நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு மார்ச் 3 ல் தூக்கு.டெல்லி நீதிமன்றம்
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேரையும் மார்ச் 3 ல் தூக்கிலிட டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளிகளான முகேஷ், அக்ஷய், வினய் சர்மா, பவன் குப்தா ஆகிய நான்கு பேரையும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிட டெல்லி விசாரணை நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்த காரணமாக குறிப்பிட்டபடி தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, குற்றவாளிகள் பிப்ரவரி 1 ஆம் தேதி, தூக்கிலிடப்பட வேண்டும் என்று இரண்டாவது முறையாக உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராகவும், குற்றவாளிகள் தரப்பில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாலும், குடியரசுத் தலைவருக்கு, குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக கருணை மனு தாக்கல் செய்ததாலும், இம்முறையும் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதில் மீணடும் சட்டச்சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் என அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்களை வரும் மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிட, டெல்லி விசாரணை நீதிமன்றம் இன்று மூன்றாவது முறையாக வாரன்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு, குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று திகார் சிறை நிர்வாகத்துக்கு, டெல்லி விசாரணை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு தமக்கு ஆத்மதிருப்தியை அளிக்கிறது என நிர்பயா என அறியப்படும் இளம் பெண்ணின் தாய் ஆஷா தேவி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
அதேசமயம், "இந்த தூக்குத் தண்டனையிலிருந்து குற்றவாளிகளை காப்பாற்ற தங்களுக்கு இன்னமும் சட்ட வாய்ப்புகள் இருக்கிறது" என குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி.சிங் கூறியுள்ளார்.
இதனால் இந்த முறையாவது நிர்யா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலை
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்