முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மஹாசிவராத்திரியும் மாறிப்போன வழிபாட்டு உரிமைகளும்

    மகா சிவராத்திரி
மா‌சி மாத‌த்‌தி‌ல் தே‌ய்ப் ‌பிறையில் வரு‌ம் ‌சது‌ர்‌த்த‌சி நாள் மகா ‌சிவரா‌த்‌தி‌ரியாகும்   ஒ‌வ்வொரு மாதமு‌ம் தே‌ய்ப் ‌பிறை‌யி‌ல் வரு‌ம் ‌சது‌ர்‌த்த‌சி நா‌ள் ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்றும், அதுவே மா‌சி மாத‌த்‌தி‌ல் வரு‌ம் சது‌ர்‌த்த‌சி நா‌ள் மகா ‌சிவரா‌த்‌தி‌ரியாகவும்  அணுசரிக்கப்படுகிறது. அகோரிகள் முதல் அந்தணர் வரை சகலரும் சிவவழிபாடு செய்கின்றனர்..சிவனுக்கு காளகஷ்தியில் வேட்டை மாமிசம் படைத்த திண்ணப்பன் கண்ணப்பன் ஆனது போல பல அடியவர்கள் கதை உண்டு 
அ‌‌ன்று ‌விரத‌மிரு‌ந்து ‌சிவ ஆலயத்திற்குச் செ‌ன்று  ஈசனை வழிப்பட்டால் அவரின் முழு ஆசியைப் பெறலாம் என்று பெரியவர்கள் சொல்ல  நாம் கேள்வி பட்டிருப்போம்.
ஏன் சிவராத்திரி அணுசரிக்கப்படுகின்றது என்று அறிந்து கொள்வோம்
பிரளய காலம், பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டனர். உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின.
இந்த நிலையை சீர் செய்ய அம்பிகை சிவப்பெருமானை இடைவிடாது தியானம் செய்தார். அவரின் தியானத்தை ஏற்று  தன்னுள் ஒடுங்கி இருந்த அனைத்து உயிர்களையும் படைத்தருளினார்.அப்பொழுது உமையவள் தான் ஈசனை மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெற வேண்டும் என்றும், அதனைச் சிவராத்திரி விரதம் என்று அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று சிவப்பெருமானைக் கேட்டுக் கொள்ள அவரும் அவ்வாரே அருள் புரிந்தார் இது புராணக்கருத்து இதை இப்போது வர்த்தக ரீதியில் ஜக்கி வாசுதேவ் நடத்தி வரும் ஈசா யோகாமையம் 
கங்கா 50,000 ரூபாய், காவிரி 500 ரூபாய்
ஈஷாவில் ஈசனுடன் ஓர் இரவு எப்படி இருக்கும் வாங்கோ வாங்கோ
நிறைய கேட்டகிரி இருக்கு. “கங்கா 50,000 ரூபாய், யமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி 500 ரூபாய்!’’ என்று நதிகளின் பெயரில் பேக்கேஜ். ’50,000 ரூபாய்க்கும் 500 ரூபாய்க்கும் என்ன வித்தியாசம்?’
 ’’50,000 ரூபாய்க்கு ஆதியோகிக்கு அருகில் உட்கார்ந்து பார்க்கலாம், 
20,000 ரூபாய் கொடுத்தால் கொஞ்சம் பின்னால். 10,000 ரூபாய்க்கு அதற்கும் பின்னால். 5,000 ரூபாய் கொடுத்தால் எல்.சி.டி. ஸ்க்ரீனுக்கு முன்னால்!’’ என்று சினிமா தியேட்டர் விதவித க்ளாஸ் போல ஏற்பாடு!.
 ’’ஆதியோகி சிவராத்திரியில் தரிசிக்க வேண்டுமென்று கிளம்பி வந்துவிட்டோமே...ஃப்ரீ என்ட்ரி இல்லீங்களா?’’ என்று கேட்டோம். ’’ஓ... எஸ் இருக்கே... தடுப்புக் கட்டைகளுக்கு வெளியே அமர வேண்டும்.
