இரமநாதபுரம் சேதுபதிகளின் சீமையிலிருந்து தனது மகளின் சீதனமாக சிவகங்கையும், மைத்துனன் பாக விடுதலையாக புதுக்கோட்டையும்,3 ல் இரண்டு பங்கு சேதுபதி வைத்துக்கொண்டு மீதி பங்கில் இரண்டு சமஸ்தாணம் இதுவே வரலாறு... 'ஸ்ரீமான் ஹிரன்யகிரப இரவிகுல இராஜ முத்து விஜய இரகுநாத இராஜ இரகுநாத தேவ சேதுபதி' (எ) கிழவன்சேதுபதி. ஆட்சிசெய்த காலம் பொது ஆண்டு 1671 முதல் 1710 வரை இராமநாதபுரம் சிற்றரசை வளர்த்து ஒரு சக்திவாய்ந்த இராஜ்யமாக மாற்றினார்.ருஷ்டம் கானின் கொடுங்கோலிலிருந்து மதுரை நாயக்கரைக் காப்பாற்றினார், தஞ்சாவூர் மன்னருக்கு எதிராகத் தொடர் போர்களில் வெற்றி பெற்றார்.
மதுரை சொக்கநாத நாயக்குருக்கு உதவியாக இருந்ததால் இவருக்கு பர இராஜகேசரி அதாவது அயல் நாட்டு அரசர்களுக்கு சிங்கம் என்ற பட்டத்தையும் பெற்றார் மதுரை பாண்டிய நாட்டின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக அறந்தாங்கி, பிறான்மலை, திருமயம் போன்ற பகுதிகளை தன் சேதுபதி நாட்டுடன் இணைத்தார்.மதம் வளர்க்க வந்த கிறித்துவ மிஷினரிகளின் நடவடிக்கைகளை எதித்தார். மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்து கிருஷ்ண சேதுபதி மறவர் நாட்டை விடுவித்தார்.17 ஆம் நூற்றாண்டுகளில் ராமநாதபுரம் சமஸ்தானம் மிகப்பெரிய சமஸ்தானமாக இருந்தது. இன்றைய சிவகங்கை, விருதுநகர்,மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளை உள்ளடக்கியது தான் அன்றைய இராமநாதபுரம் சமஸ்தனமாகும். 1674 முதல் 1710 வரை ராமநாதபுரம் சமஸ்தானத்தின் 7 வது மன்னர் கிழவன் சேதுபதி.அவர் மறைவுக்கு பின் அவரது மகன் விஜய ரகுநாத சேதுபதி 8 வது மன்னரானார். சிவகங்கை அருகில் நாலுகோட்டை என்ற சிற்றுரை மையமாக வைத்த ஆரூர்வட்டகை நாட்டில் ஆட்சி புரிந்த சசிவர்ண பெரியஉடையனத்தேவரின் வீரத்தை அறிந்து தனது ஒரே மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை மணமுடித்து தனது வீரர்களில் 1000 படை வீரர்களையும், இன்றைய சிவகங்கை நகரை அப்போது தான் புதிதாக நிர்மாணம் செய்து முக்கிய பகுதிகளான பறம்புமலை(பிரான்மலை) சிங்கம்புணரி, திருப்பத்தூர், திருமயம், காளையார்கோவில், தொண்டி, திருப்புவனம் போன்ற பகுதிகளையும் தொன்டி துறைமுகமும், சீதனமாக அளித்து வரி வசூலிக்கும் உரிமையை அளித்தார். விஜய ரகுநாத சேதுபதிக்குப் பின் சுந்தரேசுவர சேதுபதி 9வது மன்னரானார். அவரை கிழவன் சேதுபதி மகன் பவானி சங்கரன் சிறைபடுத்தி 10 வது மன்னராக தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டார். பவானி சங்கரன் மன்னரான பின் சிவகங்கை மன்னர் சசிவர்ணத் தேவர் மீது படையெடுத்து சிவகங்கையை தன் ஆளுமைக்கு உட்படுத்தியதுடன். பின் சுந்தரேசுவர சேதுபதி தம்பி கட்டயத்தேவனை நாட்டை விட்டு துரத்தினார். ஒரு நாள் சசிவர்ணத்தேவர் சிவகங்கைக் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அங்கு தவம் செய்து கொண்டிருந்த சாத்தாப்பையா என்ற முனிவரை சந்தித்தார். அந்த முனிவர் சசிவர்ணத்தேவரை பார்த்த உடனே நடந்தது அனைத்தையும் தெரிவித்தார். பின் சில மந்திரங்களை அவரிடம் சொல்லிவிட்டு தஞ்சை மன்னர் துளஜாஜி பற்றியும் அவர் வளர்க்கும் புலியை பற்றித் தெரிவித்து அந்த புலியை கொன்று உன் வீரத்தை காண்பித்து அந்த மன்னரிடம் உதவி கேள் என்று சொன்னார். சசிவர்ணத்தேவர் தன் தளபதியாகவும் மெய்க்காப்பாளராகவும் இருந்த மருது சகோதரர்களை அந்த புலியை கொன்று தன் நாட்டின் வீரத்தை நிருபணம் செய்தார். இவருக்கு முன்னமே அங்கு அடைக்கலம் புகுந்த கட்டயத்தேவர் இவரின் வீரத்தை பார்த்து அவரை அடையாளம் கண்டு கொண்டார். பின்னர் இருவரின் நிலைமையை புரிந்து கொண்ட தஞ்சை மன்னர் தன் படைகளை அளித்து பவானி சங்கரன் மீது போர் தொடுத்து பொது ஆண்டு 1730 இல் உறையூர் போரில் பவனிசங்கரனை வீழ்த்தி ராமநாதபுரத்தை மீட்டு கட்டயத்தேவர் மன்னரானார்.
சிவகங்கை சமஸ்தானத்தில் முதலாம் மன்னர் கௌரிவல்லப சசிவர்ணத்தேவர்
உறையூர் போரில் வென்றபின் ராமநாதபுரத்தை ஐந்து பகுதிகளாய் பிரித்து அதில் இரண்டு பகுதிகளில் ஒரு பகுதியை சசிவர்ணத்தேவருக்கு அளித்து ராஜா முத்துவிஜயரகுநாத பெரியஉடையத்தேவர் என சோழபுரம் ஆலயத்தில் பெயரும் முடியும் சூட்டி சிவகங்கைச் சீமையின் மன்னராக்கினர். இராணி மங்கம்மாளின் படைகளைத் தோற்கடித்த பின், மன்னர் திருமலை சேதுபதியை அடுத்து சேதுநாட்டின் மன்னர்களான இராஜ சூரிய தேவரும், அதன ரெகுநாத சேதுபதியும் சிறிது காலத்திற்குள் காலமாகி விட்டதால் இந்த மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் பொதுஆண்டு 1678ல் இரகுநாதசேதுபதி (எ) கிழவன் சேதுபதி முடிசூட்டப் பெற்றார். திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலம் போன்றே இவரது ஆட்சிக்காலமும் நீடித்தாலும் அவரது சாதனைகளை விஞ்சிச் சாதனைகள் படைக்க இயலவில்லை காரணம் இவருக்கு உட்பகை மிகுதியாகவும் நாட்டில். குழப்பங்களை ஏற்படுத்தின. என்றாலும் அவை அனைத்தையும் தமது அறிவாற்றலினாலும், போர்த் திறமையாலும் முறியடித்தார். மிகுந்த தொல்லை கொடுத்த சேதுபதி அரச குடும்பத்தினரும் செருவத்தி பாளையத்தின் தலைவருமான திரையத் தேவர்.
கள்ளர் சீமை என்று வழங்கிய சேது நாட்டின் வட பகுதியை(ஐந்து நிலை நாடு சார்ந்த திரூக்களாம்பூர்) திருமலை சேதுபதி மன்னர் தமது நாட்டின் ஒரு பகுதி எல்லையாக மாற்றி அமைத்தார், தற்பொழுதைய புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அன்று அறந்தாங்கிப் பகுதி நீங்கலாகக் கள்ளர் சீமை என வழங்கப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்த குடிமக்கள் மிகப் பெரும்பாலோர் கள்ளர் என்ற இனத்தவர். இவர்களது தலைவராக திருகளம்பூர் பூர்வீகமான வசிக்கும் குளத்துர் பகுதி ரெகுநாதராய தொண்டைமான் இருந்து வந்தார். பேராற்றல் மிக்க இந்த வீரரையும் இவரது சகோதரர் நமனத் தொண்டைமானையும் இராமநாதபுரத்திற்கு சேது மன்னர் வரவழைத்து அவர்களுக்கு மிக உயர்ந்த இராணுவப் பதவிகளை வழங்கி இருந்தார் என, இராமநாதபுரம் மேனுவலில் வரையப் பெற்றுள்ளது.
