குடும்ப அட்டை பெயர் மாற்ற 700 ரூ கையூட்டுப்பெற்ற வட்டாட்சியருக்கு, ஓராண்டு சிறையும் அபராதமும்குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற வழக்கில், பெண் வட்டாட்சியர் மற்றும் அலுவலருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.கோயமுத்தூர் மாவட்டம் செல்வபுரத்தைச் சேர்ந்த காசாளபாண்டி நகை பட்டறைத் தொழிலாளி. இவரது குடும்ப அட்டையில், காசாளபாண்டி என்பதற்கு பதிலாக, 'காசபாண்டி' என தவறாக அச்சடிக்கப்பட்டு இருந்தது. பெயரில் பிழை திருத்தம் செய்ய, கோயமுத்தூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள, குடிமைப் பொருள் பிரிவில் விண்ணப்பித்தார். பெயர் மாற்றி தருவதற்கு, இளநிலை உதவியாளர் வனிதா பிரபா,வயது 50, குடிமைப்பொருள் வட்டவழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, வயது 55, ஆகியோர், 700 ரூ லஞ்சம் கேட்கவும்
ஊழல் தடுப்பு மற்றும்இலஞ்ச ஒழிப்பு போலீசில், காசாளபாண்டி 08.11.2010ல் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து தாசில்தார் அலுவலகம் கேட்ட லஞ்சம் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர், இருவரையும் பணம் பெற்றதும் கைது செய்தனர்.அவர்கள் மீது, கோயமுத்தூர் லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நடந்துவந்த நிலையில்.நீதிபதி தோத்திரமேரி, குற்றம் சாட்டப்பட்ட வனிதா பிரபா, ராஜேஸ்வரி ஆகியோருக்கு, தலா ஓராண்டு சிறையும், தலா, 4000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். அரசுத்துறையில் இலஞ்சம் ஒழிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல ! அரிதான செயல் ...வாயால் குறைபேசும் யாரும் இலஞ்ச ஒழிப்பதில் ஈடுபடுவதில்லை, காரணம் ஒன்று பயம் அல்லது பாவம் என பரிதாபம்.இரண்டுமோ அல்லது நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கும் நிலை ...இதை எல்லாம் கடந்த பலருக்கு பல சொந்த வேளைகளில் நேரம் ஒதுக்க இயலாமை ...அல்லது வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாமை இது எல்லாம் ஒருங்கே அமைந்த சிலர் மட்டுமே நடவடிக்கையில் இறங்கி வெல்லும் வலிமை உண்டு . அதனால் காசாபாண்டி போல பலரும் அதனால் புகார் செய்வதில்லை காரணம் சந்தித்துக் கடந்து வந்த எதிர்ப்புகளும் அதிகம் இதுபோன்ற தண்டனைகள் பலருக்கும் துணிச்சல் உருவாக்கும் என்பதுவே நமது மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படும்.மாதச்சம்பளம் மட்டுமே வாங்கும் நபர்கள் கிம்பளம் என இணைத்து வாங்கும் நிலை ஒழிந்தால் நல்லது
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்