சேர் கிடையாது. தரையில் அமர வேண்டும்!
சிவன் வழிபாடு என்பது நம் பகுதியில் பாரம்பரியம் கொண்ட வழிபாடு பாரிவேட்டை குலதெய்வ வழிபாடு என பல ஆன்மீக நிலை கொண்ட மக்கள் யாரும் ஈசா மையத்தை ஒரு கார்பரேட் பொழுதுபோக்கு வர்த்தகமையமாகவே பார்க்கும் நிலை வியாபாரம் ஏன்பது வந்தால் ஆன்மீகம் அங்கு ஏது...இதுவே இந்துக்கள் என அனைவரும் ஒன்று சேராதிருக்க காரணம் ஆகிறதுபாரிவேட்டை இன்னும் கிராமத்தில் நடக்கும் நிலை வனத்துறை கட்டுப்பாடு வந்தபின் சற்று மாற்றம் அதற்கு முன் நடந்த வேட்டைகள் தெய்வ வழிபாடு சார்ந்தது 
பாரி என்றால் கொட்டு முழக்கத்துடன் செய்யும் இராக்காவலைக் குறிப்பதாக உள்ளது. பாரி வேட்டையிலும் கொட்டு முழக்கத்துடன் இரவில் வேட்டைக்குச் செல்லும் பழக்கமிருக்கிறது.வனவிலங்குகளின் தொல்லைகளிலிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக இரவில் காவலிருக்கும் பண்டைய பழக்கமே பாரி வேட்டையாக நிலவுகிறது. பாரி வேட்டை தற்போது தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் பிரான் மலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாவாக நடைபெறுகிறது. மாசி மாதத்தில் சிவராத்திரிக்கு மறுநாள் பாரி வேட்டைக்குச் செல்வது வழக்கம்.
இவ்வேட்டை வினை கருப்பணசாமி, அய்யனார்சாமி போன்ற வேட்டைக்காரச் சாமிகளின் வழிபாட்டுடன் தொடர்பு டையதாகவும் இருக்கிறது.
விழா நாளன்று வேட்டைக் கொம்பினால் ஒலி எழுப்பப்படும். அப்போது வேட்டைக்குச் செல்வோரெல்லாம் ஒருங்கே கூடிவிடுவர். கலந்து கொள்பவர்கள் பூசைப் பொருட்களையும் சமையல் பொருட்களையும் உடன் கொண்டு வருவர். வேட்டைக்காரசாமியினை வழிபட்ட பின் மலைப் பகுதிக்குச் செல்வர். உடன் கம்பு, ஈட்டி, அரிவாள் போன்ற ஆயுதங்களையும் எடுத்து வருவர். வேட்டைநாயும் உடன் வருவதுண்டு. முதல் வேட்டையில் முயல் சாய்ந்ததாகக்
கொள்ளலாம். அதன் தலையினைத் திருப்பி ஒரு புல்லினை எடுத்து அதன் வாயில் வைப்பர். இப்புல்தான் முயலின் வாழ்வில் கடைசிப் புல் என்பதைச் சுட்டுவதற்காகவே இச்செய்கை மேற்கொள்ளப் படுகிறது.
முயலினை வேட்டையாடியவர் முயலின் காதளவுவைத்துக் தலையினை வெட்டிக் கொடுப்பார். இதற்கு 'தரம்' என்று பெயர். இவ்வாறே வேட்டையாடிய மற்றவற்றிலிருந்தும் தலையை மட்டும் வெட்டி எடுப்பர். முயலின் வயிற்றினைக் கிழித்து, ஈரலை மட்டும் வெளியே எடுத்துக் கம்பியில் கோர்த்துத் தீயில் வாட்டுவர். பின் அதனைப் பூசைப் பொருளாக வைத்து வேட்டைக்காரச் சாமியை வழிபடுவர். வேட்டை கிடைத்தமைக்கு நன்றி சொல்வர். இன்னும் அதிக வேட்டை கிடைக்க வேண்டும் என்று விரும்பி ஈரலைப் பிய்த்து நான்கு திசைகளிலும் நான்கு துண்டுகளை எறிந்து விடுவர்.
