முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலாபம் பார்க்கும் நிறுவனங்களில் பாதுகாப்பற்ற தொழில் நுட்பக்கலைஞர்கள்

      ந்தியன் 2 கிரேன் விபத்தில் உயிர் இழந்த பிரபல கார்டூனிஸ்ட் மதன் மருமகனின் நெஞ்சை உருக்கும் காட்சி  இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்  பெரும் பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரிக்க  படத்தின் படப்பிடிப்பு சென்னையில் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தபோது. படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிக்காக நாசரேத் பேட்டையில் உள்ள பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்துகொண்டிருநத  இரவு நேரம் படத்தின் சண்டைக் காட்சிக்காக லைட்டிங் செய்யும் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டிருந்தது. அப்போது படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் கொடூரமாக உயிரிழந்து போனார்கள்.  கடந்த 19 ஆம் தேதி புதன் கிழமை இரவு இந்தியன் 2 செட்டில் ஏற்பட்ட அக் கோர விபத்தில் சங்கரின் உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குநர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது என மூன்று பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்தனர். இதில் சம்பவ இடத்தில் இருவர் உயிரிழக்க, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். மருத்துவமனைக்குச் சென்ற கமல் `கிருஷ்ணாவுக்கு என்ன ஆச்சு. எனத் திரும்பத் திரும்ப கேட்டுள்ளார். கிருஷ்ணா இறந்துவிட்டார் என அருகிலிருந்தவர்கள் சொன்னதைக் கேட்டதும் அங்கேயே கதறி அழுதிருக்கிறார் கமல். இந்த விபத்தில் உயிர் இழந்த கிருஷ்ணா வேறு யாரும் இல்லை. பிரபல கார்டூனிஸ்ட், விமர்சகர், நடிகர் என்ற பன் முகத் தன்மை  கொண்ட கார்டூனிஸ்ட் மதனிந் மருமகன் கிருஷ்ணா இந்தியன் 2 படத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய கிருஷ்ணா மதன் இளையமகள் அமிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்  இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு விளம்பர படங்களையும் கார்ப்பரேட் படங்களையும் எடுத்துள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. திருமணமான 4 ஆண்டுகளில் கிருஷ்ணா உயிரிழந்து கொடுமையான ஒரு விஷயம் தான்.தொழிலாளர் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதிகள் ஒரு வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
பாதுகாப்பை உறுதி செய்யும் படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே தொழிலாளர்கள் பணியாற்றும் வகையில் ஒப்பந்தம் செய்யப்படும்.என அதன் சங்கங்கள் சார்பில்  ஆர்.கே.செல்வமணி திரைப்பட இயக்குனர் தெரிவித்தார்இலாபம் பார்க்கும் நிறுவனங்கள் நடிகர்கள் படத்தின் வெற்றிக்குப் பின் உள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் உயிர், வாழ்க்கை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது எத்தனை சங்கங்கள் இருந்தாலும் மதன் குடும்பம் போல பலியாகிப்போன கலைஞர்கள்  இழப்பு ஈடாகாது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...