முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேட்டைக்காரனுக்கு வேட்டை மட்டுமே தொழிலல்ல அதுவே சீமான் விவகாரங்களில் ஆணிவேர்

       ''நீயெல்லாம் ஒரு பொண்ணா.. வெளில சொல்லிராதே''. என்னா பேச்சு இது.. நடக்கிறதே வேற... வெளுத்த  காளியம்மாள்... பதில் கொடுத்த விஜயலட்சுமி
 "நீயெல்லாம் ஒரு பெண்ணுன்னு சொல்லிட்டு திரியாதே.. யாராவது காசு கொடுத்தா, வீட்டு கஷ்டத்துக்காக விலைமாதுவாக போகக்கூடிய பெண்களை கூட நான் பார்த்திருக்கிறேன்.ஆனால் கருத்தியலை களவாடி காசுக்கு வாங்கிட்டு விற்கக்கூடிய பச்சை துரோகியை இங்கதான் பார்க்கிறேன். இனி எந்த உறவையாவது சொல்லி பேசுனே.. நடக்கிறது வேற.. எல்லா பெண்களும் கொந்தளிச்சுடுவோம்.என்னா பேச்சு இது?" என்று நாம் தமிழர் கட்சி காளியம்மாள் நடிகை விஜயலட்சுமியை எச்சரித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின்  பேச்சாளர் காளியம்மாள், பொதுக்கூட்டத்தில் பேசி நடிகை விஜயலட்சுமிக்கு எச்சரிக்கை விடுக்க. அந்த கூட்டத்தில் மேலும் காளியம்மாள் 
"நான் ஒரு மீம் பார்த்தேன்... "முந்தானை முடிச்சு"ன்னு ஒரு படம்.அந்த படத்துல ஒரு பையனுக்கு ட்டிரவுசர் கழண்டுடும்.. குத்திவிட பின் இருக்காது.. அவரே வந்து போட்டுவிடுவாரு.. உடனே அந்த பையன் சார் சார்.. நானே போட்டுக்கறேன் சார்அப்படீன்னு.. அந்த பையனுக்கு நேரே ஸ்டாலின்னு போட்டோ வெச்சிருக்காங்க. பாக்கியராஜ் படத்துக்கு நேரே பிரசாந்த் கிஷோர்னு  வெச்சிருக்காங்க.. ரொம்ப நேரமா விழுந்து விழுந்து சிரிச்சிட்டேன்.. ஏன்டா ட்டிரவுசர் கூட போட தெரியாதவனுங்களாடா நீங்க
தங்கள் வீடுகளை அவ்வளவு திறம்பட, சிறப்பாக, நிர்வகிப்பவர்கள் பெண்கள்.. வீட்டை முன்னெடுத்து செல்லும் வீரமிக்க ஒரு பெண்ணால் அரசியல் நிர்வாகத்தை சரியாக செய்யும் என்ற நம்பிக்கையில், 50 சதவீத இட ஒதுக்கீட்டை தந்து, பெண்களை களத்தில் நிற்க வைத்து வருகின்ற 2021 தேர்தலில், 117 இடங்கள் ஆண்கள், 117 இடங்களை பெண்களுக்கு தந்து நிற்க வைக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி .
ஆனால், எந்த மனிதரை பெண்களை வன்மைப்படுத்துவதாக ஒப்பிடுவது? அந்தம்மா சொல்லிட்டு கிடக்கு.. ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையின் அருமை தெரியுமா? அன்பு தெரியுமா? உணர்வு தெரியுமா? அந்த இணக்கம்தான் எங்கள் அண்ணனுக்கும் எங்களுக்கும் இருக்கக்கூடிய உணர்வு.. இனி ஒரு நாக்கு, எங்க அண்ணனையும், மத்த பெண்களையும் ஒன்றுபடுத்தி பேசினே
அண்ணன்-தங்கையா பேசு, தகப்பன்-மகளா பேசு, வேற எந்த உறவையாவது சொல்லி பேசுனே.. நடக்கிறதே வேற.. எல்லா பெண்களும் கொந்தளிச்சுடுவோம்.. என்னா பேச்சு இது? நீயெல்லாம் ஒரு பெண்ணுன்னு சொல்லிட்டு திரியாதே.. யாராவது காசு கொடுத்தா, வீட்டு கஷ்டத்துக்காக விலைமாதுவாக போகக்கூடிய பெண்களை கூட நான் பார்த்திருக்கிறேன்... ஆனால் கருத்தியலை களவாடி காசுக்கு விற்கக்கூடிய பச்சை துரோகியை இங்கதான் பார்க்கிறேன்.
ஒரு மனிதன் இந்த மண்ணையும் மக்களையும் நேசித்து, இயற்கை வளங்களை நேசித்து.. எல்லா வகை அரசியலையும் பேசுகிறார்.. ஆனால் எந்த அரசியல் கட்சியாவது எங்காவது ஒரு குளத்தை தூர்வாருதா? ஆனால் சாக்கடை அள்ளுகிறார்கள் எங்க பிள்ளைங்க.. இதெல்லாம் அரசியலுக்காக? இல்லை,.. உங்கள் வருங்கால தலைமுறைக்காக.. எங்களுக்கு ஒரு பேர் வெச்சிருக்காங்க, சீமான் தம்பி தங்கைகள் கத்தி கத்தி பேசுறாங்கன்னு.. யாருக்காக கத்துறோம்.. புரிந்துகொள்ளுங்கள், நம் அடுத்த தலைமுறை எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்" என்றார். அதுசரி இவரைத் தலைவரா ஏற்று காளியம்மா அரசியலுக்கு வரும்முன்பே நடிகை விஜயலட்சுமியை நடிகர் சீமான் அறிவார் என்பது அறிவாரா.பாவம் ஒவ்வொரு அரசியல் வாதியின் வாழ்வியல் முறை வேறு அரசியல் முறை வேறு இதை காளியம்மாள் மாதிரி பேச்சாளர் அறிந்து பேசவில்லை என்பது தான் இது விவாதமாக.விஜயலட்சுமி அவரது அரசியல் அங்கீகாரம் கேட்டு வரவில்லை அது அவரது அந்தரங்கம் அதில் அறிஞர் அண்ணா போல சீமான் இருந்தால் வெற்றி ..புலி வேட்டைக்குப் போகும் போது சுள்ளி ஒடிக்கும் சத்தத்திற்கு எல்லாம் தோட்டாவை இழப்பது போல உண்மையான புலி வரும்போது காளியம்மள் மாதிரி தேட்டாக்கள் மீதமிருக்குமா? விஜயலட்சுமி சீமான் விவகாரங்களில் காளியம்மள் மூன்றாம்‌ நபர் அவ்வளவு தான் இதுவே பொது நீதி அதாவது பள்ளிக் ஜஸ்டிஸ்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...