ஒரு நடிகையின் தற்கொலை முயற்சியின் பின்னனி.. என்னால் ஜீரணிக்க
வே முடியவில்லை.. உங்க அடுத்த இலக்கு மகள் ரேத்வாவா.. ஜெயஸ்ரீயின் அதிர வைக்கும் கடிதம் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. உங்கள் அடுத்த இலக்கு மகள் ரேத்வாதானா என தனது தற்கொலை முயற்சி கடிதத்தில் நடிகை ஜெயஸ்ரீ, கணவர் ஈஸ்வரிடம் கேட்டுள்ளார்.
தனது தற்கொலை முயற்சி கடிதத்தில் ஈஸ்வருக்கு அறிவுரைகளையும் தனது ஏமாற்றத்தையும் ஜெயஸ்ரீ கூறியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில் ஈஸ்வர், நீங்கள் உங்கள் பெற்றோர் மற்றும் வழக்கறிஞரின் துணையுடன் இத்தனை துன்பங்களை எனக்கு கொடுத்தீர்கள்.
எனக்கும், எனது மகளுக்கும் நீங்கள் துரோகம் செய்வீர்கள் என ஒரு போதும் நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் எங்களை உண்மையாக விரும்பினீர்கள் என நினைத்தேன். ஆனால் பொய்யான நம்பிக்கைகளை எங்களுக்கு ஏன் அளித்தீர்கள் ஈஸ்வர்?
கடந்த 2013-ஆம் ஆண்டு நீங்கள் தான் என்னை தேடி வந்து திருமணம் செய்து கொள்வதாக கூறினீர்கள். எனது வாழ்வில் துணையாக இருந்தீர்கள். என் மகள் அப்பா என அழைக்கும் படி அவளை பார்த்துக் கொள்ளுங்கள். இது போன்று என் வாழ்வில் மாற்றம் வரும் என ஒரு போதும் நான் நினைத்ததில்லை ஈஸ்வர்.
நாம் வாழ்ந்த காலங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆசைகளை பற்றி மட்டுமே நினைத்தீர்கள். என்னையும் என் குழந்தையையும் பற்றி ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை. என்னை ஆள் வைத்து கொள்ளும் நிலைக்கு நீங்கள் சென்றுவிட்டீர்கள். கடவுளே ஈஸ்வர் இப்படி செய்வார் என நம்பமுடியவில்லை.
இன்று நான் உங்களுக்கு மதிப்பில்லாதவளாகிவிட்டேன். பால், மளிகை பொருட்கள், துணி அயர்னிங், இன்டர்நெட் கனெக்ஷன் ஆகியவற்றுக்கு பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டீர்கள். ஆனால் நீங்கள் சூதாடியதால் ஏற்பட்ட லட்சக்கணக்கான கடனை நான்தான் அடைத்தேன். அது போதாததற்கு இந்த வீட்டை ரூ 2 கோடிக்கு நான்தான் வாங்கினேன். இப்படி கடிதம் பல பக்கம் எழுதி தற்கொலை முயற்சி
கருத்துகள்