அதிகாலையில் அரங்கேறிய விபத்து - 19 பேர் பலி
அவினாசி அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெங்களூரிலிருந்து கேரள மாநிலம் ஏர்ணாகுளத்துக்கு கேரள அரசு சொகுசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. சேலம், அவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
கேரளாவில் உள்ள கொச்சினில் இருந்து சேலம் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி டைல்ஸ் கற்களை ஏற்றி வந்தது. சுமார் 50 டன் பாரம் ஏற்றப்பட்டு வந்த நிலையில் லாரியின் டயர் திடீரென வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடம் மாறி எதிரே வந்த கேரளப் பேருந்து மீது மோதியது.
போன மாசம் வள்ளுவர்... இந்த மாசம் எம்ஜிஆர்... தொடரும் காவி நிற சர்ச்சை
இதில் கண்டெய்னர் முழுவதும் பேருந்தின் வலது புறம் முழுவதுமாக அழுத்தியுள்ளது. இந்த கொடூர விபத்தில் 6 பெண்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பேருந்தின் மீதுள்ள கண்டெய்னரை அகற்ற காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் போராடி வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மாநகர துணை ஆணையர் பத்ரி நாராயணன், மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை வேகப்படுத்தினர்.
பாலக்காட்டு மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவர்களும் மீட்புப் பணிகளுக்கு வரவுள்ளனர் என்றும் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கூறினார்
முப்பதுக்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர், 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்