இந்த இரு சகோதரர்களது தங்கையான காதலி நாச்சியார் என்பவரும் சிறந்த வீராங்கனையாக விளங்கியதால் அவரை மன்னர் விரும்பிய நிலையில் தந்தை 45 மனைவிகளுக்கும் வாரிசுகள் இல்லை என்பதால் தமது பட்ட மகிஷியாக ஏற்றுக்கொண்டார். மன்னரைப் போன்று இந்தப் பெண்மணியும் ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை காட்டி வந்தார் தஞ்சைப் பேரரசின் இராஜ இராஜ சோழனது அன்புக் கிழத்தியான உலக மகாதேவியைப் போன்று இராணியார் சில அறக் கொடைகளை வழங்கியிருப்பதை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இராமேஸ்வரம் திருக்கோயிலில் கோயில் உள்துறைக் கட்டளைக்கு திரு உத்திரகோச மங்கையை அடுத்த மேலச் சீத்தை என்ற கிராமத்தை பொதுஆண்டு. 1693ல் இந்த இராணியார் வழங்கியதைச் செப்பேட்டு வாசகம் ஒன்று தெரிவிக்கின்றதுஅடுத்ததாக 1720 ல் திருஉடையார்பட்டி(கழனிவாசல்)பிரம்மதாயம். அடுத்து பொது ஆண்டு 1709ல் தனுஷ்கோடியில் அந்தணர்களது அக்கிரஹாரம் அமைவதற்கு தேவகோட்டைப் பகுதி களத்தூர் எனற கிராமத்தை இவர் தானம் வழங்கியது இன்னொரு செப்பேட்டின் மூலம் தெரியவருகிறது. இவைகளைப் போன்றே சேதுப் பயணிகளது பயன்பாட்டிற்கென எம்மண்டலமுங் கொண்டான் என்ற கிராமத்தினைத் தானமாக வழங்கியதை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த அன்ன சத்திரம் இன்றும் இராமநாதபுரம் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி என்ற இடத்தில் செயலற்று இருந்து வருகிறது. அந்தக் கிராமம் இன்று என்மனம் கொண்டான் என்ற பெயரில் வழக்கில் உள்ளது.
திருமெய்யம் பாளையக்காரன் சிவந்தெழுந்த பல்லவராயர் என்பவர், சேது நாட்டின் வடக்கில் அமைந்திருந்த காவல் அரணாகிய திருமெய்யம் கோட்டையின் பொறுப்பில் இருந்தவர். அப்பொழுது நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழ்நிலையில் சிவந்தெழுந்த பல்லவராயர் தஞ்சை மராட்டியருடன் இரகசியமான தொடர்பு கொண்டு இருந்ததை. அறிந்த மன்னர் விசாரணைக்காக அவரைத் தமது அரசவைக்கு அழைக்க அவர் வர மறுத்ததால் அவரைக் கொன்றோழித்துவிட்டு அவரது பணிக்கு மைத்துனர் இரகுநாதத் தொண்டைமானை நியமனம் செய்தார். இவரது உடன் பிறந்தவரான காதலி நாச்சியார் என்பவரைச் சேது மன்னர் ஏற்கனவே தமது மனைவியாகக் கொண்டிருந்தார். இதனால் மன்னரது நம்பிக்கைக்கு உரியவராக இரகுநாத தொண்டைமான் கருதப்பட்டார். என்றாலும் மன்னரது மைத்துனர் என்ற உறவையும் மீறித் திருமெய்யம் உள்ளிட்ட புதிய புதுக்கோட்டை தன்னரசினை இவர் விரும்பக் காரணமானதால் மன்னர் மிகுந்த சீற்றம் அடைந்த பொழுதிலும் தொண்டைமானைத் தண்டிக்க முற்படவில்லை. மனைவி காதலி நாச்சியாரின் வேண்டுதல் ஒருபுறமும், தெற்குச் சீமையில் எழுந்த கலவரங்களும் மன்னரை மற்றொரு புறமுமாகத் தடுத்துவிட்டன சேதுநாட்டில் கிறித்துவ சமயப்பணி
அப்பொழுது மதுரை கிறித்தவ சபையைச் சேர்ந்த ஜான் டி பிரிட்டோ என்ற போர்ச்சுகல் நாட்டுப் பாதிரியார் சேது நாட்டின் வடபகுதியில் மதமாற்றம் செய்ய வந்தபொழுது செருவத்திப் பாளையக்காரரும் அந்த பாதிரியாரிடம் ஞானஸ்நானம் பெற்றுக் கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்டார். அன்றைய சூழ்நிலையில் பாண்டிய நாட்டு கிறித்துவ சமயத்தை ஏற்ற ஒவ்வொரு குடிமகனும் போர்ச்சுகல் நாட்டு மன்னரது குடிமகன் என்ற தகுதியைப் பெறும் வாய்ப்பு இருந்தது. இதனால் செருவத்தி பாளையக்காரருக்குப் போர்ச்சுகல் நாட்டு மன்னரது உதவி கிடைத்தால்..” இத்தகைய சிந்தனையில் ஆழ்ந்த சேது மன்னர் பிரிட்டோ பாதிரியாரைச் சோழ மண்டலத்திற்கு நாடு கடத்தி உத்தரவிட்டார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய ஜான் டி பிரிட்டோ பாதிரியார் பொது ஆண்டு 1692ல் மீண்டும் சேது நாட்டிற்கு வந்து மக்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் சமயத்தொண்டை மேற்கொண்டார். இதனால் சினமுற்ற, மன்னர், செருவத்தி பாளையக்காரரது தலையீட்டையும் புறக்கணித்துப் பாதிரியாருக்கு மரண தண்டனை வழங்கினார்.இது ஓரியூர் சம்பவம் இந்தக் கடுமையான நடவடிக்கையினால் சேதுபதி மன்னரது கடைசி எதிரி செருவத்தி பாளையக்காரரும் ஒழித்துக் கட்டப்பட்டார்.ஆகவே மதமாற்ற தடைச்சட்டம் சேதுநாடுதான் முதன்மையாக அமல் படுத்தியது ஏனலாம்
மற்றுமொரு மன்னருக்கு எதிரான கிளர்ச்சி சாயல்குடி பகுதியில் எழ மன்னர் அந்தப் பகுதிக்கு முகாம் சென்ற பொழுது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஏழு பாளையக்காரர்கள் குடிமக்களைத் திரட்டி மன்னரைத் தீர்த்துக் கட்ட ஏற்பாடு செய்திருந்தனர். தற்செயலாக இந்தச் சதியினைக் கேள்வியுற்ற மன்னர் சதிகாரர்களான பாளையக்காரர்களை ஒருவர் பின் ஒருவராகத் தம்மைச் சந்திக்குமாறு செய்து அவர்களைத் தனித்தனியாகக் கொன்று ஒழிக்க ஏற்பாடு செய்தார். இத்தகைய கடுமையான எதிர் நடவடிக்கைகளினால் குழப்பம். கிளர்ச்சி, சதி என்ற சிக்கல் சேது நாட்டு அரசியலிலிருந்து அகன்று விட்டன. இப்பொழுது மன்னர் அமைதியாகப் பல ஆக்கப் பணிகளில் ஈடுபட்டார்.
