பூ வியாபாரி மனைவியின் வங்கிக் கணக்கில் ரூ.30 கோடி சேமித்த முகம் தெரியா நபர். கர்நாடகா ராம்நகர் மாவட்டம் சன்னபட்னா நகர் பூ வியாபாரி சையத் மாலிக் புர்ஹான் என்பவர் மனைவிக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கில் ரூ.30 கோடி பணம் போடப்பட்டிருப்பதாக கூறி தகவல் இவர் வெறும் ரூ.60 மட்டுமே இருப்பு இருந்த நிலையில், பெரிய தொகை எப்படி வந்தது என்று வங்கிக்குச் சந்தேகம் எழுந்தது. உடனே சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை விசாரித்துள்ளனர்.
அப்போது தான் அவருக்கு வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரிக்கையில், சமீபத்தில் ஆன்லைன் மூலம் தனது மனைவிக்கு சேலை ஒன்று வாங்கியதாகவும், அதற்கு கார் பரிசாக விழுந்திருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்காக தங்கள் வங்கி கணக்கு விவரங்கள் வேண்டும் என்று தொலைபேசி மூலம் சிலர் கேட்டு வாங்கியுள்ளனர். அவர்கள் பின்னர் செல்போனிற்கு வந்த OTP குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர்.
ஆனால் இவ்வளவு எப்படி வந்தது என்று தனக்கு தெரியாது என்று கூற இதுபற்றி சன்னப்பட்னா போலீசில் அளித்த புகாரின் பேரில் மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக காவல்துறையினர் கருத்து : இதே வங்கிக் கணக்கில் முறைகேடாக பல பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இதை யார் செய்தது என்று விசாரித்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றனர். மேலும்
இது தொடர்பாக விளக்கம் அளித்த பாரத் ஸ்டேட் வங்கி நிர்வாகம்: வங்கிக் கணக்கு மற்றும் OTP விவரங்கள் வாடிக்கையாளர் மூலம் அடையாளம் தெரியாத நபர்களுக்கு பகிரப்பட்டுள்ளது. இந்த மோசடியில் வங்கிக்கோ அல்லது வங்கி கிளைக்கோ எந்தவித தொடர்பும் இல்லை. இந்த வங்கி கணக்கு தொடர்பாக சண்டிகர், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் ஆகிய இடங்களில் மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். யாரோ போலி அடையாளத்தை கொண்டு மோசடியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். வாடிக்கையாளர்கள் யாரும் தங்கள் செல்போனிற்கு வரும் OTPஐ யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என்று வங்கி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் முகம் தெரியாதவர்கள் மூலம் அடுத்தவர் கணக்கில் வரவுவைத்த குற்றவாளிகள் யாரோ..
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்