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும்.
இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும் இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதியில் துவக்கம்.
ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 2ஆம் நாள் முதல் 8ஆம் திருநாள் வரை தினந்தோறும் காலையில் சுவாமி வெள்ளிக் கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். 2ஆம் திருநாளான செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதியில் இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 3 ஆம் திருநாளான செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதியில் இரவு பூதகண வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.
4ஆம் திருநாளான செப்டம்பர் .8ஆம் தேதியில் இரவு கமல (தாமரை) வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 5 ஆம் திருநாளான செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியில் இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 6ஆம் திருநாளான செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதியில் மாலை 5.00 மணியளவில் கஜமுக சூரசம்காரம் நடைபெறும். 7ஆம் திருநாளான செப்டம்பர் மாதம் .11 ஆம் தேதியில் இரவு மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 8ஆம் திருநாளான செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதியில் இரவு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 9ஆம் திருநாளான செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி தேரோட்டத்தை முன்னிட்டு காலையில் திருத்தேருக்கு கற்பக விநாயகர் சுவாமி எழுந்தருளல் நடைபெறும். அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் விநாயகர் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுக்க வலம் வரும் தேர் உள்ளிட்ட தேர்கள் மாலையில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 10 ஆம் திருநாளான செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி திங்கட்கிழமை காலையில் கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு ராக்ஷ்ஸ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெறும். அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை 16 குடும்பங்கள் சார்ந்த ஆண்டுக்கு முறை மாறுதலாகும் இரண்டு குடும்பத்தின் கோயில் பரம்பரை நிர்வாக அறங்காவலர்களான கோனாபட்டு அரு.ராமசாமி செட்டியார், அரிமளம் நா.கண்ணன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர் அதற்கு முன்னோட்டமாக நகரத்தார் மகளிர் அமைப்பு சார்ந்த நபர்கள் இணைத்து கோவிலில் கிழக்கு கோபுர வாசல் அருகில் .கலர் பெயிண்ட் மூலம் அழியாத கோலமிடுவது வெறும் அழகுக்காக மட்டுமல்லாமல், ஆன்மீகம், ஆரோக்கியம் மற்றும் அறிவியல் ரீதியாக பல நன்மைகளைக் கொண்டுள்ளது. அதன் முக்கிய நன்மைகள் இதோ அறிவியல் மற்றும் உடற்பயிற்சி: அதிகாலையில் குனிந்து, நிமிர்ந்து கோலமிடுவது சிறந்த யோகாசனம் போன்ற உடற்பயிற்சியாகும். புள்ளிகளை இணைத்து கோலம் போடும் போது கவனம் குவிந்து, மன அழுத்தம் குறைகிறது. சிக்கலான கோலங்கள் போடுவது மூளையின் செயல்பாட்டையும், நினைவாற்றலையும் தூண்டுகிறது. அதிகாலையில் குனிந்து கோலமிடும்போது வயிற்றுப் பகுதிகள் அழுத்தப்பட்டு செரிமானம் சீராகிறது. அரிசி மாவால் கோலமிடுவதால் எறும்பு, பறவைகள் போன்ற சிறு உயிரினங்களுக்கு உணவாகிறது. தூய்மையான, கோலமிட்ட இடங்களில் லட்சுமி தேவி வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை.கோவிலின் பிரகாரத்தில் போடப்படும் கோலங்கள் அங்குள்ள நேர்மறை அதிர்வுகளை ஈர்க்கின்றன. வண்ணக் கோலங்கள் மற்றும் பச்சரிசி மாவு கோலங்கள் எதிர்மறை ஆற்றலை தடுத்து நிறுத்தும். விசேஷ நாட்களில் பச்சரிசி மாவை நனைத்து போடும் மாக்கோலம் கோவிலுக்கு மங்களகரமான தோற்றத்தைத் தரும். பண்டிகை காலங்களில் மலர்களால் இடப்படும் கோலங்கள் நறுமணத்தையும், அமைதியையும் தரும் பூக்கள் மூலம்.
பெயிண்ட் கோலம் மழையிலோ, பக்தர்கள் மிதிப்பதாலோ எளிதில் அழியாது. தினமும் புதிதாகக் கோலம் போடும் வேலை மற்றும் நேரம் மிச்சமாகிறது. வண்ணமயமான பெயிண்ட் கோலம் பார்ப்பதற்கு பளிச்சென்று, அழகாகத் தோன்றும்
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோலக் குழு எனும் நகரத்தார் பண்பாடு கலாச்சாரம் கலந்த இந்தக் குழு பத்தாண்டுகாலமாக செயல்படுகிறது
இந்தக் கோலக் குழவின் தலைவியான மீனா சிதம்பரம் நகரத்தார் கோயில்களிலும் இப்பணியைச் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் 10 வருடங்களுக்கு மேலாக இத்திருபணியை செய்து வருகிறார். இவர்கள் ஹிரணிக்கோயில் உட்பிரிவைச் சார்ந்ததவர் புதுவயல் கைலாச விநாயகர் கோயிலில் தொடங்கி தொடர்ந்து மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயில் உட்பட இன்று பிள்ளையார்பட்டி வரை இந்தத்தொண்டை மிக நேர்த்தியாக, முழு உபயதாரராகச் செய்யும் குடும்பம் பிறரிடம் எந்த ஒரு உதவியையும் எதிர் பார்க்காமல் 30 முதல் 50 நபர்கள் வரை வைத்து கோயில் முழுவதும் கோலம் போட்டு சிறப்பாக இத்திருப்பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்ற தகவலை அதில் பங்கு பெற்ற காரைக்குடி மெ. சோலையாச்சி தெரிவிதார்கள்.
இன்று ..மகர ராசியின் 10 டிகிரி முதல் 23 டிகிரி 20 நிமிடங்கள் வரை பரவி இருக்கும் நட்சத்திரம் திருவோணம் நாள் இன்று இறைவன் வாமனராக வந்த அவதார தினம் வேத வானவியலில் 22வது நட்சத்திரம் நவீன வானவியலில், திருவோணம் என்பது a Altair, B மற்றும் y Aquilae ஆகியவற்றைப் போல் உள்ளது. மலையாளத்தில் கொல்லவருஷம் சிங்கம் மாதம் , அஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது கேரளாவின் முக்கிய அறுவடைத் திருவிழாவாகும் மஹாபலி மன்னர் தன் மக்களைக் காண பூமிக்கு வரும் நாளாக நம்பப்படுகிறது. பூக்கோளம் அமைத்தல், ஓணம் சத்யா (100 வகையான உணவுகள் கொண்ட விருந்துணவு), புலிப்பளி மற்றும் வல்லம்கலி (படகுக் போட்டி) ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். திருவோண நட்சத்திரம் மகாவிஷ்ணுவுக்கு உரிய நாளாகும். வாமனர் அவதரித்த நாளாகவும் இதைக் கருதுகின்றனர்.













கருத்துகள்