முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2019  இந்தியப்பொருளாதாரம்-டாக்டர்சுப்ரமணியன் சுவாமி

                  சரிவுப்பாதையில் இந்தியபொருளாதாரம்-டாக்டர்சுப்ரமணியன் சுவாமி
 2019  இந்தியப்பொருளாதாரம்  
ஏப்ரல்-ஜூன் காலாண்டில்நாட்டின்பொருளாதார வளர்ச்சி 5% ஆகக் குறைந்து 6 ஆண்டுகளில்இல்லாத சரிவைச் சந்தித்துள்ளதையடுத்து பலபொருளாதார நிபுணர்களும் விமர்சனங்களை தொடுத்து வரும் நிலையில் இப்போதே துரிதமாகச் செயல்பட்டு புதிய பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கவில்லையெனில் பெரிய சரிவையே சந்திக்க நேரிடும் என்று பாஜக தலைவரும் ராஜ்ய சபா எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
புதிய பொருளாதாரக் கொள்கை எதுவும் வரவில்லை எனும்போது 5 ட்ரில்லியன் பொருளாதாரமாக மாறும் என்ற கருத்துக்கு பிரியாவிடை கொடுத்து விடத் தயாராகுங்கள். தைரியம் மட்டுமே அல்லது அறிவு மட்டுமே பொருளாதாரத்தைச் சரிவிலிருந்து மீட்டு விடாது, இரண்டுமே தேவை, ஆனால் இன்று நம்மிடம் இரண்டுமே இல்லை.
என்று பதிவிட்டுள்ளார்.


மேலும் இவரது ட்வீட்டை முன் வைத்து ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்று சுப்பிரமணியன் சுவாமியிடம் பேட்டி கண்ட போது
அவர் கூறியதாவது:
இப்போது எரியும் இந்தப் பிரச்சினை செய்தித்தாள்களில் கட்டுரையாக வருகிறது, நாட்டின் பல்வேறு பேச்சுகளிலும் இது பேசப்பட்டு வருகிறது, ஆனால் எனக்கு இது புதிதல்ல. நான் கூறிவருவது என்னவெனில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சில காலவரம்புகளை நிர்ணயித்தது. அதனை நாம் விரவச்செய்ய முடியவில்லை. திரு.ஜேட்லி இதனை செய்ய முடியவில்லை காரணம் அவருக்கு பொருளாதாரம் தெரியாது. அவர் பயிற்சி பெற்ற பொருளாதாரவாதி அல்ல. பிரதமரும் கூட முறைப்படி பொருளாதாரம் கற்றவர் அல்ல.
ஆகவே நான் என்ன கூற வருகிறேன் என்றால் அந்தரத்தில் தொங்குவதன் தொடக்கத்தில் இருக்கிறோம்.
 2015-ல் இதைத்தான் நான் தி இந்து (ஆங்கிலம்) செய்தித்தாளில் கட்டுரையாக எழுதியிருந்தேன். அதுமுதலே நான் பல எச்சரிக்கைகளை விடுத்தேன் பிரதமருக்கு எழுதினேன் ஆனால் என்ன நடந்தது எனில் 2015 முதலே நம் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இப்போது 5% ஆகக் குறைந்து விட்டது, அதுவும் தற்போதைய விலை நிலவரங்களின் படி 5%, ஆனால் மாறா விலை (Constant prices) நிலவரங்களின் படி 3.5% வளர்ச்சிக்கு மேல் இருக்காது என்றே நினைக்கிறேன். இது உண்மையான வீழ்ச்சியாகும் அதாவது இதை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.
சிறு மற்றும் குறுந்தொழில்கள் மூடப்பட்டு வருகின்றன, வங்கிகளும் சரிவைச் சந்தித்துள்ளன, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மூடப்படும் சூழ்நிலையில் இருக்கின்றன. ஆகவே நாம் பொருளாதார சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்தச் சூழ்நிலையில் 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கு, அதாவது 5 ஆண்டுகளின் ஜிடிபியை இரட்டிப்பாக்குவது, 2024-ல் 5 ட்ரில்லியன் பொருளாதாரமாகும் என்று இலக்கு வைக்கின்றனர். இது ஆண்டுக்கு 14.5% வளர்ச்சி விகிதமாகும். ஆண்டு ஒன்றிற்கு 14.5% வளர்ச்சியில் சென்றால்தான் 5 ட்ரில்லியன்பொருளாதார இலக்கை எட்ட முடியும்.