திருப்பணிகள்
தமது முன்னோர்களைப் போல இராமேஸ்வரம் திருக்கோயிலில் திருப்பணிகள் பலவற்றை மேற்கொண்டார். இராமேஸ்வரம் திருக்கோயிலில் அன்றாட பூஜை முதலிய கைங்கரியங்களுக்குத் திருவாடானை வட்டம் இராஜசிங்கமங்கலம் ஏரியின் 48 மடைகளில் ஒரு மடை வழியாக வெளிப்படும் வெள்ளப் பெருக்கினால் வேளாண்மை நடைபெறுகின்ற நிலப்பரப்பு முழுமையையும் இந்த மன்னர் பொதுஆண்டு. 1697ல் தானமாக வழங்கினார். இதன் காரணமாக இந்த மடை பின்னர் இராமனாத மடை எனப் பெயர் பெற்றது. மேலும் இந்தக் கோயிலில் நடைபெறும் ‘'தேவர் கட்டளை” என்ற ‘'உச்சி கால கட்டளை'’பூஜை முதலிய நிகழ்ச்சிகளைச் சரிவர நடக்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக இராமேஸ்வரம் சங்கரக்குருக்கள் மகன் ரகுநாத குருக்களைத் தமது சொந்தப் பிரதிநிதியாக நியமித்து அவருக்குத் திருக்கோயிலில் வழங்கப்பட வேண்டிய மரியாதைகள் முதலியனவற்றை நிர்ணயம் செய்ததை இந்த மன்னரது இன்னொரு செப்பேட்டுச் செய்தி மூலம் தெரியவருகிறது. இந்தக் கோவிலின் நடைமுறைகளைக் கவனிப்பதற்கு என ஆதீனகர்த்தர் ஒருவர் இருந்து வந்தபொழுதிலும் ரெகுநாத குருக்கள் புதிதாக ஏன் நியமனம் செய்யப்பட்டார் என்ற வினா உண்டு . இத் திருக்கோயிலின் உச்சிக்காலக் கட்டளையை இந்த மன்னரது முன்னோரான முதலாம் சடைக்கத்தேவர் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆதலால் சேதுபதி மன்னர் இந்தக் கட்டளையை மிகப் புனிதமான செயலாகக் கருதி அதனைச் செம்மையாக நாள் தவறாமல் நிறைவேற்றுவதைக் கண்காணிப்பதற்கு ரெகுநாத குருக்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. மற்றும் திருக்கோயிலுக்கு வருகைதருகின்ற பயணிகளுக்கு இராமேஸ்வரத்தில் அன்னசத்திரம் ஒன்றினை நிறுவி அதன் பராமரிப்புக்கு உதவுவதற்காக முதுகுளத்துர் வட்டம் நல்லுக்குறிச்சியை சர்வமானியமாக வழங்கியதை பொது ஆண்டு .1691ல் செப்பேடு தெரிவிக்கின்றது.அந்தச் சத்திரம் இன்றும் இராமேஸ்வரம் மேலரத வீதியில் நடத்தப்பட்டு வருகிறது.
தமது முன்னவரான திருமலை ரகுநாத சேதுபதி மன்னரைப் போன்று வைணவ திருத்தலமான திருப்புல்லாணித் திருக்கோயிலின் பூஜை திருவிளக்கு. நந்தவனம், ஆடித்திருவிழா போன்ற திருப்பணிகளுக்காக இராமநாதபுரம், முதுகுளத்துர், பரமக்குடி வட்டாரங்களில் உள்ள இருபத்தி ஏழு கிராமங்களை இந்த மன்னர் அந்தக் கோயிலுக்குத் தானமாக வழங்கியிருப்பது வியப்பிற்குரிய செய்தியாக உள்ளது.அதுவரை சேதுபதி மன்னர் எவரும் ஒரு கோவிலுக்கு ஒரே நேரத்தில் இவ்வளவு எண்ணிக்கையிலான கிராமங்களைத் தானம் வழங்கியது வரலாற்றில் காணப்படவில்லை. கண்டுகொண்டமாணிக்கம் நாடு இராமேஸ்வரம் கோவில் நிவந்தம் இன்னொரு வைணவத் திருத்தலமான திருக்கோட்டியூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு செளமிய நாராயணப் பெருமாளுக்கும் சில அறக்கொடைகளை வழங்கினார். கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வேடுபாரித் திருவிழாவிற்கு வழங்கியுள்ள கிராமங்கள் பற்றிய கல்வெட்டு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த அரிய நிகழ்ச்சி இந்த சேதுபதி மன்னர் தம்மைச் சார்ந்துள்ள சைவ சமயத்தைப் போன்று வைணவம், சமணம், இஸ்லாம் ஆகிய சமய நிறுவனங்களுக்கு இயல்பான சமயப் பொறையுடன் அறக்கொடைகளை வழங்கியிருப்பதை அவரது செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் தெரிவிக்கின்றன.
இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டத்தில் உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் தர்மத்திற்காக உத்தார நாட்டு கானுர் கிராமத்தைத் தானமாக வழங்கியிருப்பதை அங்குள்ள பொதுஆண்டு 1696ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு தெரிவிக்கின்றது.மேலும் இந்த மன்னர் கீழ்க்கண்ட திருக்கோயில்களுக்கு அறக்கொடைகளை வழங்கியிருப்பதைச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. திருச்சுழியல் வட்டம் காரேந்தல் கிராமத்து முஸ்லிம் மக்களது தொழுகைப் பள்ளியைப் பராமரிப்பதற்காக இந்த மன்னர் அந்த ஊரினைப் பள்ளிவாசல் தர்மமாக வழங்கியதை இராமநாதபுரம் சமஸ்தானம் நில மானியக் கணக்கு தெரிவிக்கின்றது.சேதுபதி மன்னர்களது ஆட்சியில் குத்தகை நாடு என வழங்கப்பெற்ற அறந்தாங்கிப் பகுதியில் இயங்கி வந்த முருகப்பன் மடம் தர்மத்திற்காகப் பகையணி, பிராந்தணி, திருப்பொற்கோட்டை ஆகிய மூன்று ஊர்களை பொதுஆண்டு 1692ல் தானமாக வழங்கினார்.
சேது நாட்டின் வடக்கே கிழக்குக் கடற்கரைப் பட்டினமான சுந்தரபாண்டியன் பட்டினத்தில் அக்கிரஹார தர்மத்திற்காகவும். அந்த ஊரின் தென்மேற்கே உள்ள திருவேகம்பத்து ஏகாம்பர நாதசாமி கோயிலுக்கும் பொதுஆண்டு 1695ல் கொந்தாலன் கோட்டை, பொன்னுக்கு மீண்டான், சிறுகவயல், கரிசல்குளம், எட்டிசேரி, மருங்கூர், உடையநாத சமுத்திரம் ஆகிய ஏழு கிராமங்களைத் தானமாக வழங்கினார்.
சேது நாட்டின் வடபகுதியில் உள்ள தென்னிலை நாட்டில் அமைந்துள்ள எழுவன் கோட்டையில் எழுந்தருளியிருக்கும் எழுவாபுரீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி ஆலயங்களின் பூஜை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகியவைகளுக்காக இடையன்வயல், கள்ளிக்குடி, புதுக்கோட்டை ஆகிய மூன்று கிராமங்களை பொதுஆண்டு 1694ல் தானமாக வழங்கினார். இராமநாதபுரத்தை அடுத்த மிகச்சிறந்த சைவத் திருத்தலமாகிய திரு உத்தரகோசமங்கை திருக்கோயிலுக்கு திருஉத்தரகோசமங்கை கிராமத்தையும், அதனை அடுத்துள்ள கிராமங்களையும் பொதுஆண்டு 1678ல் தானமாக வழங்கியுள்ளார்.
சேதுநாட்டின் சிறந்த பழம்பெரும் துறைமுகமான கீழக்கரையில் அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்கு ஏற்கனவே திருமலை சேதுபதி மன்னர் புல்லந்தை முதலிய கிராமங்களை வழங்கியதை முன்னர் பார்த்தோம்.
