சென்னை காட்டாங்குளத்தூர் ஆதரவற்றவர்களின் காவலர் சிவானந்தா குருகுலத்தின் பொதுச் செயலாளர் பத்மஸ்ரீ டாக்டர் எஸ். ராஜாராம் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன்.
ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனப் பலருக்கும் அடைக்கலம் தந்து பாதுகாத்து வரும் ஆசிரமத்தினை மிகுந்த ஈடுபாட்டோடு அவர் நடத்தி வந்தார். ராஜாராம் அவர்களின் மறைவால் வாடும் அனைவருக்கும் பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் அவரது ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்