காரைக்குடி நகைக்கடையில் வருமான வரி சோதனை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அம்மன் சன்னதி வீதியில் எம்.எஸ்.பி சேதுராமன் & சன்ஸ் தங்கம் மற்றும் வைர நகை விற்பனைக்கடை உள்ளது
இதில் நேற்று காரைக்குடி வருமானவரித்துறை இணை இயக்குனர் பத்மாவதி தலைமையில் சுமார் 12 பேர் கொண்ட குழுவினர், சோதனையில் ஈடுபட்டனர்.
தங்க நகை விற்பனையில் வரி ஏய்ப்பு நடைபெற்றதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடை பெற்று வருவதாக கூறப்பட்டது.
காரைக்குடி அம்மன் சன்னதியில் உள்ள நகைக் கடை மற்றும் மகர் நோன்பு திடல், சூடாமணி புரம் பகுதிகளில் உள்ள நகை கடை உரிமையாளரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்றுத் தொடங்கிய சோதனை இன்று மதியம் வரை நடந்தது இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற பட்டடதாகத் தகவல்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்