இந்தக் கோயிலில் பணியாற்றிய இராமலிங்க குருக்களுக்குத் தகுந்த வருவாய் இல்லாததை உணர்ந்த ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னர் அந்த ஊரின் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி ஆகின்ற பொருள்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மகமையாகக் குருக்கள் பெற்றுக் கொள்வதற்கான உரிமை வழங்கியதை பொதுஆண்டு 1678 அவரது செப்பேடு தெரிவிக்கின்றது
இத்தகைய தெய்வீகத் திருப்பணிகளில் முனைப்பாகயிருந்த சேதுமன்னர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தக்க துணையாக வாழ்ந்து வந்தார். மிதிலைப்பட்டி, அழகிய சிற்றம்பலக் கவிராயரை ஆதரித்துச் சிறப்பித்தார். திருமருதூர் என்னும் நயினார் கோவிலில் எழுந்தருளியுள்ள நாகநாத சுவாமி செளந்தரவள்ளி அம்மன் ஆகியோர் மீது அந்தாதி இலக்கியம் ஒன்றை இயற்றிய காரடர்ந்தகுடி தலமலைகண்ட தேவர் என்ற புலவரைப் பாராட்டிப் பல சிறப்புக்களைச் செய்தார். இன்னும் பல புலவர்கள் இந்த மன்னரால் பொன்னும், பொருளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அறியத்தக்கனவாக இல்லை.
இந்த மன்னரது ஆட்சிக்காலத்தில் சேதுநாட்டைச் சூழ்ந்திருந்த மதுரை நாயக்க அரசு தஞ்சாவூர் மராட்டிய அரசு ஆகியவைகளுடன் நட்பும், நல்லிணக்கமும் கொண்டு நல்ல அரசியல் உறவுகளை வளர்த்து வந்தார். ஆனால் நாயக்க மன்னரும், மராட்டிய மன்னரும் சேதுபதி மன்னருடன் நேர்மையான அரசியல் தொடர்புகளைக் கொண்டிருக்க வில்லை என்பதை வரலாறு தெரிவிக்கின்றதுபொதுஆண்டு 1680ல் திருச்சியிலிருந்த மதுரைச் சொக்கநாத நாயக்கரை, அவர் கோட்டையைவிட்டு உலவுவதற்காக வெளியே சென்றபோது, கோட்டைத் தளபதியான ருஸ்தம்கான் என்பவன் அவரைக் கைது செய்து சிறையிலிட்டான். அடுத்து அவரது உடன்பிறப்பான அலகாத்திரி நாயுடுவை திருச்சி ஆட்சிபீடத்தில் அமரச் செய்து அவரது மேல்பிரதிநிதியாக ருஸ்தம்கான் மதுரை அரசியலை நடத்தி வந்தான். இதனைத் தனது நண்பரும் கன்னிவாடி பாளையக்காரருமான சின்னக் கத்திரி நாயக்கரது மூலம் தெரிந்த சேதுபதி மன்னர், மிகவும் வேதனை அடைந்தார். மேலும் கன்னிவாடி பாளையக்காரர் வேண்டுதலின்படி, இராமநாதபுரம் சீமையிலிருந்த திறமையான போர் வீரர்களது அணியுடன் கன்னிவாடி சென்று அவரையும் அழைத்துக்கொண்டு திருச்சி கோட்டைக்குச் சென்றார். இவர்கள் இருவரும் திட்டமிட்டபடி ருஸ்தம்கானை மரியாதை நிமித்தமாகச் சந்திப்பதுபோல் அவரைச் சந்தித்தபோது, அவர் எதிர்பாராத நிலைமையில் சேதுபதி மன்னரது வீரர்கள் ருஸ்தம்கானைத் தாக்கி ஒழித்தனர். அடுத்துச் சிறையிலிருந்த மன்னர் சொக்கநாத நாயக்கரையும் விடுதலை செய்து மீண்டும் திருச்சியின் ஆட்சிபீடத்தில் அமர்த்தினார். அதனால் மனம் நெகிழ்ந்த சொக்கநாத நாயக்க மன்னர், சேதுபதி மன்னருக்குப் பல பாராட்டுக்களைச் செய்ததுடன் பரராஜகேசரி (எதிரிகளுக்கு சிங்கம் போன்றவர்) என்ற சிறப்பு விருதையும் வழங்கிச் சிறப்பித்தார்.மேலும் சேதுபதிச் சீமை அரசியல் நிர்வாகம் செவ்வனே நடப்பதற்குத் தமது பிரதானிகளில் ஒருவரான குமாரப் பிள்ளையையும் இராமநாதபுரம் கோட்டைக்கு அனுப்பி வைத்தார்.
மதுரை தஞ்சை மன்னர்களது படையெடுப்பு
இந்தப் புதிய பிரதானி சேதுபதி மன்னருக்குத் தக்க உதவிகளைச் செய்தவற்குப் பதிலாக மன்னரது சொந்த நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக நோட்டமிட்டு வந்தார். நாளடைவில் சேதுபதி மன்னரைத் திடீரெனத் தாக்கிக் கைது செய்து திருச்சிக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தார். இதனையறிந்த சேதுபதி மன்னர் அந்தப் பிரதானி சிறிதும் சந்தேகப்படாத முறையில் அவரைக் கொன்றழித்துவிடும்படி செய்தார். சொக்கநாத நாயக்கர் இவ்விதம் சேதுபதி மன்னரை ஒழித்துக்கட்டத் தீட்டிய இந்தச் சதித் திட்டம் நிறைவேறவில்லை. ஆனால் அந்த மன்னரையடுத்து மதுரையின் அரசியாக பொறுப்பேற்ற இராணி மங்கம்மாள் எவ்வித காரணமும் இன்றி சேதுநாட்டின் மீது பொதுஆண்டு 1702ல் படையெடுப்பை மேற்கொண்டார். இந்த படையெடுப்பை எதிர் கொண்ட சேதுபதி மன்னர் மதுரைப் படைகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கினார். திருமலை நாயக்கர் மன்னர் காலம் முதல் மதுரை நாயக்க மன்னரிடம் மறைந்திருந்த பொறாமையும், பகைமையும் அறிவதற்கு இந்தப் போர் இறுதிக் காலமாக அமைந்தது. இதனைப் போன்றே தஞ்சை மராட்டிய மன்னரும் சேதுபதி மன்னரிடம் நண்பராக நடித்து வந்தவர் பொதிஆண்டு 1709 ஆகஸ்டு மாதம் திடீரென ஏற்பட்ட புயல்மழை வெள்ளத்தினால் சேதுநாட்டுக் குடிமக்கள் சொல்லொனாத துன்பங்களினால் அல்லல் பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சேதுநாட்டின் வடபகுதி வழியாகச் சேதுநாட்டை ஆக்கிரமிக்கப் பெரும் படை ஒன்றை அனுப்பினார் தஞ்சை மன்னர். அந்தப் படையெடுப்பையும் சேதுபதி மன்னர் நசுக்கி அழித்தார். இவ்விதம் எதிரிகளுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய சேதுபதி மன்னருக்கு உறுதுணையாக இருந்தது வள்ளல் சீதக்காதி மரைக்காயர் ஆவார். ஒருபுறம் தெய்வீகப் பணிகளும், இன்னொரு புறம் தமிழ் வளர்ச்சிப் பணிகளையும் தொடர்ந்த சேதுபதி மன்னர் தமது நாட்டில் வேளாண்மையும், வணிகமும் செழித்து வளருவதற்கு ஆவன செய்த காரணத்தினால் மக்களது பொருளாதார வசதியைக் கொண்டு எதிரிகளை எளிதாகச் சமாளித்து வெற்றிபெற முடிந்தது.
வள்ளல் சீதக்காதியின் தோழமை
மன்னரது சாதனைகளுக்கு மூலபலமாக விளங்கியவர் மன்னரது நண்பரும் வணிக வேந்தருமான கீழக்கரை சீதக்காதி மரைக்காயரே ஆவார். வள்ளுவரது வாக்கின்படி சீதக்காதி மரைக்காயரை நட்பு பாராட்டித் தமது உடன்பிறப்பிலும் மேலாக மன்னர் மதித்து நடந்து வந்தார். கீழ்த்திசை நாடுகள் பலவற்றுக்கும் வணிகம் நிமித்தமாகச் சென்றுவந்த சீதக்காதி மரைக்காயரது அனுபவ முதிர்ச்சியும் நிர்வாகத் திறனும் சேதுபதி மன்னரது சிறந்த ஆட்சிக்குப் பயன்பட்டன என்றால் அது மிகையாகாது.
