முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வசீகரத் தலைவரை வசப்படுத்தும் மூன்றாம் தரப்பு

           னது படங்களில் பொதுவுடமைக்  கருத்துகளையும் பாடல்களையும் எம்.ஜி.ஆர். இடம் பெறச்செய்வார். ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆரின்  கொள்கைகளுக்கு ஏற்ற பாடல்களுக்கு வரிவடிவம் தந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். எழுதிய பாடல் ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி..’ என்பதாகும் தனது ‘நாடோடி மன்னன்’ படத்தில் அந்தப் பாடல் வரிகளில் திரைக்கு ஏற்றவாறு பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பல ஆண்டுகளுக்குப் பின்னர் நடக்கப் போவதை தீர்க்க தரிசனமாக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதியது போல அமைந்த அந்த வரிகள்தான்... ‘நானே போடப் போறேன் சட்டம், பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்... நாடு நலம் பெறும் திட்டம்...’     கால ஓட்டம் சட்டம்  இயற்றக் கூடிய இடத்தில், 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் வென்று எம்.ஜி.ஆர். முதல்வரானார்.
அவரது  வசீகர சக்தி எல்லோரும் அறிந்தது.


கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பால தண்டாயுதம். திமுகவை  விமர்சித்து வந்தவர். குறிப்பாக, அப்போது திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மிகக் கடுமையாக தாக்கி பேசியவர்.  திமுகவிலிருந்து பின் காங்கிரஸில் இணைந்த கவியரசர் கண்ண தாசன் உள்ளிட்டோறும்  எம்ஜிஆரை  விமர்சனம் செய்தே பேசிய காலம் . அவர்கள் சொல்லும் காரணம் ‘அறிஞர் அண்ணாவால் முகத்தை காட்டினாலே பல்லாயிரம் வாக்குகள் கிடைக்கும் என பாராட்டப்பட்ட எம்ஜிஆர்தான் திமுகவின் வாக்குகளை ஈர்க்கும் சக்தியாக விளங்கினார். எனவே, தாக்கி  விமர்சனம் செய்வதன் மூலம் திமுகவை பலவீனப்படுத்தி விடலாம்’ என்பது தான் 


கம்யூனிஸ்ட் மூத்த  தலைவரான ஜீவா அவர்களின் மீது பேரன்பு கொண்டவர் பாலதண்டாயுதம். ஜீவாவின் மரணத்துக்குப் பின் அவருக்கு சிலை எழுப்ப பாலதண்டாயுதம் முடிவு செய்தார். நேர்மைக்கும் எளிமைக்கும் உதாரணமாகத் திகழ்ந்த, எல்லா தரப்பினரின் மதிப்பையும் பெற்றிருந்த ஜீவாவின் சிலையை நிறுவுவதற்காக கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்கள், பிரமுகர்களிடம் நிதி திரட்டினார் பாலதண்டாயுதம். ஓரளவு நிதி சேர
‘எம்.ஜி.ஆரிடமும் நிதி கேட்கலாமா?’ என்று பாலதண்டாயுதத்துக்கு ஒரு யோசனை. ஆனால், எம்.ஜி.ஆரைப் பற்றிய தனது கடுமையான விமர் சனங்கள் அவரது மனதில் நிழலாடி தயக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் எம்.ஜி.ஆரை சந்தித்து ஜீவாவின் சிலைக்கு நிதி கேட்பது என்று முடிவு செய்து அவரை சந்தித்தார். ‘தனக்கு வரவேற்பு எப்படி இருக்குமோ’ என்று தயங்கிபடி சென்ற பாலதண்டாயுதத்தை அகமும் முகமும் மலர மகிழ்வாக வரவேற்றார் எம்.ஜி.ஆர்.
வந்த விவரம் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு மேலும் மகிழ்ச்சி. மனபூர்வமாக நன்கொடை வழங்குகிறேன் என்றார். பாலதண்டாயுதத்துக்கும் மகிழ்ச்சி ஒருபுறம். அதோடு, தான் பல சந்தர்ப் பங்களில் தாக்கி பேசியும் அதுபற்றிய விவரமே தெரியாதவர் போல தன்னுடன் எம்.ஜி.ஆர். இன்முகத்துடன் பழகியதால் வியப்பு 
‘‘சிலை வைக்க உங்கள் கணக்குப்படி எவ்வளவு செலவாகிறது?’’ எம்.ஜி.ஆர். கேட்டார்.
