முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொரோனா வைரஸ் நோய் (COVID-19) பாதிப்பால் புதுக்கோட்டை நபர் இறந்தாரா விசாரணை

         கொரோனா வைரஸ் நோய் (COVID-19) பாதிப்பு  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த உணவகம் நடத்தும் சக்திகுமார். கடந்த 4-ம் தேதி சீனாவிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். வந்த சில நாளில்  உடல்நலக்குறைவு ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் கடந்த 14 ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் மஞ்சள் காமாலை இருந்ததாக கூறப்படுகிறது. 
சக்திகுமார் இறந்தது குறித்து சுகாதாரத்துறையிடம் கேட்டபோது அவர் சீனாவில் இருந்து திரும்பியவர் என்பதே இப்போது தான்  அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. சீனாவில் இருந்து திரும்பியவர்களை கண்காணித்து வருவதாக கூறும் நபர்களின் பட்டியலில் சக்திகுமார் பெயர் இல்லை.  உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக்திகுமார் உண்மையிலேயே மஞ்சள் காமாலை நோயால் இறந்தாரா? அல்லது கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தாரா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.கொரோனா கோரத் தாண்டவம்.. சிகிச்சையளித்தவர்களையும் காவு கேட்கிறது.. வுஹான் மருத்துவமனை இயக்குநர் சீனாவின் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று 1,868 ஆக உயர்ந்தது, கடந்த 24 மணி நேரத்தில், 98 பேர் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனர்.
உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 72,436 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சமீபத்தில் பலியானவர்களில், 93 பேர் வைரஸ் பரவத் தொடங்கிய மையப்பகுதியான ஹூபே மாகாணத்தை சேர்ந்தவர்கள், ஹெனானை சேர்ந்த மூன்று பேரும், ஹெபீ மற்றும் ஹுனானில் இருந்து தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹூபேயில், 1,807 புதிய உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். கொடுமையின் உச்சமாக, வுஹான் பகுதியிலுள்ள ஒரு மருத்துமனையின் இயக்குநரும், கொரோனா வைரஸ் தாக்கி பலியாகியுள்ளார்.
வுஹானில் உள்ள வுச்சாங் மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங் செவ்வாய்க்கிழமை காலை பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது சிகிச்சை முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் லியு ஜிமிங் இறந்தார் என்று சீன அரசின் ஊடகம் சி.சி.டி.வி தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் இறந்த முதல் மருத்துவமனை இயக்குனர் இவர் என்பது பெரும் சோகம்.
இதனிடையே, மார்ச் 2 முதல் அமெரிக்க மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான வரியை ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் நடந்து வந்தது. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி வரிகளை தாறுமாறாக கூட்டிக் கொண்டன. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா, இந்த மருத்துவ உபகரணங்களை, சீனா அனுப்பி வைத்துள்ளது. அவற்றுக்கான வரியை சீனா ரத்து செய்ய முன்வந்துள்ளது.



  • சீனாவில் ‘கொவைட்-19’ வைரஸுக்கு (கரோனா வைரஸ்) பலியானவா்களின் எண்ணிக்கை 1,868ஆக உயா்ந்துள்ளது.
    சீனாவின் ஹூபே மாகாணத்தில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 93 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கொவைட்-19 வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,868ஆகவும்
    இதுதவிர, கடந்த ஒருநாளில் சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸ் கூடுதலாக 1,886 பேரைத் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 72,436க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது. இது நம் நாட்டில் அதிகம் பாதிக்காது அதற்குக் காரணம் பல உலகின் முதல் எயிட்ஸ் நோயாளி-காங்கோ.
    உலகின் முதல் நிபா வைரஸ் நோயாளி-மலேஷியா.
    உலகின் முதல் கொரோனா நோயாளி-சீனா.
    உலகின் முதல் எபோலா நோயாளி-தெற்கு சூடான்.
    உலகின் முதல் பறவைகாய்ச்சல் நோயாளி-ஹாங்காங்.
    உலகின் முதல் டெங்கு நோயாளி-மணிலா.