முதலாவது சடைக்கன் சேதுபதி முதல் சேதுநாட்டின் தலைநகராகப் போகலூர் என்ற கிராமம் இருந்து வந்ததை மாற்றி இராமநாதபுரம் கோட்டையைச் சேது மன்னர்களது தலைநகராக விளங்கும்படி செய்தது சீதக்காதி மரைக்காயர் தான். மேலும் அதுவரை மண்கோட்டையாக இருந்து வந்த இராமநாதபுரம் கோட்டையை மிகச்சிறந்த கற்கோட்டையாக மாற்றியதும், மன்னருக்கு எனக் கோட்டைக்குள் கொலு மண்டபம் ஒன்றையும் அமைத்து அரண்மனை நிர்வாக நடைமுறைகளை வகுத்துக் கொடுத்தவரும் சீதக்காதி மரைக்காயரே ஆவார். மேலும் இவரது வணிகக்கப்பல்கள் கீழ்த்திசை நாடுகளான இலங்கை, வங்கம், கடாரம், மலாக்கா, இந்தோனேஷியா, தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்குச் சென்று பலவகையான வணிகப் பொருள்களைச் சேதுபதிச் சீமைக்குக் கொண்டு வந்து சேர்த்ததுடன் பாண்டியநாட்டுப் முத்துக்கல், சோழநாட்டு தானியங்கள். கைத்தறி ஆடைகள், கேரளத்து மிளகு, இலங்கை நாட்டுக் கொட்டைப்பாக்கு ஆகியவைகளைப் பெருமளவில் அந்த நாடுகளுக்கெல்லாம் அவரது கப்பல்கள் எடுத்துச் சென்றன. சேதுநாட்டின் முக்கிய துறைமுகங்களாக கீழ்க்கரை, பாம்பன், தேவிபட்டினம், தொண்டியும் செழித்து விளங்கின. இத்தகைய வியாபாரச் செழுமையில் ஈடுபட்டிருந்த பல ஊர்களைச் சேர்ந்த முஸ்லீம் வணிகர்கள் சேதுமன்னரது குடிகளாக இந்த நாட்டில் நிலைத்து வாழ்ந்தனர். இவர்களைப் போன்றே டச்சுக்கிழக்கிந்திய வணிகக் கம்பெனியாரும், ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் கம்பெனியாரும், சேது நாட்டில் அவர்களுக்குத் தேவையான கைத்தறிகள், தானியங்கள், மிளகு ஆகிய பொருள்களைக் கொள்முதல் செய்து வந்ததால் அவர்களது நாணயங்களும் சேது நாட்டின் செலாவணியில் இடம் பெற்றன.
இவ்விதம் சேது நாட்டின் அரசியல் வலிமையையும், வணிகச் செழுமையையும், சமுதாய அமைதியையும் மிக நீண்ட ஆட்சிக்காலமாக முப்பத்திரண்டு ஆண்டுகள் நீடித்த ரெகுநாத கிழவன் சேதுபதி ஆட்சி பொது ஆண்டு 1710 ல் அவரது மரணத்துடன் முடிவு பெற்றது. இவர் 1707 ஆம் ஆண்டு தன்னாட்சி கொண்டதாக மறவ நாட்டை அறிவித்தார். இவர் தனது தலைநகரை புகலூர் நகரத்திலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றினார். கிழவன் சேதுபதி நாலுகோட்டைப் பாளையம் என்ற (சிவகங்கை ) புதிய பாளையத்தை நிறுவியதோடு உதய தேவரை அதன் ஆளுநராக நியமித்தார். இவர் திருவாடானை, காளையார் கோவில் ஆகிய கோயில்களுக்கு கிராமங்களை தானமாக வழங்கினார். இது செப்பேடுகள் மூலம் அறியப்படுகிறது. தலை நகரான இராமநாதபுரத்தில் ஒரு கோட்டையைக் கட்டினார், வைகை ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்டினார்.
இரகுநாத கிழவன்சேதுபதி வாழ்க்கைதொகு
இவர் கள்ளர் குலத்து பெண் ஒருவரை காதலித்து பின்னர் அவரை திருமணம் புரிந்தார்,பிற்காலச் சேதுபதிகளில் சிறப்பு வாய்ந்த மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி தாய்வழி அகமுடையார் தந்தை வழி மறவர் சேதுபதிக்கு 45 மனைவிமார்கள் அவர்களுக்கு குழந்தை இல்லை இச் சூழ்நிலையில் திருக்களாம்பூரைச் சேர்ந்த கதலி என்ற கள்ளர் குலப் பெண்ணை விரும்பிய நிலையில் திருச்சுழி ஆலயத்திற்கு விஜயம் செய்த மன்னர் அங்கு திருவண்ணாமலையில் இருந்து வந்த துறவி ஒருவரை சந்திக்க அவரது வாக்குப்படி கதலியை திருமணம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டு என அருளாசி தந்ததார் அதை ஏற்று திருமணம் செய்த மன்னர்ருக்குப் பிறந்த முதல் பெண்குழந்தை தான் அகிலாண்டேசுவரி நாச்சியார் அவர்தான் சிவகங்கை சமஸ்தானத்தின் முதல் பட்ட மகிஷி, கௌரி வல்லப பெரிய சசிவர்ன உடையனத்ததேவரின் மனைவி ராஜா தந்த சீதனம் தான் சிவகங்கைச் சீமையும் 1000 படை வீரர்கள், திருப்பத்தூர் கோட்டை, தொன்டித் துறைமுகமும் ..அதை விரும்பாத அக்காளின் மகளையும் தராமல் வேறுபக்கம் மனம் முடித்த மன்னர் மீது கதலியுடன் பிறந்த சகோதரன் ரகுநாதன் தஞ்சை மன்னருடன் இணயந்து இராமநாதபுரம் சீமையை சண்டைக்கு அழைக்க அதில் சமாதானம் செய்து பிரித்து வழங்கிய பகுதி தான் புதுக்கோட்டை அதில் மாற்றம் செய்யப திருக்களாம்பூர் ரகுநாதன் தான் விஜய ரகுநாதத் தொண்டைமான்.தஞ்சை கள்ளர்களில் ஒரு பிரிவில் வருவது தான் தொண்டைமான்.அதுபோல் இன்றும் கதலிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்யும் அப்பகுதி மக்கள் .மன்னர் அருளாசி வழங்கி வழிகாட்டிய துறவிக்கு அதாவது திருவண்ணாமலை குரு முதல்வருக்கு வழங்கிய 5ஆலயங்கள்2 உப ஆலயங்கள் தான் பிரான்மலை (பறம்புமலை ) குன்றக்குடி உள்ளிட்ட ஆலயங்களும் மடமும் இந்த உண்மை அடுத்த தலைமுறை அறியாத நிலை வரலாறு இல்லாத பலர் வரலாற்றுக்குச் சொந்தம் கொண்டாடி இராஜராஜசோழனைக் கூட உறவாடும் நிலை வரவே இப்பதிவு பின்னர் தன் மனைவியின் சகோதரரை புதுக்கோட்டையின் தொண்டைமானாக அறிவித்தார். இரகுநாத தொண்டைமான் அவரை முன்னாள் தொண்டைமான் பல்லவராய தொண்டைமானுக்கு பதிலாக மாற்றினார், பின்னர் இரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டையில் தொண்டைமான் வம்சத்தை உருவாக்க முயன்றார்.
சேதுபதி மன்னர்கள் ஆணைகளை முதலில் ஓலையில் எழுதி அதன் பிறகே செப்பேட்டில் பொறித்தனர். பல செப்பேடுகளில் ஓலையில் எழுதியது யார் செப்பேட்டில் எழுத்துக்களைப் பொறித்தது யார் என்று மிகவும் தெளிவாகக் கூறப்படுகிறது. ஓலையில் எழுதியவர்கள் பெரும்பாலும் இராயசம் அல்லது கணக்குப்பிள்ளைகளாக இருக்கின்றனர். செப்பேட்டில் பொறித்தவர்கள் ஆசாரிகள் அல்லது சிற்பிகளாக இருக்கின்றனார். பல செப்பேடுகளில் தல மரபுக்கு ஏற்ப அழகிய வரைகோட்டு ஓவியங்கள் உள்ளன. சில செப்பேடுகளில் கோடிட்டு எழுதப்பட்டுள்ளன. பெரும்பான்மையான செப்பேடுகளில் இருபுறமும் எழுதப்பட்டுள்ளன.
