கைலாசாவை கட்டி முடிச்சிட்டேன் அப்படியே நானும் செத்துட்டேன் நித்யானந்தா பகீர் தகவல்!
சாமியார் நித்யானந்தா வெளியிட்டுள்ள புதிய காணொளிக்கட்சி பல்வேறு விஷயங்களை தெரிவித்து பரபரப்புக் கிளப்பியுள்ளார்.
நடிகை ரஞ்சிதா வீடியோ ஜனார்த்தன ரெட்டி மகள்கள் கடத்தல் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சாமியார் நித்யானந்தா. பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் கர்நாடக காவல்துறை விடாமல் தேடுகிறது.
சற்றும் சளைக்காமல் எங்கோ ஓரிடத்திலிருந்த படியே அவ்வப்போது யு-டியூப்பில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.
கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி அதற்கான குடியுரிமை அம்சங்கள் வரை முடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. இப்போது புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் பேசிய நித்யானந்தா, வாடிகன் போன்று இந்து மதத்திற்கு என்று தனியான இடம் வேண்டும் என்று விரும்பினேன்.
இதற்காக 20 ஆண்டுகளாக உழைத்தேன். பல்வேறு விதமான தாக்குதல்களை எதிர்கொண்டேன். இருப்பினும் இதற்கான பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டேன். பல நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகளும் தொடங்கிவிட்டன.என அதில் தெரிவித்துள்ளார் இது குறித்து நல்லாதனாரின் திரிகடுகம் (38) கூறுவது
- ''தன்னை வியந்து தருக்கலும்
தாழ்வு இன்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும்,
முன்னிய பல் பொருள் வெஃகுஞ் சிறுமையும்,
- இம் மூன்றும்
செல்வம் உடைக்கும் படை''.
இதற்கு விளக்கம் தேவை இல்லை
.
கருத்துகள்