குறிப்பிட்ட தொகையைச் சொல்கிறார் 
‘‘அந்த தொகைதான் என் நன்கொடை’’என்றார் இது தான்  எம்.ஜி.ஆர்.
பாலதண்டாயுதத்துக்கோ இன்ப அதிர்ச்சி. பின்னர், அவரிடம் ‘‘நான் கம்யூனிச கொள்கையில் ஈடுபாடு கொண்டவன். என் படங்களில் பாடல்கள், வசனங்கள் மூலம் கம்யூனிச கொள்கைகளையும் சொல்லி வருகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பொதுவுடமை கொள்கை உடன் பாடே. சிறந்த பேச்சாளரான நீங்கள் உங்கள் பேச்சால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உங்கள் ஆற்றலை என்னை தாக்கு வதில் வீணடிக்கிறீர்களே? பொதுவுடமைக் கொள்கையை பரப்புவதில் நீங்கள் மேலும் சிறப்பாக தொண்டாற்ற வாழ்த்துகள்’’ என்றார் எம்.ஜி.ஆர்.
அவரது உயர்ந்த குணத்தையும் பண்பையும் அறிந்து நெகிழ்ந்த பாலதண்டாயுதம், அன்று முதல் எம்.ஜி.ஆரை தாக்குவதை நிறுத்தியதோடு மட்டுமல்ல; அவரது குணநலன்களை நண்பர்களிடம் புகழ்ந்தார்.
அது மாத்திரமல்ல, திமுகவில் இருந்து நீக்கப்பட்டு எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கிய பின் கம்யூனிஸ்ட்கள்  ஆதரவு அளித்தனர். ‘‘ஊழலை எதிர்க்கிறார்; லஞ்சத்தை எதிர்க்கிறார் என்பதற்காக எம்.ஜி.ஆர். மீது ஒரு துரும்போ,  கீறலோ பட்டாலும் தமிழ்நாட்டில் மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எச்சரிக்கையாக பிரகடனப்படுத்துகிறேன்’’ என்று சென்னை கோடம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் பாலதண்டாயுதம் பேசும் அளவுக்கு எம்.ஜி.ஆர். மீது அவர் அன்பு கொண்டார்.
மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் வசீகரத்தின் பெயர் தான்  எம்.ஜி.ஆர்.
அதிமுக தொடங்கிய 7 மாதங்களிலேயே திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் 1973 மே 20-ம் தேதி நடந்தது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்தன. அதிமுக வேட்பாளரான மாயத்தேவர் இரண்டு  லட்சத்து அறுபதாயிரத்து தொள்ளாயிரத்து முப்பது வாக்குகள்  பதிவானதில் பாதிக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார். ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் திமுக மூன்றாவது இடத்தையும் பெற்றன. இந்திரா காங்கிரஸ் ஜாமீன்தொகையை இழந்தது. இந்த பிரம்மாண்ட வெற்றி அகில இந்தியாவும் எம்.ஜி.ஆரைத் திரும்பிப் பார்க்க வைத்தது! அப்பேர்ப்பட்ட சக்தியானவர் தற்போது ஸ்ரீ MGR வாழ்க என ஒரு குரூப்  களமிறங்கியுள்ளது
அவர்கள்  தெய்வமாக வைக்கத் துவங்க பல காரணம் உண்டு 
ஒவ்வொரு மனிதனும் தனக்கு மட்டும் தன்னுடைய சொந்தக்காரர்களும் நண்பர்களும் குடும்பத்தார்கள் துரோகம் செய்யக் கூடாது என்று நினைக்கிறார்கள்
அதேபோல் தான் ஒவ்வொரு எம்ஜிஆர் ரசிகனும் தனது கட்சிக்கு  யாரும் துரோகம் செய்யக்கூடாது என நினைக்கிறார்கள்
மேடையேறி எம்ஜிஆர் அவர்களைப்பற்றி பெருமைபட பேச முடியாது 