இரகுநாத கிழவன்சேதுபதி செப்பேடுகள்தொகு
சுந்தரபாண்டியன் பட்டணம் செப்பேடு புதுக்கோட்டைச் செப்பேடு, இராசசிங்கமங்கலம் செப்பேடு போன்றவைகள் இரகுநாத கிழவன்சேதுபதி வாழ்க்கையினை தெளிவாக விளக்குகிறது. அவரது கோவில் கொடை,ஆட்சி முறை போன்றவற்றை அறியலாம்.
சுந்தரபாண்டியன் பட்டணம் செப்பேடு
இருக்கும் இடம்: அரசு அருங்காட்சியகம், எழும்பூர் சென்னை. அரசர் : சேதுபதி இரகுநாத தேவர் காலம் :06-01-1684
பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒருவரான சுந்தரபாண்டியன் பெயரில் இவ்வூர் அமைந்துள்ளது. சேதுநாட்டின் வட பகுதியில் கடற்கரையில் உள்ள ஊர். இப்பொழுது இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ளது. சேதுபதி அரசரால் சுந்தரபாண்டியன் பட்டணத்தில் உள்ள அக்கிரகாரம், மடம், ஏகாம்பரநாதர் கோயில் பூசை ஆகியவற்றிற்காக எட்டுக் கிராமங்களைக் கொடையாக அளிக்கப்பட்ட செய்தி செப்பேட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அவை சுந்தரபாண்டியன் பட்டணம், கொந்தளன் கோட்டை, பொன்னுக்கு மீண்டான். சிறுகவயல், கரிசல்குளம், எட்டிசேரி, மருங்கூர், உடையநாத சமுத்திரம் என்பன. அவ்வூர்கள் அஞ்சு கோட்டைப்பற்றில் இருந்தன. புல்லூர், மருதூர் என்ற இரு ஊர்கள் அக்கிரகாரத்திற்கு வழங்கப்பட்டன. இரு ஊர்களுக்கும் விரிவாக எல்லைகள் கூறப்பட்டுள்ளன.
புதுக்கோட்டைச் செப்பேடு
இருக்கும் இடம்:மதுரை மாவட்ட நீதிமன்றம் அரசர் :இரகுநாத சேதுபதி காத்த தேவர் காலம் :18-05-1684 அளவு :26.5 செ.மீ. ஒ 21.5 செ.மீ.
இச்செப்பேட்டின் மூலப்படி கிடைக்கவில்லை. எழுத்துக்கள் சரியாக எழுதப்பெறவில்லை என்று இதன் பதிப்பாசரியர் கூறியுள்ளார். இரகுநாத சேதுபதி 18-05-1684 அன்று அமாவாசைப் புண்ணிய நாளன்று தென்னாலை நாட்டில் வளுவாப்பிரி விசுவேசுவரருக்கும் அகிலாண்ட ஈசுவரி அம்மனுக்கும் காளையார் கோயில் சீமையில் தென்னாலை நாட்டில் அரிசிலையாற்றுப் பாய்ச்சலில் புதுக்கோட்டை, கள்ளிகுடி. எடையன் வயல் ஆகிய மூன்று கிராமங்களைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு கூறுகிறது. புதுக்கோட்டையின் எல்லை: கிழக்கு எல்லை கள்ளன்குடிக் கண்மாய், தெற்கு எல்லை கோங்கிவயல் கண்மாய் தென்கரை மேற்கு எல்லை ஈகரை ஆங்கல் வடக்கு எல்லை திருமணக் குளக்கால். கள்ளிக்குடி எல்லை: கிழக்கு எல்லை: திருமணக் கண்மாய் காஞ்சிரயடிப் பொட்டல் தெற்கு எல்லை கொரேம்பல்: மேற்கு எல்லை புதுக்கோட்டைப்புரவு: வடக்கு எல்லை திருமணக் குளக்கால். இச்செப்பேட்டு வாசகம் எழுதியவர் தர்மராசப் பிள்ளை மகன் இராயசம் சொக்குப் பிள்ளை. அந்நகல்படி செப்பேட்டு வாசகம் பொறித்தவர் உத்தரகோசமங்கையிலிருக்கும் வீரனாசாரி மகன் அதிவீரனாசாரி என்பவராவார்.
இராசசிங்கமங்கலம் செப்பேடு
இருக்கும் இடம்:தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை அருங்காட்சியகம், இராமநாதபுரம். அரசர் :இரகுநாத தேவார் காலம் :02-01-1688 அளவு :23 செ.மீ. ஒ 13 செ.மீ.
செப்பேட்டில் உள்ள துளையில்லாத அழகிய கைப்பிடியில் பீடமொன்றில் திhpசூலம் வரையப்பட்டுள்ளது. அதன்கீழ் உமங்கலக் குறியுள்ளது. இரண்டாம் பக்கத்தில் சேதுபதி என்று தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது. கிழவன் சேதுபதி என்னும் ரகுநாத தேவர் இராசசிங்க மங்கலம் என்னும் இராசசிங்க மங்கலத்தில் சிலுக வயல் என்னும் பகுதியை இராமேசுவரம் இராமநாதசுவாமிக்குக் கொடையாக அளித்தார். இராச சிங்க மங்கலம் குளப்பாசனத்தில் வடக்கு எல்லை புல்லமடை, மேற்கு எல்லை குளம், கிழக்கு எல்லை நாலுமடை இவற்றிற்குட்பட்ட நிலம் எவ்வளவு உண்டோ அவ்வளவையும் அளித்தார் இக்கொடை நிலத்திற்கு நீர்பாயும் மடைகளுக்கு இராமநாதமடை என்று பெயர் வைத்திருப்பது சிறப்புமிக்கதாகும். இந்நிலத்திற்கு இப்போது உள்ள பள்வரி பலவரி செம்புவாரி களஞ்சியவரி, வண்டிக்கிடாய், கொட்டிய எருது போன்ற வரிகளையும், எதிரிகாலத்தில் உண்டாகும் வரிகளையும் அளிக்கத் தேவையில்லை என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்கொடை இராமேசுவரம் கோயில் காரியக்காரர் இராமநாத பண்டாரம் அவர்கள் வசம் அளிக்கப்பட்டது. இந்நிலத்தின் வருவாயிலிருந்து இராமேசுவரம் இராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது,,வரலாற்று உண்மைகள் மக்கள் அறியும் வண்ணம்.பிரிட்டோ எனும் போர்த்துகீசிய பாதிரியாருக்கு மனிதாபிமானத்தோடு கிழவன் சேதுபதி ஒரு வழிபாட்டுத் தலத்தைக் கட்டிக்கொண்டு தன் மத வழிபாட்டை நடத்த அனுமதி கொடுத்தான். அதைப் பயன்படுத்திக் கொண்டு அந்த பிரிட்டோ பாதிரியார் மறவர்களை மதமாற்றம் செய்யத் தலைப்பட்டார். அவர் எல்லை மீறி அரண்மனையிலேயே கைவைத்ததும், அதனால் கிழவன் சேதுபதியின் மருமகளும், தம்பியும் கூட பாதிக்கப் பட்டதும், மன்னன் விழித்துக் கொண்டான். தன் தம்பியிடம் ”ஏன் இப்படிச் செய்தாய்? நமது இந்து தர்மத்தில் இல்லாத எதை அந்த கிருத்துவ மதத்தில் கண்டுவிட்டாய்? அந்த பாதிரியார் உன்னை என்ன சொல்லி மதமாற்றம் செய்தார்? மன்னர் குடும்பத்து நீயே மதம் மாறினால், அது இந்த ராஜ்யத்துக்கே ஆபத்து அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவர் அது என் இஷ்டம் என்றார். சரி, இனி இவனிடம் பேசிப் பயனில்லை என்று அந்த ஜான் பிரிட்டோ பாதிரியாரை வரவழைத்து அவர் மீது விசாரணை நடத்தப் பட்டது. பாதிரியார் தண்டிக்கப்பட்டார்.இதனை அன்னிய அடிவருடிகள், வெளிநாட்டு சரித்திர ஆசிரியர்கள் கூறும் ஒருதலைப் பட்சமான செய்திகளைக் கொண்டு, அந்த பாதிரியாரை வானளாவப் புகழ்ந்து அவரது மரணத்தைப் போற்றியும், கிழவன் சேதுபதியின் முடிவைக் கண்டித்தும் எழுதி வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, சமீபத்தில் “இன்று” என்ற தலைப்பில் செய்திக்கு முன் ஒளிபரப்பும் வரலாற்றுச் செய்தியொன்றில் ஒரு தொலைக்காட்சி ஊடகம், இந்த பிரிட்டோ பாதிரியார் செய்தது பெரும் தியாகம் என்றெல்லாம் வர்ணித்தார்கள். இப்போதும் கூட இந்த மதமாற்ற நாடகங்களைப் புரிந்து கொள்ளாத நம் மக்களைப் பற்றி நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது.
