சுப்பிரமணி எனும் கவுண்டமணி என்பது வயதிலும் தெளிவாக இருக்கும் இவர் கோயமுத்தூர் மாவட்டம் வல்லகொண்டபுரம் கருப்பையா- அன்னாம்மா மகனாவார்
ஆரம்ப காலத்தில் நாடகங்களில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, நாடக நடிப்பில் பெயருடன் விளங்கினார். அதில் ஒரு பாத்திரத்தில் “ஊர் கவுண்டர்” மிகவும் பிரபலமானதால், அன்று முதல் அவரை ‘கவுண்டமணி’ என அழைக்கத் துவங்கினர்.
தமிழ் சினிமாவில் கவுண்டமணி பயணம்
தன்னுடைய இருபத்தி ஆறாவது வயதில், நாடகத்திலிருந்து சினிமாவுக்கு கால்பதித்து தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தார். 1976 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ரஜினிகாந்துடன் “இதெப்படி இருக்கு…?” என்ற வசனத்திற்கு, கவுண்டமணி பேசும் “பத்த வெச்சுட்டியே பரட்டை” என்ற டயலாக் ரசிகர்களிடையே பேசப்பட்டது. நடித்த நான்காவது படத்திலேயே, தன்னுடைய தனித்துவமான நடிப்புத் திறமையை உலகத்திற்கு வெளிபடுத்திய அவர், பின்னர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக செந்திலுடன் இணைந்து, பல நகைச்சுவைக் காட்சிகளை அமைத்து பெரும் வெற்றிக்கண்டார். குறிப்பாக சொல்லப்போனால், எண்ணற்ற திரைப்படங்களில் இணைந்து நடித்த கவுண்டமணி-செந்தில் என்ற கூட்டணி படிப்படியாக பல வெற்றிப் படிகளில் கால்பதித்து, தமிழ் திரைப்படங்களில் ஒரு முக்கிய சக்தியாகவே மாற ஆரம்பித்தது. செந்திலுடன் இணைந்து நடித்த அனைத்துத் திரைப்படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் வந்த ‘வாழைப்பழம் காட்சி ‘வைதேகி காத்திருந்தால்’ திரைப்படத்தில் ‘ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சானிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிற’, ‘நாட்டாமை’ திரைப்படத்தில் ‘இந்த டகால்டி தானே வேணாங்கிறது’, ‘டேய் தகப்பா’, சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் ‘ஆத்தா! வாய மூடு ஆத்தா! குழந்தபய பயப்புடுறான்’ என மேலும் பல திரைப்படங்களில் வெளிவந்த நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மறக்கமுடியாத நகைச்சுவைப் பதிவுகளாக இருந்து வருகிறது.தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு என்று, ஒரு தனி இடத்தை பிடித்த கவுண்டமணி, தன் பெயருக்கு முன்னாள் எந்தப் பட்டங்களும் போட்டுக் கொள்ள விரும்பாத அற்புத மனிதர். குறிப்பாக சொல்லப்போனால், இதுவரை தமிழ் சினிமாவில் நடித்த நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் கவுண்டமணிக்கு தனியிடம் உண்டு என்பதை யாராலும் மறுக்கமுடியாது. கல்வியறிவு எதுவும் இல்லாமல், நாடக நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கி, பிறகு, சினிமா துறையில் கால்பதித்து, 750 திரைப்படங்களுக்கு மேல் நடித்து, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்துவருகிறார் அவருக்கு மகள் ..அவரை மிஞ்சும் விதமாக சேவையில்சென்னை அடையாரில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்றுவரும் ஆதரவற்ற நோயாளிகளுக்கு மாதம் தவறாமல் வந்து ஒரு தம்பதியினர் உதவி இருக்கின்றனர்.
நீண்டகாலமாக தாங்கள் யார் என்றே காட்டிக்கொள்ளாமல் இருந்த அவர்கள் முதன் முறையாக அதுகுறித்து தெரிவித்தனர். அங்கிருந்தவர்கள் கேட்டுக் கொண்டதினால் சொன்னார்கள். அப்படி ஒவ்வொரு மாதமும் உதவி செய்யும் அந்த பெண்ணின் பெயர் சுமித்ரா. இவர் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மகள். அவரும், அவரது கணவர் வெங்கடாச்சலமும் தான் இப்படி ஓசையின்றி பலருக்கு உதவி வருகின்றனர்.திரையில் தந்தை நகைச்சுவை நடிகர்..நிஜத்தில் மகள் ஹீரோயின்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்