அண்ணா திமுக விளம்பர போஸ்டர்களில் எம்ஜிஆர் படம் கிடையாது 
எம் ஜி ஆருக்கு கட்டவுட் கிடையாது
எம்ஜிஆருக்கு பிளக்ஸ் போர்டு கிடையாது
தினசரி வார மாத பத்திரிக்கைகளில் கொடுக்கின்ற கட்சி விளம்பரங்களில் எம்ஜிஆர் படம் போடுவது கிடையாது
ஜானகி ஆட்சியில் எம்ஜிஆரின் சமாதி வரைபடம் தயாரித்து வைத்திருந்தார்கள் அதன்படி கட்டவில்லை ,
தமிழ்நாடு முழுவதும் எம்ஜிஆருக்கு சிலை வைக்க அனுமதி கேட்டால் அதற்கும் கிடைக்கவில்லை,
எம்ஜிஆர் மறையும் வரை இது அண்ணாவின் அரசு என்று கூறினார்
ஜெயலலிதா மறையும்வரை இது எனது அரசு என்று கூறினார்
1980 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது
மீண்டும் எம்ஜிஆர் முதலமைச்சராக பதவி ஏற்றார்
சென்னையில் கட்சி வளர்த்த தொண்டர்கள்
அப்பொழுது நடந்த ஒரு பொதுக்கூட்டத்திற்காக எம்ஜிஆரின் உருவத்தை மிகப் பெரிய வால் போஸ்டராக அடித்து ஓடினார்கள் 
இதை காரில் போகும்போது கவனித்த எம்ஜிஆர்
அண்ணா பத்திரிகையில் ஒரு விளம்பரம் கொடுத்தார்
என்னுடைய படத்தை மிகப்பெரிய அளவில் வால் போஸ்டர் அடித்து ஒட்டிய
டி நகர் மூர்த்தியும், கு.கா செல்வம் ஆகியோர் 
இன்று முதல் அனைத்திந்திய அண்ணா திமுக வில் இருந்து விளக்க படுகிறார்கள் 
அவர்கள் இருவருடனும் கட்சித் தொண்டர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது 
இப்படிப்பட்ட அறிவிப்பை அண்ணா பத்திரிக்கையில் கொடுத்து எம்ஜிஆர் அவர்கள் இருவரையும் கட்சியை விட்டு நீக்கினார் 
ஜெயலலிதாவின் வால்போஸ்டர் ஜெயலலிதாவின் உருவத்தை மிகப் பெரிய அளவில் அச்சிடுகிறார்கள்
எம்ஜிஆரின் படத்தை ஸ்டாம்ப் சைஸ் அளவில் சிறிதாக வெளியிடுகிறார்கள்
உலகம் சுற்றும் வாலிபன் திரையிடும்போது வால் போஸ்டர் ஒட்ட விடாமல் கருணாநிதி செய்தார் என்று வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள் 
அண்ணா திமுக பொதுக் கூட்டத்திற்காக கொடுக்கின்ற விளம்பரத்தில்வால்போஸ்டரில் ஜெயலலிதா படம் மட்டும்தான் இருந்தது எம்ஜிஆர் படம் கிடையாது
இதைப் பார்த்துக் கொண்டும் அந்த எம்ஜிஆர் ரசிகர்கள் மௌனம் சாதித்தார்கள்
 எம்ஜிஆருக்கு கருணாநிதி மட்டும்தான் துரோகம் செய்யக்கூடாது
ஜெயலலிதா   செய்தாலும் தப்புஇல்லை என்றுதான் அந்த எம்ஜிஆர் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் 
இது எம்ஜிஆருக்கு செய்யப்படுகிற துரோகம் இல்லையா  எம்ஜிஆர் ரசிகர்கள் என்று சொல்லப்படுகிற வர்களுக்கு நாங்கள் அப்படி இல்லை பெத்த அப்பனே 
எம்ஜிஆரை குறை கூறினாலாலும் ஏற்காத தொண்டர்கள் இருந்த காலம் அது ஆனால் ரஜினி ரசிகர்களே முதுமையடைந்துவிட எம்ஜிஆர் ரசிகர்கள் 80 சதவீதம் பேர் தற்போது உயிருடன் இல்லை எனவே எம் ஜி யார் பலருக்கும் உரிமையாகிறார் அ தி மு க விலும் ஜெயலலிதாவுக்கு தரும் முக்கியத்துவம் எம்.ஜி.ஆருக்கு இல்லை


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...