ஆனால், நடந்த வரலாறு என்ன?
நாம் பார்க்கப் போகும் இந்தப் பாதிரியாரின் முழுப்பெயர் ஜான் டி பிரிட்டோ என்பதாகும். இவர் காலம் 1647 முதல் 1693 வரை. இவர் போர்த்துகல் நாட்டில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தார். பிரேசில் நாட்டில் இவரது தந்தை கவர்னராக இருந்தாராம். வசதியான செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த இந்த பிரிட்டோ, கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்கத்துடன் இந்தியா செல்லத் துடித்தார். அதன் காரணமாக இவர் மதபோதகராவதற்காக 1662இல் அதற்கான பள்ளியில் சேர்ந்து படித்தார். ஐரோப்பா தவிர்த்த ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களிலுள்ள நாடுகளில் மதப் பிரச்சாரம், மதமாற்றம் இவைகளைச் செய்வதிலுள்ள ஆபத்துக்களை உணர்ந்தே இவர் இந்தியா வந்தார். குறிப்பாகத் தென் தமிழ்நாட்டில் மறவர் சமூக மக்களைக் குறிவைத்து இவர் மதமாற்றம் செய்ய விழைந்தார்.
தனது 26ஆவது வயதில் 1674இல் இவர் இந்தியா வந்தார். அதன்பின் 12 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் நிலைமைகளை நன்கு ஆராய்ந்து பார்த்துத் தனது மதமாற்றப் பணிக்குத் தென்னிந்தியாவில் மறவர் பூமியே சிறந்தது என்ற எண்ணத்தில் இவர் 1686இல் மதுரை வந்து சேர்ந்தார். அங்கிருந்து பனங்குடி எனும் ஊருக்கு அருகிலுள்ள வெள்ளைக்குளம் எனுமிடத்தில் தனது மதமாற்ற முகாமைத் தொடங்கினார். தாங்கள் பரம்பரை பரம்பரையாக போற்றிப் பாதுகாத்துவந்த சமய நெறிகளில் அலுத்துப் போயோ என்னவோ அந்தப் பாதிரியார் இங்கு குடியேறிய சில நாட்களுக்குள்ளாக, சில பிராமணர்கள் உட்பட இவரது வாசாலப் பேச்சினாலும், புதிய வழிபாட்டு முறைகளைக் கண்டு மோகித்தும், மதம் மாறினார்கள். இது அந்தப் பாதிரியாருக்கு உற்சாகத்தை ஊட்டியிருக்க வேண்டும். பரவாயில்லையே முதல் வியாபாரமே கண்டு முதல் அதிகம் பார்த்து விட்டோமே, இனி மேலும் அடுத்தடுத்த ஊர்களுக்குச் சென்றால் மக்கள் மந்தை மந்தையாக மதம் மாறுவார்கள் போலிருக்கிறதே என்று இவர் வியந்து போனார்.
நம் மக்களுக்கு அந்தக் காலத்தில் வெள்ளைத் தோலையும், அவர்கள் பேசும் ஆங்கிலம் கலந்த கொச்சைத் தமிழையும் கண்டதும் ஒருவித மோகம் ஏற்பட்டு விடுகிறது. இன்றுகூட அயல்நாட்டிலிருந்து வரும் வெள்ளைக்கார சுற்றுலாப் பயணிகளின் பின்னால், நமது குழந்தைகள் காணாததைக் கண்டது போல ஓடுவதைப் பார்க்கிறோமல்லவா? அந்த தாழ்வு மனப்பான்மைதான் நம் அப்பாவி மக்களை அவர்கள் பின் ஓடவைத்தது.
பிரிட்டோ பாதிரியாரின் புதிய சீடர்கள் அவருக்கு அருளானந்தர் என்று பெயர் சூட்டி பெருமைப் படுத்தினர். இவர் இந்தப் பகுதியில் குடியேறிய ஒரு சில நாட்களிலேயே இவருக்கு நிறையபேர் மதமாற்றத்திற்கு இணங்கி விட்டனர். அந்த நிலையில் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் செல்லும் நோக்கில் இவர் சிவகங்கை வழியாக பாகனேரிக்கு நான்கு மைல் தூரத்தில் உள்ள மேலமங்கலம் எனும் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த இராமநாதபுரம் கிழவன் சேதுபதியின் முதலமைச்சராக இருந்த குமார பிள்ளை இந்தப் பாதிரியார் தங்கள் மக்களை மதமாற்றம் செய்யும் செய்தியறிந்து மறவர் படையைக் கொண்டு பிரிட்டோ பாதிரியாரைக் கைது செய்தார். அந்த மறவர் படையினர் இந்தப் பாதிரியாரையும் அவருடன் வந்தவர்களையும் காளையார்கோயிலுக்குக் கொண்டு சென்றனர். அங்கு இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சுமார் பத்து நாட்கள் காளையார் கோயில் சிறையில் இருந்த பிறகு இவர்கள் அனைவரும் பாகனேரிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போது கிழவன் சேதுபதியிடமிருந்து, கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் பாதிரியாரையும் அவரோடு இருப்பவர்களையும் இராமநாதபுரத்துக்குக் கொண்டு வரும்படி கட்டளை வந்தது.
அங்கு மன்னனின் அரசவையில் பிரிட்டோ பாதிரியார் விசாரிக்கப்பட்டார். அந்த விசாரணையின் போது, இந்த நாட்டில் இந்துக்கள் பல கடவுளர்களை வணங்குவதாகவும், அவர்களுடைய பழக்க வழக்கங்கள் காட்டுமிராண்டித்தனமாக இருப்பதாகவும், கல்லையும், மண்ணையும், மரத்தையும் வணங்கும் இவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டுவதுதான் தனது மதத்தின் நோக்கமென்றும், அந்தப் புனிதமான பணியைத்தான் தான் செய்து வருவதாகவும் பிரிட்டோ வாதாடினார். அப்படி என்னதான் உங்கள் மதம் போதிக்கிறது என்று மன்னர் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினார். உடனே அவையிலிருந்த பெரியோர்கள், இந்த பாதிரி நம் மன்னனின் மனதைக் கூட கலைத்து விடுவார் என்று அஞ்சினர்.
எனினும் மன்னனின் கட்டளைக்கிணங்க பாதிரியார் அரண்மனைக்குச் சென்று அங்கு அரசனுக்குச் சரிசமமான ஆசனத்தில் அமர்ந்துகொண்டு தனது மதத்தின் அருமை பெருமைகளை வர்ணிக்கத் தொடங்கி விட்டார். அவர் சொல்லச் சொல்ல அரசனுக்கு கோபம் கூடியது. ஆனால் தான் குடிப்பழக்கத்துக்கு ஆளானவன், மேலும் பலதாரங்களை மணந்து கொண்டிருப்பவன் என்பதால் ஒருவகைக் குற்ற உணர்வுக்கு ஆட்பட்டு நேரடியாக பாதிரியாரை எதிர்த்து அவன் வாதம் செய்யவில்லை. எனவே சமாளித்துக் கொண்டு அரசன் சொன்னான் “பாதிரியாரே! நீங்கள் நம் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மதத்தைப் பின்பற்றுவதையோ, உங்கள் கடவுளை வணங்குவதையோ நான் தடுக்கவில்லை. ஆனால், எங்களுடைய கலாசாரம், நாகரிகம், பண்பாடு இவைகளுக்கு மாறான எதையும் நீங்கள் உபதேசிக்க நான் அனுமதிக்க முடியாது. மீறி நடந்தால் உங்கள் உயிருக்கு நான் ஜவாப்தாரியல்ல” என்று எச்சரித்து பாதிரியைப் போக விடுத்தான்.
