முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கெத்துக்காட்டிய முதல்வர்,சட்டப்பேரவை நிகழ்வுகள்

              றைந்த முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளான 24-பிப்ரவரியை "மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்" என்று அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் பழனிச்சாமி.
அதோடு பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு 21 வயது நிரம்பும் போது அவர்களுக்கு ₹2 லட்சம் நிதி வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
அதோடு இல்லை 
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவாதத்தில், சட்டசபையில், நேற்று ஆவேசமாகப் பதிலளித்த முதல்வர், தி.மு.க.,வை உரித்தெடுத்தார். 'குடியுரிமை திருத்த சட்டத்தால், யாராவது ஒருத்தருக்காவது பாதிப்பு ஏற்பட்டதா எனச் சொல்லுங்கள், என, சவால் விட்டதுடன், 'இந்த விவகாரத்தில், உங்களை போல நாங்கள் நடிக்கவில்லை; நாடகமாடவில்லை, என தி.மு.க.,வை கடுமையாக சாடினார். விவாதம்:
தி.மு.க.வின் மனோ தங்கராஜ்:
தமிழக அரசின் கடன், 4.56 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், கட்டுக்குள் உள்ளதாக, துணை முதல்வர் கூறுகிறார். சர்க்கரை நோய் இருப்பதாக தெரிந்தால், உச்ச வரம்புக்குள் தான் உள்ளது என அமைதியாக இருக்காமல், சர்க்கரை அளவை குறைக்க, சிகிச்சை மேற்கொள்வோம். அதேபோல, கடன் சுமையை குறைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில வருவாயில், 13 சதவீதம் மட்டுமே, முதலீட்டிற்கு செலவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, நம்மை வஞ்சிக்கிறது என்பதை, தொடர்ந்து கூறி வருகிறோம். அது, பட்ஜெட்டிலும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. மத்திய அரசு, 30 ஆயிரம் கோடி ரூபாய், நிலுவைத்தொகை தர வேண்டியுள்ளது. அதேபோல, மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்காக வழங்கிய, 28 ஆயிரத்து, 179 கோடி ரூபாய், திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. மத்திய அரசு என்ன தவறு செய்தாலும், அமைதியாக இருக்கிறீர்கள்.
அமைச்சர் ஓ.எஸ்.மணியன்:
மத்திய அரசில், தி.மு.க., இடம் பெற்றிருந்த போதும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, அரசிதழில் வெளியிட, நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெ., சட்டப் போராட்டம் நடத்தி, வெளியிடச் செய்தார். மத்திய அரசில், 16 ஆண்டுகள் இடம் பெற்றிருந்தும், தமிழகத்திற்கு எதை கேட்டு பெற்றீர்கள்?
தி.மு.க., கூட்டணி அரசு, மத்தியில் இருந்த போது தான், மாநில பட்டியலில் இருந்த கல்வி, மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டது.நாங்கள், தமிழகத்திற்கு எதிரான திட்டங்களை எதிர்க்கிறோம். மத்திய அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம்.
தி.மு.க. சக்கரபாணி:
மாநில பட்டியலில் இருந்து, மத்திய பட்டியலுக்கு, கல்வி மாற்றப்பட்ட போது, தி.மு.க., ஆட்சியில் இல்லை. 'நீட்' தேர்வுக்காக, இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றினீர்கள்; உச்ச நீதிமன்றம் சென்றுள்ளீர்கள்; ஆனால், 'நீட்' தேர்வை எதிர்க்கவில்லை. தேசிய வங்கிகளில், விவசாய கடனுக்கான வட்டியை, மத்திய அரசு, 3 சதவீதத்தில் இருந்து, 8 சதவீதமாக உயர்த்தி உள்ளது. அதை, தட்டி கேட்க முடியவில்லை.
முதல்வர்:
உங்கள் எம்.பி.,க்களை, குரல் கொடுக்க சொல்லுங்கள்; இங்கு பேசி பிரயோஜனமில்லை. இங்கு பேசினால், நாங்கள் கேட்கத் தான் முடியும்; அங்கு பேசுங்கள்.
சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்:
நீங்கள் மத்திய அரசில் இடம் பெற்றிருந்த போது தான், 'நீட்' தேர்வு கொண்டு வரப்பட்டது. இது குறித்து பேச, உங்களுக்கு உரிமை இல்லை. அதேபோல், 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தை கொண்டு வந்ததும் தி.மு.க., ஆட்சியில் தான். இது தொடர்பாக, டி.ஆர்.பாலு அளித்த பேட்டி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
முதல்வர்:
ஐந்து ஆண்டுகள், மத்திய அமைச்சரவையில், பதவி சுகத்தை அனுபவித்தது நீங்கள். நாங்கள், அமைச்சரவையில் இடம்பெறவில்லை. ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதும், இலாகா இல்லாத மத்திய அமைச்சராக இருந்தார்.
