ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்:ஏன் சார்வாள் கீதாரி கிளார்க் ஆகக் கூடாதா
வாழ்வியல் முறை இங்கு விவசாயம் சார்ந்ததே.. விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு முதலிடம் பெற்ற சிவகங்கை நபரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க டி.என்.பி.எஸ்.சி. உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசின் அரசு பணியாளர் தேர்வுக்கான (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது.
இதில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் தேர்வு எழுதிய 3,214 பேர் தேர்ச்சி பெற்றனர். 2 மையங்களில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் முதல் 100 இடங்களில் 35 இடங்களை ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் பிடித்ததால் போட்டித்தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. உரிய விசாரணை நடத்தி வருகிறது. ராமேசுவரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர் சிவகங்கை அருகே உள்ள பெரிய கண்ணனூரைச் சேர்ந்த திருவராஜூ. இவர் 288.5 மதிப்பெண்கள் பெற்று குரூப்-4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு மையங்கள் இருந்தும் இவர் ராமேசுவரத்தில் தேர்வு எழுதியது ஏன்? என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்தது. இதற்காக வருகிற 13-ந் தேதி சென்னை வரும்படி திருவராஜூவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த சந்தேகத்தில் டி.என்.பி.எஸ்.சி. விசாரணையை தொடங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி.யின் உத்தரவு குறித்து திருவராஜூ கூறியதாவது:-
நான் சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்து விட்டு சிவகங்கை அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் முடித்துள்ளேன்.
தற்போது ஆடு மேய்த்து வரும் நான் போட்டி தேர்வில் கலந்துகொண்டு போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு படித்து வந்தேன்.
இதுவரை 7 முறை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியுள்ளேன். எனது விடாமுயற்சியால் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளேன்.
ராமேசுவரம் பகுதியில் ஆடுகளை மேய்த்து வந்ததால் ராமேசுவரத்தில் கடந்த ஆண்டு தேர்வு எழுதினேன். என்னிடம் விசாரணை நடத்த வருகிற 13-ந் தேதி சென்னை வரும்படி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் விசாரணையில் நேரில் ஆஜராகி எனது விளக்கத்தை அளிப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார் நடைபெற்று முடிந்த குரூப்-4-க்கான தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய இதர மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்களில் 128 தேர்வு மையங்களில் 32,879 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதில் இருந்து 497 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமேசுவரம் மற்றும் கீழக்கரை வட்டங்களில் பல்வேறு தேர்வுக்கூடங்களில் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினர். குறிப்பாக ராமேசுவரம் புனித ஜோசப் மேனிலைப்பள்ளி, ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் வடக்கு, தெற்கு கட்டிடங்கள், உதயம் பாலிடெக்னிக் கல்லூரி, ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி யில் தேர்வு நடைபெற்றது. அதேபோல், கீழக்கரை வட்டத்தில் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, கசனல் காலேஜ் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் மையங்களிலும் தேர்வு நடைபெற்றது. இந்த 9 மையங்களில் மொத்தம் 2,840 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினர்.
இதில் இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 262 பேர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 57 பேர். இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 40 பேர். இந்த 40 பேரும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் ராமேசுவரம் மற்றும் கீழக்கரையைச் சேர்ந்த வெவ்வேறு மையங்களில் வெவ்வேறு அறைகளில் தேர்வு எழுதியுள்ளனர். எனவே, செய்திகளில் குறிப்பிடுவதைப்போல் இந்த 57 பேரும் ஒரே அறையில் இருந்தோ அல்லது ஒரே தேர்வுக்கூடத்தில் இருந்தோ தேர்வு செய்யப்படவில்லை. மேலும் இம்மையங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் ஒட்டு மொத்த தரவரிசை அடிப்படையில் முதல் ஆயிரம் இடங்களில் 40 பேரும், முதல் 100 இடங்களில் 35 பேரும் உள்ளனர்.
இக்குற்றச்சாட்டு தொடர்பாக அந்த விண்ணப்பதாரர்களின் விடைத்தாள் ஆவணங்கள் மட்டுமின்றி, இத்தேர்வுடன் தொடர்புடைய பிற ஆவணங்களும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதுகுறித்து எவ்வித பாரபட்சமும் இன்றி மேலும் விசாரணை செய்யப்பட்டு, விரைவில் உண்மை நிலை அறிவிக்கப்படும்.
விசாரணையில் தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் அதற்கு காரணமான நபர்கள் மீது சட்டப்படி மிகக்கடுமையான குற்ற நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும். எனவே தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை கொண்டு அமைதி காக்கும்படி தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்