அதன் பிறகு அரசனைச் சந்திக்க பிரிட்டோ பாதிரியார் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. சிலகாலம் தென் தமிழ்நாட்டில் தன் மதமாற்ற வேலைகளை நிறைவுற செய்து முடித்த பின் 1687இல் அவர் போர்சுகல் திரும்பினார். இந்தியாவில் வெற்றிகரமாக மதமாற்றங்களைச் செய்துவிட்டு நாடு திரும்பும் பாதிரியாரை அந்நாட்டு மதவாதிகள் உற்சாகமாக வரவேற்றார்கள். போர்ச்சுகலில் சில காலம் இருந்த பிறகு அவருக்கு மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்துத் தன் வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்று விரும்பினார். தனது நண்பரான டிகோஸ்டா எனும் பாதிரியாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனக்கு லிஸ்பனில் (போர்த்துகல் தலைநகர்) உள்ள அரண்மனையை விட தென் தமிழ்நாட்டு மறவர் மண்ணே மிகவும் பிடித்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார். அதன்படி அவர் மீண்டும் இந்தியாவை அடைந்து கோவாவில் தரையிறங்கினார். அங்கிருந்து பாண்டிய நாட்டு மண்ணுக்கு வந்து தனது பணியைத் தொடங்கினார்.
தாதியாத் தேவன் என்றொரு பாளையக்காரன். இவன் கிழவன் சேதுபதிக்கும் உறவினன்கூட. அவனுக்கு இந்த பாதிரியார் பால் அன்பு ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏதோவொரு வினோதமான வியாதி அவனைப் பீடித்தது. பல மருத்துவர்கள் மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. அப்போது செய்தியறிந்து அருளானந்த அடிகளான பாதிரியார் பிரிட்டோ தாதியாத் தேவனைப் பார்க்க வந்தார். அவர் வந்த வேளை அந்த பாளையக்காரனின் வியாதி தீர்ந்து குணமடைந்தான். அவன் பாதிரியாரை மிகவும் மதித்து அவர் ஆலோசனைப்படி ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டு மதமாற்றம் பெற்றான்.
அவன் மதம் மாறியதில் ஓர் சிக்கல் ஏற்பட்டது. அவனுக்கு ஐந்து மனைவியர். அவன் சார்ந்த புதிய மதக் கோட்பாடுகளின்படி அவனுடைய முதல் மனைவி மட்டும்தான் மனைவியாக இருக்க முடியும். மற்ற நால்வரும் அவனுக்குச் சகோதரிகளாகி விடுகின்றனர். இந்த செய்தி அவனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. முதல் மனைவி நீங்கலாக மற்றவர்கள் என்ன கெஞ்சியும் அவன் அவர்களை மனைவியராக ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான் பாதிரியாரின் அறிவுரைப்படி. அவர்கள் நால்வரும் கூடிப்பேசி, நால்வரில் இளையவளான காதலி நாச்சியார் என்பவளை அழைத்து, அவளுக்குப் பெரியப்பன் உறவான கிழவன் சேதுபதியிடம் சென்று முறையிடும்படி கேட்டுக் கொண்டனர்.
அதன்படி காதலி நாச்சியார் சென்று கிழவனிடம் முறையிட்டாள். அவனும் யோசித்தான். தன் உறவினனான தாதியாத் தேவன் மதம் மாறிவிட்டான். தன் தம்பி மகள் கணவன் உறவை இழந்து அழுகிறாள். இப்படியே போய்க்கொண்டிருந்தால் இந்த பாதிரியார் மறவர் இனமக்கள் அனைவரையும் மதம் மாற்றிவிடுவார் என்று நினைத்தார். இந்த தாதியாத் தேவன் முன்னர் கிழவன் சேதுபதியோடு அரியணைக்குப் போட்டியிட்டவன். கிழவனுக்குப் பிறகு அரசனாக ஆகக்கூட வாய்ப்புகள் இருந்தன. மற்றவர்களை மதம் மாற்றியதைப் போல சகட்டு மேனிக்கு இந்த மறவர் பூமிக்கு உரிமையுள்ள ஒருவனையுமல்லவா இந்த பாதிரியார் மதம் மாற்றிவிட்டார் என்ற கோபம், வருத்தம். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் நம்மையுமா? சேதுபதியால் கோபத்தை அடக்கமுடியவில்லை.
அரச குடும்பத்தில் ஒருவன் மதம் மாறினால் மக்களும் அல்லவா மதம் மாறிவிடுவார்கள்! அப்படி மக்கள் மதம் மாறத் துணிந்தால் இந்த தாதியாத் தேவனைத் தனக்கெதிராக ஆட்சியைப் பறிக்க போர்த்துகீசியர் தூண்டக் கூடுமல்லவா என்றெல்லாம் யோசித்தான் கிழவன் சேதுபதி. இது வெறும் மதமாற்றம் மட்டுமல்ல; போர்த்துகீசிய ஆதிக்கத்தை கடற்கரையையும் தாண்டி உள்நாட்டில் ஏற்படுத்தும் நோக்கமும் இதில் இருக்கிறது என்று சிந்தித்தார் அவர். இது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இது ஏதோ கற்பனையான பயம் என்று எண்ணுவதற்கில்லை. வரலாற்று அடிப்படையில் அவ்வாறு சேதுபதி பயந்ததற்குக் காரணங்கள் இருந்தன. 1532 – 1582 காலகட்டத்திலேயே கத்தோலிக்க மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்ட மீனவர்களுடன் தூத்துக்குடியில் வாழ்ந்தவர்களும் போர்த்துகீசிய குடிமக்களாகக் கருதப்பட்டார்கள். இதனை ஒரு கிறிஸ்தவ பாதிரியாரே எழுதியிருக்கிறார். ஆம்! பிஷப் கால்டுவெல் கூறும் செய்தி இது.
ஐரோப்பாவிலிருந்து நாடுபிடிக்கவும், கீழை நாடுகளில் மக்களை மதமாற்றம் செய்
வதற்காகவும் பல நாட்டினர் இங்கு வந்தனர். அவர்களில் டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர் என பலரும் அடங்குவர். என்றாலும் இங்கு எவரும் மதமாற்றம் செய்வதை கிழவன் அனுமதிக்கவில்லை. சிறையில் அடைக்கப்பட்ட பிரிட்டோ பாதிரியார் அந்த சிறைவாசத்திலேயே இறந்து போனார். பண்பிலும், அரசாட்சியிலும் சிறந்து விளங்கிய கிழவன் சேதுபதி மற்ற வகைகளில், கடற்கரையில் முத்து எடுப்பது முதல், வியாபாரம் வரை அந்நியர்களை அனுமதித்தாலும் இதுபோன்ற மதமாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிகிறது.
இது குறித்து பல்வேறுபட்ட சர்ச்சைகள் உள்ளன. ஆனால் சில வரலாற்று உண்மைகள் கவனத்தில் கொள்ளத் தக்கவை. பாதிரியார்கள் வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டிருந்தனர் என்பது அவர்கள் மீது கிழவன் சேதுபதி காழ்ப்புணர்வு கொண்டிருக்கவில்லை என்பதைக்காட்டுகிறது. பாதிரியார்கள் முக்கியமான பிரபல புள்ளிகளை மதமாற்றம் செய்வதில் குறியாக இருந்தார்கள்; தாங்கள் செய்யும் ”தியாகங்களை” எல்லாம் கூறி மக்களின் அனுதாபத்தைப் பெற்று மதமாற்றம் செய்தார்கள் என்பதும் தெளிவாக பதிவு செய்யப் பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்து மதத்தின் அழிவில்தான் கிறிஸ்தவம் வளரமுடியும் என்று அவர்கள் கருதினார்கள் என்பதும் ஐயமின்றி விளங்குகிறது.
பாதிரியாரின்பால் இரக்கம் உண்டாகும்படி பிரசாரம் மேற்கொள்ளப் பட்டது மிகவும் திட்டமிட்டு நடத்தப் பட்ட செயல்பாடு என்று இவர்கள் சொல்வதிலிருந்து உண்மை நிலவரத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நூற்றாண்டுகள் ஓடிவிட்டன.
கருத்துகள்