    ஆனால் வருடம்தோறும் புஷ்கரம்,கும்பமேளா,  தேர் திருவிழா  என லட்ச கணக்கில் கூட்டம் கூட்டமாக நதிகளில் முங்கி எழும் நம் நாட்டில் இவை தோன்றவில்லை. ப்ளேக், பெரியம்மை, காலராவும் கூட நமக்கு ஐரோப்பியக் கொடை என்பதே உண்மை நமது வாழ்வியல் உணவு  முறை மருத்துவம் சார்ந்தே சீனாவின்
    இரண்டு நகரத்தை நரகமாக்கிய கொல்லை  நோய் (கொரோணா) வூகான்,ஹூவே இந்த நகரகளை சீனாஅரசு கைவிட முடிவு கடந்த பத்து வருடங்களில் உலகமே வியக்கும் அளவு கட்டுமானம் உற்பத்தி ராணுவம் என சகல துறையிரும் அபார வளர்ச்சி பெற்றது சீனா. ஆனால் உணவு பழக்கவழக்கங்கள் வாழ்வியல் நெறிமுறைகள் என எதையும் சரியாக கடைபிடிக்காத காரணத்தால் கொரானா வைரஸ் என்ற கொடிய நோயால் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொடுத்து கொண்டிருக்கிற
     எண்ணிக்கை மிகக்குறைவே ஆனால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கபட்டவர்கள் பல மடங்கு அதிகம் என வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கொரானா வைரஸால் பாதிக்கபட்ட வூகான் மற்றும் ஹூவே மாகாணங்களை இழந்தாலும் பரவாயில்லை நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு சீன அரசு வந்துவிட்டது. 
    அந்த குறிப்பிட்ட மகாணங்களில் இருந்து வரும் வீடியோக்கள் அதிர வைக்கின்றன. அங்கு நிலவி வரும் 4-5 டிகிரி  கடும் குளிர் நோயை வேகமாக பரப்பி வருகிறது. சீதோஷண நிலை மாறினால் மட்டுமே நோயின் தாக்கம் குறையும் என்பதே இன்றைய நிலை வருடம் முழுவதும் வெப்பமாக இருக்கும் நம் நாட்டிலே நம் முன்னோர்கள் எந்த மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும் எதை உண்ண வேண்டும் என சொல்லி வைத்தனர் ஒவ்வொரு கடவுளின் பெயரால் மக்களை கட்டுபடுத்தி வைத்தனர். எந்தந்த நாட்களில் அசைவம் உண்ணகூடாது என்பதும் எந்த நாட்களில் விரதம் இருக்க சொல்லியதும்  ஆன்மீகமே.பிற உயிர்களை புசிககும் விலங்குகள் போல வாழ்ந்த மனிதனை மனிதனாக மாற்றியது ஆன்மீகமே. மேலும் எந்த ஒரு நாடும் ஒரு நல்ல கலாச்சாரத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் கட்டமைக்க பட்டிருக்க வேண்டும் இல்லாவிட்டால் அந்த வளர்ச்சியால் பயனில்லை என்பதே சீனா நமக்கு உணர்த்தும் பாடம். ஆனால் இங்கே கலாச்சாரம் பண்பாடு என்பது மதம் சார்ந்தே இருக்கிறது.
    சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக இந்திய மருந்து உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது._ தலைவலி, காய்ச்சல், நீரிழிவு, நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்பட, அத்தியாவசிய மருந்துகள் இந்த மாதம் வரைதான் இருப்பு உள்ளன.
    எனவே, அடுத்த மாதம் இவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது என பிக்கி தெரிவித்துள்ளது.சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில்துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், கொரோனா வைரசால் தொழில்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. தொழில்துறையினரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, கொரோனா வைரசால் மருந்து பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிப்பு அடைந்து வருகிறது.
     இந்தியாவில் மருந்து உற்பத்திக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருட்கள் தேவைக்கு 70 சதவீதம் சீனாவையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. 
    சில மருந்துகளுக்கான மூலப்பொருட்கள் இருப்பு 2 முதல் 3 மாதங்கள் வரை உள்ளது. ஆனால், சில அத்தியாவசிய மருந்துகளுக்கு கூட தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...