முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனியார் நிறுவன உதவியால் நடக்கும் சென்னை பள்ளிகளில் காலை உணவு திட்டம்

     சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும்  பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது  ‘அட்சய பாத்ரா’ என்ற தனியார் தொண்டு நிறுவனம் செயல்படுத்துகிறார்கள். அட்சய பாத்ரா என்பது இஸ்கான் (ISKCON) என்ற அமைப்பின் துணை நிறுவனம். இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த அமைப்பின் சார்பில் இத்திட்டம் அரசு உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
சென்னையில்  அட்சய பாத்திரத்துக்கு க்ரீம்ஸ் சாலையில் 20ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கித் தரப்பட்டு. பெரம்பூர் பேரக்ஸ் ரோடு பகுதியில் மேலும் 35 ஆயிரம் சதுர அடியை முதலமைச்சர் ஒதுக்கியும். துவக்க விழாவில், ஆளுநர் தனது நிதியிலிருந்து 5 கோடி ரூ வழங்கியதுடன்.துவங்கியது காலை உணவு திட்டம் 
அரசு பள்ளிகளில் உணவு வழங்குவது என்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம். 1920 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில்  சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவும். காங்கிரஸ் முதல்வர்  கு. காமராஜர் தலைமையிலான  ஆட்சியில் தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.அ இ அ தி மு க வின்  எம்.ஜி.ராமச்சந்திரன்.முதல்வரான  காலத்தில்  சத்துணவுத் திட்டமாக மாற்றி விரிவாக்கம் செய்யப்பட்டது. தி மு க வின் மு.கருணாநிதி முதல்வரான  ஆட்சியில் சத்துணவில் முட்டையும்  வழங்கியதுடன்  அ இ அ தி மு க முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஆட்சியில் கலவைச் சோறு  திட்டம் கொண்டு வரப்பட்டது.
இப்படியாக ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் தமிழக உணவுப்பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழக ஆட்சியாளர்கள், அரசின் பொறுப்பில் இத்திட்டத்தை செயல்படுத்தி, அதற்கான சமையல் கூடம், பாத்திரங்கள், பணியாளர்களை நியமித்து வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளனர். தற்போது அ இ அ தி மு க வில் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் புதிய திட்டத்தை அரசாங்கம் உதவியுடன் தனியொருறொ அமைப்பிடம் வழங்கியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக விமர்சனம் வருகிறது 
இஸ்கான் அமைப்பு அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்  அமைப்பாகும். இதன் உணவுப் பழக்கத்தில் சைவ உணவுக்கு மட்டுமே இடம் உண்டு. சைவ உணவிலும் வெங்காயம், பூண்டு தவிர்த்து  அவை உணர்வுகளைத் தூண்டக்கூடியவை என்றும் அதனால் மாணவர்களின் கவனம் சிதறும் என்றும் காரணம் உண்டு அது மாணவர்கள் நோய் எதிர்ப்பு நம் தட்பவெப்ப நிலைக்கு உகந்ததா என்ற வினாவும் உண்டு  
தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் பூண்டு, மிளகு, வெங்காயம் உள்ளிட்டவை தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. அவை உணவின் சுவையுடன், மருத்துவ முறையிலும் நலன் விளைவிக்கின்றன. ஆனால், இஸ்கான் அமைப்பின் அட்சயப் பாத்திரம் திட்டத்தில் அவை முற்றிலுமாகத் தவிர்க்கப்படுகின்றன.
கர்நாடக மாநிலத்தில் இந்த அமைப்பினர் இதே வகையில் உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். அங்குள்ள பிள்ளைகள், சுவை பிடிக்காத காரணத்தால் இந்த உணைவ சாப்பிடாமல் கீழே வீணாவதும் சாப்பிடாமல்  வகுப்புக்குச் செல்வதும், வகுப்பறையில் சோர்வாகி மயங்கிவிடுவதும் அண்மையில் பெரும் சிக்கலை உண்டாக்கியது. அந்த மாநிலத்தில் பல தொண்டு நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கேற்றுள்ளன. மாநில அரசு சொல்லும் உணவுப்பொருட்களை அவை தனது சமையலில் சேர்க்கின்றன. ஆனால், அட்சய பாத்ரா மட்டும்  சேர்ப்பதில்லை. அதனால், இத்திட்டத்தை மாற்றி வேறு அமைப்பினரிடம் இதனை வழங்க வேண்டும் என அம்மாநிலத்தில் கோரிக்கைகள் வலுவடைந்தன. ஆனால், இஸ்கான் அமைப்பு, வெங்காயம்-பூண்டு இல்லாத சமையலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் பள்ளிகளில் உணவு சமைப்பதற்கான அத்தனை கட்டமைப்புகளும் உள்ள நிலையில், தமிழ்நாட்டு உணவுமுறைக்கு மாறான திட்டத்தை தனியார் நிறுவனம் மூலம் நிறைவேற்றுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. வருங்காலத்தில் மதியத்தில் நடக்கும்  சத்துணவுத் திட்டத்தையும் அரசு தன் பொறுப்பிலிருந்து கைவிட்டு, இதுபோன்ற தனியார் அமைப்பிடம் ஒப்படைத்து, முட்டை உள்ளிட்ட சத்தான உணவுகளைத் தவிர்த்துவிடுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அது குறித்த விளக்க வேண்டிய நிலை அரசுக்கே உள்ளன பிராந்திய உணவுக் கலாச்சாரம் தான் இந்த விவாதம் வரக் காரணமாகிறது.
 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...