பேரியாறு மேற்குக் கடலில் விழுந்த இடத்தில் சேரர்களின் முசிறித் துறைமுகம் அமைந்திருந்தது. இந்தப் பேரியாற்றின் கரையிலே சேரன் செங்குட்டுவன் தன் சுற்றத்துடன் தங்கி இயற்கைக் காட்சியைக் கண்ட இடம் முல்லையாறும் பேரியாறும் சேறுமிடம் சிவன் கழுத்து ஆரம்போல் வர்ணிக்க அந்த இடம் பெயர் மருவியதல் முல்லைப் பெரியார் ஆனதோ
“நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை
இடுமணல் எக்கர் இயைந்தொருங் கிருப்ப”
என்பது சிலப்பதிகாரத்தின் காட்சிக்காதை. 21-23 விவரிக்கும் இடம்
பென்னி குவிக் பிறப்பால் இந்தியர்தான். இவர் 1841 ஜனவரி15ல் புனோயில் பிறந்தார். இங்கிலாந்தில் உள்ள ராயல் இன்ஜினியரிங் கல்லூரியில் பொறியாளர் பட்டம் பெற்றார். நம் நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன், பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை கண்ட பென்னிகுவிக் மிகவும் வருத்தம் அடைந்தார்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார்.
முல்லை மற்றும் பெரியாறை இணைத்து, அணை கட்ட ஆங்கிலேய அரசு திட்டமிட்டது. எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.
ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குவிக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது.
அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு சிரமத்திற்கிடையே அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.
அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குவிக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.
தென் மாவட்டங்களில் பென்னி குவிக் என்பது வெறும் பெயரல்ல, தமிழக மக்களின் வணக்கத்துக்குரிய ஒரு காவல் தெய்வத்தின் பெயர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இறந்தவர்களை சாமிக்கு சமமாக வைத்துப் போற்றும் மதுரை மண், அந்த மண்ணுக்காக தன் சொத்து சுகம் எல்லாவற்றையும் இழந்து முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஒரு வெள்ளைக்காரரை குலம் தழைக்க வரம் கொடுத்த சாமியாகவே மதித்து பொங்கல் வைத்து கும்பிடுகின்றனர்.
தேனி உள்ளிட்ட தென் மாவட்ட கிராமங்களில் இன்றும் கூட தங்களது வீட்டில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு முதல் பெயராக பென்னிகுவிக் என்று பெயர் சூட்டுவது பாரம்பரியமாக தொடர்கிறது. பென்னிகுவிக் கோவில்களும் கூட தேனி மாவட்ட கிராமங்களில் ஏராளமாக உள்ளன. தேனி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் பொங்கல் பண்டிகையின்போது பென்னிகுவிக்குக்கு படையலிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையை 1895ம் ஆண்டில் அவர் கட்டி முடித்தார் பென்னிகுவிக். அணை கட்டுமானப் பணியின்போது பலர் உயிரிழந்தனர். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டும், காலரா வந்தும் பலர் பலியானார்கள். அவர்களில் தமிழர்கள் மட்டுமல்ல பல ஆங்கிலேயர்களும் கூட இருந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட என்ஜீனியர்கள், உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கான கல்லறை கூட இன்றும் அங்குள்ளது.
தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் பெரியாறு அணையை கட்டிய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவு மணி மண்டபம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகிறது.
தரையில் பதித்த கிரானைட் கற்கள் பெயர்ந்தால் பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டது.இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் முல்லை பெரியாறு அணையை கடும் சவால்களுக்கு இடையே 1895ல் கட்டி முடித்தார். மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட குடிநீர், விவசாய பயன்பாட்டிற்காக தேக்கடி தலைமதகு மூலம் 1895 அக்.,11ல் முதல் முதலாக திறந்து வைத்தார்.இதனால் ஐந்து மாவட்ட மக்கள் குடிநீர், பாசன வசதி பெற்று வருகின்றனர். அவரது புகழை போற்றும் வண்ணம் லோயர் கேம்ப்பில் ரூ.ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பில் பொதுப்பணித்துறை மூலம் பென்னிகுக் நினைவு மணி மண்டபம் கட்டப்பட்டது. 2013 ஜன.,15ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.மண்டபம், பூங்கா பராமரிப்பு பணிகளில் பொதுப்பணித்துறை மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிரானைட் கற்கள் ஆங்காங்கே பெயர்ந்தும், உடைந்தும் உள்ளது.
பூங்காவில் புற்கள் கருகி விட்டது. பிரதான நுழைவு வாயிலில் கிரானைட் கற்கள் பெயர்ந்துவிட்டதால் மூடப்பட்டது. பக்கவாட்டு நுழைவு வாயில் வழியாக பார்வையாளர்கள் சென்று வருகின்றனர். பிரதான நுழைவு வாயில் உட்பட மூன்று நுழைவு வாயில்களும் மூடப்பட்டுள்ளன. பென்னிகுவிக் சிலைக்கு கீழே கல்வெட்டு உள்ளது. அதை மறைத்து மரப்பெட்டியை வைத்துள்ளனர். இதனால் சிலை குறித்த தகவல்களை பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள இயலவில்லை.
கருத்துகள்