வேட்டையாடிய விலங்குகளின் தலைக்கறியினையெல்லாம் ஒன்று சேர்த்து, எடுத்துச் சென்ற சமையல் பொருட்களை வைத்து உணவு தயாரிப்பர். வேட்டையாடிய விலங்குகளின் உடல் கறியைக் கொண்டு வந்து கிராமத்து மக்களுக்கும் பகிர்ந்தளிப்பர். வேட்டையின் போது புலி, சிறுத்தை, கரடி போன்ற கொடிய விலங்கினைக் கொன்றிருந்தால், கிராமத்திற்கு வந்து வண்டியில் அவ்விலங்கினைத் துக்கி நிறுத்தி தாரை, தம்பட்டை முழங்க ஊரெல்லாம் சுற்றி வருவர். தங்கள் வீரத்தினைக் காட்டுவதற்காக இப்படிச் செய்கின்றனர். பழங்காலத்தில் அரசர்கள், குறுநில மன்னர்கள், ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் ஜமீன்தார்கள் பாரி வேட்டையினைத் தலைமையேற்று நடத்தினார்கள்சைவ உணவு வழக்கம் இந்தியாவில் மிக பிற்காலத்தில் தோன்றியது. வள்ளலார் மாதிரி பிற்கால ஞானியர் அதை பரவலாக்கினார்கள். ஆனால் சைவ உணவு கொள்கை தொன்மையான இந்துமதத்தின் கொள்கை அல்ல. திருமுருகாற்றுபடையில் முருகனுக்கு ஆட்டுகுருதி கலந்த அரிசிசோறு படைக்கபடுவதை காணலாம். சீதை, இராமன், இலக்குவன் அனைவரும் மாமிசம் உண்டதை வால்மிகி எழுதுகிறார். அதுவும் காட்டில் அல்ல, நாட்டில் இருக்கையிலேயே சீதை கங்கை ஆற்றுக்கு மாமிசம் படைப்பதாக வேண்டிகொள்கிறார்                    வேத நெறிப்படி யாகங்களில் உயிர்ப்பலி கொடுத்தே ஆகவேண்டும். பவுத்தத்தின் தாக்கத்தால் உயிர்ப்பலி கொடுப்பது நின்று யாகங்கள் அவற்றின் உண்மையான தன்மையை இழந்து பவுத்தமயாகின. உலகில் வேறூ எந்த மதத்திலும் இப்படி பிற மதத்தின் தாக்கத்தால் தம் கொள்கையை விட்டுகொடுக்க மாட்டார்கள். இந்து மதத்தில் இப்படி பவுத்தம், சமணத்தின் மிக தவறான உணவு வழக்கத்தை கடைபிடித்தது மட்டும் அல்லாமல், மாமிச உணவு தீண்டதகாதது, கெடுதாலனது என கூறி அவ்வுணவை உண்பவர்களை தீண்டதகாதவர்களாக மாற்றியும் தள்ளி வைத்து விட்டார்கள். இன்றும் மாமிசம் உண்பவர்களை பூசாரிகளாக ஏற்க மேட்டுகுடி இந்து கோயில்கள் முன்வரபோவது கிடையாது. மாமிசம் உண்ணும் சாமியார்களை மேட்டுகுடி இந்துக்கள் புறக்கணிப்பார்கள்.இந்த மனோபாவம் மாறவேண்டும். தாவர உணவு எந்த விதத்திலும், எந்த தொன்மையான இந்து நூலிலும் நன்னெறீயாக முன்மொழியபட்டதே கிடையாது. இன்று அதுதான் இந்து மதம் என்ற அளவுக்கு இந்து மதம் ஹைஜாக் செய்யபட்டு விட்டது


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...