ஆனால் உங்கள் கணக்கீட்டின் படியே 5% வளர்ச்சியையே தாண்ட முடியவில்லையே? மேலும் வரும் காலமும் ட்ரெண்ட் கீழ்நோக்கிச் செல்கின்றன.
 ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தவறுகளை சரி செய்யாமல் நாம் இப்போது விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இது குறித்து புத்தகம் ஒன்று எழுதியுள்ளேன் அது விரைவில் வெளிவருகிறது, அதில் சரிவை எப்படி சரி செய்யலாம் என்று தெரிவித்துள்ளேன்.
நான்எவ்வளவோ கூறியும் இந்த அரசு காதில் வாங்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக நான் எது கூறினாலும் அவர்கள் காதில் வாங்கவே இல்லை. ஆகவே உடனடியான தீர்வுகளை நான் ஏன் சொல்ல வேண்டும், என் கருத்துகளை விற்க நான் தயாராக இல்லை. அவர்களுக்கு தேவைப்பட்டால் என்னிடம் ஆலோசிக்கட்டும் நான் அவர்களுக்குத் தெரிவிப்பேன். பொருளாதாரத்தில் ஒரு அளவு கோல் என்பதில்லை. இது பல அளவுகோல்களை ஒருங்கிணைப்பதாகும். ஏனெனில் பெரும்பொருளாதாரம் என்பது பொதுச்சமனமாக்க ஒழுங்கமைப்பு.
 நான் சில விஷயங்களைக் கூறினேன் உதாரணமாக வருமானவரியை ரத்து செய்தல், வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்றேன். பிக்ஸட் டெபாசிட்டுக்கு 9% ஆக வட்டியை அதிகரிக்கவும் என்றும் ஆலோசனை தெரிவித்தேன். ஆனால் இவையெல்லாம் அவர்கள் காதில் விழவில்லையே.
எனவே 2015 முதலே நான் கூறிவருவது என்னவெனில் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கிச் சென்று கொண்டேதான் இருக்கும் என்பதே. 2015க்கு முன்னரே இதற்கான தீர்வை நோக்கி தொடங்கியிருக்க வேண்டும். வெறுமனே வங்கிகளை இணைப்பது மூலம் இதனைச் சரி செய்து விட முடியாது, ஏனெனில் இதுவும் வேலையின்மையைத்தான் உருவாக்கும். ஆட்சியதிகார விவகாரங்கள் மூலம் இதனை சரி செய்து விட முடியுமா? ஆகவே இது பொருளாதாரம் பற்றிய புரிதலின்மையை பறைசாற்றுகிறது. ஆகவே நான் கூறுவதெல்லாம் அந்தரங்கத்தில் தொங்கும் நிலை கீழே விழுவதில்தான் முடியும்.
என தெரிவித்தார் டாக்டர்  சுப்பிரமணியன் சுவாமி.இந்த வருடத்தின் கடைசியில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தை தொட்டால் அது நமது அதிர்ஷ்டம்.
அதே சமயம் அரவிந்த் சுப்ரமணியன் சொன்னதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சந்தேகத்துக்குரிய கணக்கீட்டு முறையால் இந்த ஆட்சியில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி என்றால், அதை உண்மையில் 1.5% அளவில் குறைத்துதான் நாம் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் சிதம்பரம் கூறினார்.
இந்த பொருளாதார மந்த நிலையை அரசு (வர்த்தக) சுழற்சியால் ஏற்படுவது என்றே இந்த அரசு கூறுகிறது. ஆனால் இது கட்டமைப்பு சிக்கல்களால் ஏற்பட்ட மந்த நிலை. சுழற்சி சிக்கலுக்கும், கட்டமைப்பு சிக்கலுக்கும் இவர்களுக்கு வேறுபாடு தெரியவில்லை.
அதற்கான காரணங்கள் தெளிவாக தெரிகிறது. ஆனால் இந்த அரசு அதனை ஒப்புக் கொள்ள மறுக்கிறது என்கிறார் சிதம்பரம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...