மனோதங்கராஜ்:
மத்திய அரசை பகைத்துக் கொள்ள விரும்பாததால் தான், இந்திய குடியுரிமை திருத்த சட்டத் திற்கு எதிராக, தீர்மானம் கொண்டு வர மறுக்கிறீர்கள்.
முதல்வர்:
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தால், யார் பாதிக்கப்பட்டுள்ளார்; பாதிக்கப்பட்டவர் யாராவது ஒருவர் இருந்தால் கூறுங்கள். தவறான தகவல்களை கூறி, அமைதியாக வாழும் மக்களிடம், பிரச்னைகளை ஏற்படுத்துகிறீர்கள்.
மனோதங்கராஜ்:
பாதிப்பு இருப்பதால் தான், பல மாநிலங்களில், அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
முதல்வர்:
அதுபற்றி, மத்திய அரசு முடிவு செய்யும். நாங்கள், உங்களைப் போல நடிக்கவில்லை; நாடகமாடவும் இல்லை. இவ்வாறு, விவாதம் நடந்தது.
என்னா அடி.. எடப்பாடியார்னா பொட்டு வச்சிகிட்டு, பொங்கல் சாப்டுறவர்னு நினைச்சியா.. மிரண்ட சட்டசபை!
 என்னா அடி..எப்பா "கலக்கறாரே முதல்வர்" என்று பாராட்டுக்கள் குவியத் தொடங்கி உள்ளன.. நேற்று சட்டசபையில் குடியுரிமை சட்டம் குறித்து முதல்வர் பேசிய ஆவேச பேச்சுக்களைதான் சோஷியல் மீடியாவில் இப்போது நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்!
வெள்ளை வேட்டி சட்டை, விபூதி என சாந்தமாக காணப்படுபவர் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.. எப்போதுமே மென்மை போக்கை கடைப்பிடிப்பவர்.. யாராக இருந்தாலும் இந்த முதல்வரை எளிதில் அணுகி பேசும் அளவுக்கு இயல்பானவர்.. கெடுபிடியோ, கடுகடு பேச்சோ என்றுமே கிடையாது.. இப்படித்தான் இந்த 3 வருஷமாக முதல்வரை நாம் பார்த்து வந்துள்ளோம்.
நேற்றுதான் முதல்முறையாக எடப்பாடியாரின் கோபத்தை பார்க்க நேர்ந்தது.. "எங்களை 37 எம்பிக்கள் இருக்கீங்களே... என்ன செய்யறீங்கன்னு கேள்வி கேட்டீங்களே.. இப்ப நீங்க 38 பேர் இருக்கிறீர்களே என்ன செய்யறீங்க? வேளாண் மண்டலத்தை நீங்களே பேசி வாங்க வேண்டியதுதானே" என்று முதல்வர் பேசியதும் கப்சிப் ஆனது சபை!!
தொடர்ந்து பேசிய முதல்வர், "இதனால் யார் பாதிக்கப்பட்டிருக்காங்க சொல்லுங்க நாங்க தீர்வு காணவேண்டும்... தமிழ்நாட்டில் வாழுகின்ற தமிழ் மண்ணில் பிறந்திருக்கின்ற எந்த சிறுபான்மை மக்கள் பாதிச்சிருக்காங்க என்று சுட்டிக்காடுங்க... நாங்க அதுக்கு பதில் சொல்றோம்.. அதை விட்டுவிட்டு மக்களை ஏமாற்றி நாடகமாடி, தவறான அவதூறான செய்தியையே சொல்லி... இன்றைக்கு நல்லா அமைதியாக நல்லபடியாக இருக்கும் தமிழ்நாட்டில் குந்தகம் ஏற்படும் நிலைக்கு ஆளாக்கியிருக்கிறீர்களே.
என்ன சொல்லுங்க, யார் பாதிச்சிருக்கிறது சொல்லுங்க நான் விளக்கம் சொல்கிறேன்" என்று முதல்வர் இப்படி ஆவேசமாக பேசுவார்என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.. ஆனால், முதல்வர் இதை கேட்டபோது, ஸ்டாலின் அவையில் இல்லை.. அதேபோல, மூத்த தலைவர்கள் துரைமுருகன் உள்ளிட்டோரும் எந்த பதிலும் இதற்கு சொல்லவில்லை. இந்தச் செயல்படுகள் அவர் மீது மக்கள் பாராட்டும் படி உள்ளன


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...